எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், ஜன.10 அமெரிக்காவில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் களை முடிவுக்குக் கொண்டு வர, மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஜனநாயகக் கட்சியினர் அனுமதிக்க வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் பிரச்சினை காரணமாக, முக்கிய அரசுத் துறைகள் கடந்த மாதம் 22-ஆம் தேதியிலிருந்து முடக்கப்பட்டுள்ள நிலையில், தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

இதுகுறித்து டிரம்ப் கூறியதாவது:

அரசுத் துறைகள் முடக்கப்பட்டுள்ளதால் அமெரிக்காவில் தற்போது மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

துறைகள் முடக்கம் காரணமாக லட்சக்கணக்கானோர் வருவாய் இன்றி தவித்து வருகின்றனர். எனவே, இந்த நிலைக்கு முடிவு கட்ட வேண்டியது அவசியம் ஆகும். அதற்காக, மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற் கான நிதி ஒதுக்கீட்டை எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அனுமதிக்க வேண்டும்.

எல்லைச் சுவர் எழுப்புவது, சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழை பவர்களைத் தடுப்பதற்காக மட்டுமே தவிர, குடியேற்றவாசிகளை முழுமையாக தடுத்து நிறுத்துவதற்காக அல்ல.

சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் குடியேறுபவர்களை அமெரிக்கா பெரு மையுடன் வரவேற்கிறது. ஆனால், சட்டத்துக்குப் புறம்பாக நாட்டுக்குள் நுழைபவர்களால் அமெரிக்கர்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

அவர்களது வேலைவாய்ப்பு பறிக்கப் படுகிறது; வள ஆதாரங்கள் பறிக்கப்படு கின்றன. இதனால் அதிகம் பாதிக்கப் படுவது ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் போன்றவர்கள்தான்.

இந்திய வம்சாவளி காவலர் படு கொலை: சட்டத்தை மீறி மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்த வரால் தான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ரணில் ராண் சிங் படுகொலை செய்யப்பட்டார்.

அந்த வகையில், சட்டவிரோத குடியேற்றவாசிகளால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த நிலையை முடிவுக்குக் கொண்டு வரவும் எல்லையில் தடுப்பு வேலி அமைப்பதற்கு ஜனநாயகக் கட்சியினர் ஆதரவு தர வேண்டும் என்றார் டிரம்ப்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner