எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காபூல், செப். 9- ஆப்கானிஸ்தா னில் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடந்த 17 ஆண்டுகளாக சண்டையிட்டு வரும் அமெரிக்கா, அங்கு அமைதியை மேம்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக தலீபான் பயங்கரவாதிகளை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இணங்க வைப்பதற்கான நடவடிக்கை யிலும் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டு உள்ளது.

இதற்காக கடந்த ஓராண் டாக தலீபான் நிலைகள் மீது வான்தாக்குதல்களை அதிகரிப் பதிலும், ஆப்கானிஸ்தான் படையினருக்கு பயிற்சி அளிப் பதற்காக கூடுதல் படைகளை அனுப்பி வைப்பதிலும் அமெ ரிக்கா மும்முரம் காட்டி வரு கிறது. எனினும் ஆப்கானிஸ்தா னில் இன்னும் பாதுகாப்பு மற் றும் நிலைத்தன்மையை ஏற் படுத்த அமெரிக்காவால் முடிய வில்லை.

இந்த நிலையில் ஆப்கா னிஸ்தானில் பாதுகாப்பு பணி களை கவனித்து வரும் நேட்டோ படைக்கு புதிய தளபதியாக அமெரிக்க ராணுவ தளபதி ஜோசப் டன்போர்டு சமீபத்தில் பதவியேற்றார். அவரை சந் தித்து பேசுவதற்காக அமெரிக்க ராணுவ அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் நேற்று காபூல் சென்றார். இந்த சந்திப்பின் போது தலீபான்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து இருவரும் விவாதிக் கின்றனர்.

முன்னதாக தலீபான்களுட னான பேச்சுவார்த்தை குறித்து கடந்த வாரம் நம்பிக்கை வெளி யிட்டு இருந்த அவர், ஆப்கா னிஸ்தானில் அமைதி மற்றும் மறுசீரமைப்பு பணிகள் இனி யும் கானல் நீராக இருக்காது என கூறியது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner