எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெய்ஜிங், மார்ச் 13  ஜெய்சு-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கர வாதியாக அறிவிக்கும் விவகாரத்தில், பேச்சுவார்த்தைகளின் மூலமே ஆக்கப் பூர்வமான தீர்வை எட்ட முடியும் என்று சீனா தெரிவித்தது.

மசூத் அசாரை பன்னாட்டு பயங் கரவாதியாக அறிவிக்க கோரும் தீர்மா னத்தை, அய்.நா. பாதுகாப்பு கவுன்சில் புதன்கிழமை (மார்ச் 13) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவிருப்பதாக தகவல் கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழலில், மேற்கண்ட கருத் தை சீனா தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வா மாவில் கடந்த மாதம் 14-ஆம் தேதி தற்கொலைப் படை பயங்கரவாதி நிகழ்த்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் படையினர் 40 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு, பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்சுஏ-முகமது அமைப்பு பொறுப்பேற்றது.

இதையடுத்து, அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வலியு றுத்தி, அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு ஆகிய நாடுகள் அண்மையில் தீர்மானம் கொண்டு வந்தன.

இந்த தீர்மானத்துக்கு, சீனா உள்பட அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அனைத்து உறுப்பு நாடுகளும் ஆதர வளிக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரு கிறது.

மசூத் அசாரை பன்னாட்டு பயங்கர வாதியாக அறிவிக்க அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஏற்கெனவே மூன்று முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், சீனாவின் முட்டுக்கட்டை யால், அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீதான நிலைப்பாட்டை சீனா இன்னும் அறிவிக்கவில்லை.

இதுதொடர்பாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர் பாளர் லு காங்கிடம், செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அவர் அளித்த பதில் வருமாறு:

மசூத் அசாருக்கு எதிரான தீர்மானத்தின் மீது உறுதியான, தெளிவான நிலைப்பாட்டை சீனா கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் பொறுப்புமிக்க அணுகுமுறையை சீனா கடைப்பிடிக்கும்.

அய்.நா. தடை விதிப்பு குழுவால் ஏற்கெனவே வகுக்கப்பட்ட நடை முறைகள், விதிகளை பின்பற்றி செய லாற்றுவோம். இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளின் மூலமே ஆக்கப் பூர்வமான தீர்வை எட்ட முடியும் என்றார் லூ காங்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner