எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வட கொரியா மீது அய்.நா. நிபுணர் குழு குற்றச்சாட்டு

வாசிங்டன், பிப். 10- அமெரிக்கா வின் தாக்குதலில் இருந்து பாது காக்க, வட கொரியா தனது ஏவுகணைகளை விமான நிலையங்களில் பதுக்கி வைத் துள்ள தாக அய்.நா. நிபுணர் குழு குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து அய்.நா. பாது காப்புக் கவுன்சிலிடம்  அந்தக் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை ல் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

வட கொரியாவின் அணு ஆயுத ஏவுகணைத் திட்டத் தைத் தடுப்பதற்காக அந்த நாடு மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் உரிய பலனை அளிக்கவில்லை.

பொருளாதாரத் தடை களை மீறி சட்டவிரோதமாக அந்த நாட்டுக்கு பெட்ரோலியப் பொருள்கள் அனுப்பப்படு கின்றன. அதேபோல், தடை செய் யப்பட்ட தனது நிலக்கரியை யும் வட கொரியா பிற நாடு களுக்கு விற்பனை செய்து வருகிறது.

அந்த நாட்டின் அணு ஆயுத ஏவுகணைத் தயாரிப்புத் திட்டம் தங்கு தடையின்றி தொடர்ந்து நடைபெற்று வரு கிறது.

ஏவுகணைகளை ரகசியமா கத் தயாரிக்கவும், சோதிக்கவும் விமான நிலையம் போன்ற பொது இடங்களை வடகொரியா பயன்படுத்துகிறது.

ஏவுகணைத் தயாரிப்புத் திட்டத்தைக் குலைப்பதற்காக அமெரிக்கா தாக்குதல் நடத் துவதைத் தடுக்கும் வகையில், தனது ஏவுகணைகளை விமான நிலையங்களில்  வட கொரியா பதுக்கி வைக்கிறது.

சட்டவிரோதமாக எண் ணெய் இறக்குமதி செய்வதற் கும், நிலக்கரி ஏற்றுமதி செய் வதற்கும் கூட விமான நிலை யங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வட கொரியாவுக்கு எதி ரான ஆயுத ஏற்றுமதித் தடை யும் மீறப்படுகிறது. அந்தத் தடையை மீறி சிரியா, லிபியா, சூடான் ஆகிய நாடு களுக்கும், யேமனில் கிளர்ச்சி யாளர்களுக்கும் இலகு ரக ஆயுதங்களை வட கொரியா ஏற்றுமதி செய்து வருகிறது.

அதுமட்டுமன்றி, வட கொரியாவுக்கு எதிரான நிதிக் கட்டுப்பாடுகளும் மீறப்பட்டு வருகின்றன. அய்.நா. தடை களை மீறி 5 நாடுகளில் வட கொரிய நிதி அமைப்புகள் இயங்கி வருகின்றன. பல் வேறு நாடுகளில் தங்களது தூதரக அதிகாரிகள் மூலம் ஏராளமான வங்கிக் கணக்கு களைத் தொடங்கி வட கொரியா நிதிக் கட்டுப் பாடுகளை மீறி வருகிறது என்று அந்த அறிக் கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வட கொரியா தனது ஏவு கணைத் திட்டத்தைக் கைவிட வில்லை என்று அண்மையில் அமெரிக்க உளவுத் துறை கூறியிருந்த நிலையில், அய்.நா. நிபுணர் குழுவும் அதே கருத் தைத் தெரிவித்துள்ளது குறிப் பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner