எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மொரோனி, மார்ச் 28- இந்திய பெருங் கடலில், ஆப்பிரிக்காவின் கிழக்கு கரை யில் வடக்கு மடகாஸ்கருக்கும், வட கிழக்கு  மொசாம்பிக்கிற்கும் இடை யில் உள்ள தீவு நாடு கோமரோஸ். இந்த நாட்டின் அதிபரான அஜாலி அசோ மணி, கடந்த ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தில் திடீரென ஒரு மாற்றம் கொண்டு வந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது அதிபரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப் பட்டது. அஜாலி அசோமணியின் பத விக்காலம் முடிவதற்கு முன்பாகவே முன்கூட்டியே, அதாவது 2019 மார்ச் மாதம் தேர்தல் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

2019இல் நடக்கும் தேர்தலில் வெற்றி பெற்று 2029ஆம் ஆண்டு வரை பதவி யில் நீடிக்கும் வகையில் அஜாரி, சட் டத்தை மாற்றியிருப்பதாக எதிர்க்கட்சி கள் கடுமையாக விமர்சித்தனர். நாடு முழுவதும் தீவிர போராட்டத்தில் ஈடு பட்டனர். இந்த போராட்டங்களுக்கு மத்தியில் தேர்தல் பணிகள் நடை பெற்றன.

அதிபர் பதவிக்கு அஜாலி மீண்டும் போட்டியிட்டார். இந்த தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என எதிர்க் கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டன. இதன் காரணமாக பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது சோலேவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் 6 பேர் தேர் தல் பணிகளில் ஈடுபட தடை விதிக்கப் பட்டது.

வன்முறை போராட்டங்கள், வேட் பாளர்கள் மீது தாக்குதல், எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கைது போன்ற பரபரப் பான சூழ்நிலைக்கு மத்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அஜாலி அசோ மணி 60.77 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மகமூது அகமதா 14.62 சதவீத வாக்குகள் பெற்று இரண் டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இதர 11 வேட்பாளர்களும் மிகவும் குறைந்த அளவிலான வாக்குகளே பெற்றனர்.

இந்த தேர்தல் முடிவினை எதிர்க் கட்சிகள் ஏற்கவில்லை. மறுதேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner