எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பேர்லின், ஜன. 6- ஜெர்மனியில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் ரகசிய தகவல்கள், இணையதளம் மூலம் ஊடுருவி திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அந்த நாட்டு அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் மெர்க்கெல் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் வீட்டு முகவரி, தனிப்பட்ட செல்லிடப் பேசி எண்கள், கடிதங்கள், பொருள்கள் மற்றும் சேவைகளை வாங் கியதற்கான விவரங்கள், அடையாள சான்று ஆவணங்கள் போன்றவற்றை சில நபர்கள் இணையதளம் மூலம் ஊடுருவி திருடியதாகத் தெரிவித்துள்ளது. மேலும், அந்தத் தகவல்கள் சமூக ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்டதாகவும் அரசு கூறியுள்ளது.

நேபாளம்: பெற்றோர்களுக்கு பணம் அனுப்புவது கட்டாயமாகிறது!

காட்மாண்ட், ஜன. 6- பிள்ளைகள் தங்கள் வருமானத்தில் 5 முதல் 10 சதவீதம் வரை பெற்றோர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவதை கட்டாயமாக்கும் சட்டத்தை இயற்ற நேபாள அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வயது முதிர்ந்த பெற்றோர்களின் பொருளாதார பாதுகாப்புக்கு வழி செய்யும் நோக்கில், கடந்த 2006-ஆம் ஆண்டின் மூத்த குடிமக்கள் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அதன்படி, பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் வங்கிக் கணக்குகளில் தங்களுடைய வருவாயின் 5 முதல் 10 சதவீதம் வரையிலான பகுதியை கட்டாயமாகச் செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner