எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜன. 1- அண்ணல் அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு வெளியேறி புத்த மதம் தழுவியதன் 60-ஆம் ஆண்டு நிறைவையொட்டி, இந்து மத ஒழிப்பு குறித்த அண்ணல் அம் பேத்கர் கட்டுரைகளின் தொகுப் பாக “நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்” நூல் வெளியிடப் பட்டது.

16.12.2016 அன்று சென்னை பெரியார் திடலில் பெரியார் களம் சார்பில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு திராவிடர் கழகத் தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தலைமையேற்று நூலை வெளியிட்டு உரையாற்றினார்.

நூலைப் பெற்றுக் கொண்டு அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் இயக்கத்தின் தலைவர் மருத்து வர் ஜெயராமன், எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர். பெரியார் களத் தின் தலைவர் இறைவி வர வேற்புரையாற்றினார்.

அறிமுகவுரை ஆற்றிய நூலின் பதிப்பாளர் தலித் முரசு புனித பாண்டியன், அம்பேத் கரை இந்துத்துவம் வளைத்துக் கொள்ளப் பார்க்கும் சூழலில் இந்த நூல் மிகவும் முக்கியத் துவம் பெறுவதை எடுத்துரைத் தார். நூலை மொழிபெயர்த்த மருத்துவர் தாயப்பன் அழகிரி சாமி, அம்பேத்கரின் சிந்தனைக ளும், தந்தை பெரியாரின் சிந்த னைகளும் ஜாதி ஒழிப்பில் எப் படி இணைந்து பயணிக்கின்றன என்பதை சான்றுகளுடன் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியை ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தொகுத்து வழங்கினார். வை. கலையரசன் நன்றி கூறினார்.

வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சு.குமார தேவன், எழுத்தாளர் ஜெய ராணி, காரைக்குடி மாவட்ட செயலாளர் தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner