எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மேரிலாண்ட், மார்ச் 30 உலகில் முதன்முறையாக அமெரிக்க மருத்துவர்கள் எச்.அய்.வியால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியிடம் இருந்து சிறுநீரகத்தை கொடையாக பெற்று இன்னொருவருக்குப் பொருத்தியுள்ளனர்.

2017ஆ-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி உலகம் முழுவதும் 3.7 கோடி மக்கள் எச்.அய்.வி/எய்ட்ஸ் நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். உலகளவில் பொது சுகாதாரத்தில் மிகவும் சவாலாக இருக்கும் நோய்களில் எச்.அய். வியும் ஒன்று என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

இந்நிலையில், அமெரிக்காவில் மேரி லாண்டில் பல்டிமோர் நகரத்தில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் எச்.அய்.வி. யால் தொற்று உள்ள நோயாளியிடம் இருந்து சிறு நீரகத்தை எடுத்து, மற்றொருவருக்குப் பொறுத்தும் அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது இரு நோயாளிகளும் நன்றாக இருக்கிறார்கள்.

“எச்.அய்.வியோடு வாழும் ஒருவர் சிறுநீரகம் கொடை செய்ய அனுமதிக்கப்பட்டது உலகிலேயே இது தான் முதல்முறை’’ என்கிறார் மருத்துவர் டாரி செஜெவ்.

எச்.அய்.வி. பாதிப்புள்ளவர்களுக்கு சிறுநீரக நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என முன்னதாக கருதப்பட்டு வந்தது. ஆனால் தற்போது புதிய வகை ஆன்டி- ரெட்ரோ வைரல் மருந்துகள் மூலமாக இந்நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியும். இவை சிறுநீரகத்துக்கு நல்லதாக பார்க்கப்படுகிறது.

ஜான்ஸ் காப்கின்சில் மருந்தியல் மற்றும் புற்றுநோயியல் துறை இணை பேராசிரியர் கிறிஸ்டின் துரந்து ‘’இந்த அறுவை சிகிச்சை மக்களுக்கு எச்.அய்.வி குறித்த பார்வைகளை மாற்றும். மேலும் மருத்துவ உலகில் ஏற் பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படும்‘’என்றார் .

நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு பின்னர் நன்றாக இருக்கிறார்கள். தற்போது நீண்ட கால அடிப்படையில் இதன் விளைவுகளைப் பார்க்கவேண்டும் என்கிறார் கிறிஸ்டின்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner