எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கிவ், அக். 11- உக்ரைன் நாட்டில் வட செர்னிகிவ் பகுதியில் டிருஷ்பா என்ற கிராமத்தில் ராணுவ ஆயுத கிடங்கு உள்ளது. இது 1700 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

அங்கு நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. 6ஆவது பிரிவு ஆயுத கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் அங்கிருந்த வெடி பொருட் கள் வெடித்து சிதறின. ஒரு நிமிடத்துக்கு ஒன்று வீதம் வெடி பொருட்கள் வெடித்தன.

இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. நெருப்பு பந்துகள் வானில் எழுந்தன. உடனே தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்து காரணமாக ராணுவ ஆயுத கிடங்கு உள்ள பகுதிகளில் தங்கியிருக்கும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப் பட்டனர்.

மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தோர் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் புகை மூட்டத்தில் சிக்கி 60 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

அய்க்கிய நாடுகள் சபைக்கான

அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே பதவி விலகல்

வாசிங்டன், அக். 11- 193 நாடுகள் அங்கம் வகிக்கும் அய்க்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவின் 29-ஆவது தூதராக இந்திய வம்சாவளி பெண்ணான நிக்கி ஹாலே கடந்த 2017ஆ-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

அமரிக்காவின் அதிபராக ஒபாமா பதவி வகித்த காலக்கட்டத்தில் அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தின் 116-ஆவது ஆளுநராகவும் பதவி வகித்து வந்த நிக்கி ஹாலே, அய்க்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் பதவியிலிருந்து விலகியதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அவரது விலகலுக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக முழுமையான தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் நிக்கி ஹாலேவின் பதவி விலகலை அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்றுகொண்டதாக அமெரிக்காவின் பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner