எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிடர் மகளிர் எழுச்சி மாநாடு  வெற்றிக்கு உழைத்தவர்களுக்கு பாராட்டு மஞ்சக்குடியில் தந்தை பெரியார் சிலை அமைக்க குழு அமைப்பு

மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கி தெருமுனைக் கூட்டங்கள் நடத்திட முடிவு

திருவாரூர், ஜன. 1-- 26.12.2016 அன்று மாலை 5.30 மணியளவில் திருவாரூர் மாவட்டக் கழக அலுவலகம் தமிழர் தலைவர் அரங்கத்தில் 17.12.2016 அன்று திருவாரூரில் எழுச்சியோடு நடைபெற்ற திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டை வெற்றி மாநாடாக நடத்திய திருவாரூர், தஞ்சை மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கு பாராட்டுக் கூட்டம், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர் கள் தலைமையில், கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

கோ.செந்தமிழ்ச் செல்வி உரை

மாநில திராவிடர் மகளிர் பாசறை செயலாளர் கோ.செந்தமிழ்செல்வி அனைவரையும் வரவேற்று மாநாட்டுப் பணிகளுக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் மாநாட்டு வெற்றிக்கு நமது அனைத்து தோழர்களின் கூட்டு முயற்சியும் உழைப்புமே காரணம் என்றும், நான் இந்த அளவிற்கு செயல்பட எனக்குப் பின்புலமாக உள்ள எனது வாழ்விணையர் சிவக்குமார் எனது குடும்பமான பொதுச் செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட  கொள்கை குடும்பமே எனவும் உங்கள் குடும்பத்தில் ஒருவராகிய என்மீது நம்பிக்கை வைத்து நமது தலைவர் என்னை மாநில திராவிடர் மகளிர் பாசறை செயலாளராக அறிவித்துள்ளார்கள். உங்களின் ஒத்துழைப்போடு அந்த நம்பிக்கையை நிறைவேற்று வேன் என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

இரா.ஜெயக்குமார் உரை

தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமார் அவர்கள் உரையில்: இந்த மாநாடு வெற்றிக்குக் காரணம் ஒரு மாத காலமாக திட்டமிடல், அனைத்து பொறுப்பாளர்களின் கூட்டு முயற்சியே காரணம், மகளிர் பங்களிப்பு, உழைப்பு மிக முக்கியம், ஒத்துழைப்பு நல்கிய அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்தும் வரலாற்றில் முத்திரை பதித்த திரு வாரூர் திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டில் திரண்ட மகளிர் கூட்டத்தை பார்த்து நமது தலைவர் புது உற்சாகத்துடன் சென்றார். அந்த மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு இல்லாமல் போனதால் உங்களை நேரில் வந்து பாராட்ட வேண்டும் என நமது பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் வருகை தந்தது சிறப்புக்குரியது என தனது உரையில் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, திருத்துறைப்பூண்டி மாவட்டச் செயலா ளர் ச.பொன்முடி, மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ், தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருண கிரி, திருத்துறைப்பூண்டி மாவட்டத் தலைவர் கி.முருகையன், மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் எஸ். எம்.ஜெகதீசன், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், கும்பகோணம் மாவட்டத் தலைவர் வை.இளங்கோவன், நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், திருவாரூர் மாவட்ட மகளிரணி தலைவர் மகேஸ்வரி, மாவட்ட மகளிரணி செயலாளர் சரசு, பொதுக் குழு உறுப்பினர் கமலம், திருத்துறைப்பூண்டி மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கலைவாணி, நாகை மாவட்ட மகளிரணி தலைவர் பேபி, திருவாரூர் ஒன்றிய மகளிரணி தலைவர் அமைப்பு செயலாளர் அன்னதானம், கிடாரங் கொண்டான் மரகதம், மாவட்ட இணைச் செயலாளர் வீர.கோவிந்தராசு, மாவட்ட கிளைச் செயலாளர் வீரையன், மாவட்ட அமைப்பாளர் தங்க.கலியபெருமாள், நாகை மாவட்ட துணைச் செயலாளர் பாவா.ஜெயக்குமார், பெல்.வரதராசன், நாகை மாவட்ட இணைச் செயலாளர் இராமலிங்கம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரெத்தினசாமி, பெரியார் பெருந்தொண்டர் கோவிந்தசாமி, முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்டச் செயலாளர் சத்தியசீலன், நாகை மாவட்ட தொழிலாளரணி அமைப் பாளர் முத்துராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் இராசமணிகண்டன், மாவட்ட ப.க. தலைவர் கரிகாலன், மாவட்ட ப.க. செயலாளர் இரா.சிவக்குமார், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் ஆறுமுகம், குடவாசல் ஒன்றிய ப.க. செயலாளர் அசோக்ராஜ், நகரச் செயலாளர் காமராஜ், நகரத் தலைவர் மனோகரன், பெரியார் பிஞ்சு இனியன், திருவாரூர் மாவட்டத் தலைவர் எஸ்.வி.சுரேஷ், மண்டலச் செயலாளர் க.முனி யாண்டி, மண்டலத் தலைவர் இரா.கோபால் ஆகியோர் மாநாட்டு சிறப்புகளை பற்றி தனது கருத்துகளை தெரிவித்தனர்.

நிகழ்வில் திருத்துறைப்பூண்டி மாவட்டம் செல்வம், நாகராசு, மயிலாடுதுறை மாவட்ட அமைப்பாளர் சாமி நாதன், பொன்.ராமய்யா, திருத்துறைப்பூண்டி ஒன்றியத் தலைவர் சித்தார்த்தன், நெய்குப்பை பாண்டியன், குடவாசல் ஒன்றியத் தலைவர் சி.அம்பேத்கர், செயலாளர் மகாலிங்கம், மாணவரணி தீனதயாளன், அஞ்சம்மாள் அகமது உள்ளிட்ட ஏராளமான மகளிரணி தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அ.கலைச்செல்வி உரை

மாநில மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி அவர்கள், மகளிரணி செயல்பாடு குறித்து தமிழர் தலை வர் அவாகள் வருத்தமாக தெரிவித்தார்கள். அதை போக் கக் கூடிய மாநாடாக திருவாரூர் மாநாடு அமைந்துள்ளது என்று கூறி மாநாட்டின் வெற்றிக்கு உழைத்திட்ட அனை வரையும் பாராட்டினார். தோழர் செந்தமிழ் செல்வி அவர்களோடு இணைந்து மகளிரணி, மகளிர் பாசறை அமைப்பை வலுப்படுத்த  வழிவகுப்போம் என உரையாற்றினார்.

இல.மேகநாதன் உரை

மாவட்ட ப.க. தலைவரும், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் இல.மேகநாதன் அவர்கள் மாநாடு நடைபெற்ற டிசம்பர் 17 அன்று நான் காலை முதல் திருவாரூரில் இருந்தேன். காலை முதல் இரவு வரை நிகழ்வுகளை கண்ணுற்று இருந்தேன். திருவாரூரே கிடுகிடுக்கும் வகையில் பேரணி, மாநாடு, பேரணியில் பெண்கள் பறை, கோலாட்டம் மேடையில் பெரியார் பிஞ்சுகளின் கோலாட்டம். அருள்மொழி தலைமையில் கருத்தரங்கம், ஆசிரியர் அய்யா அவர்களின் உரை அனைத்தும் முத்தாய்ப்பானவை. எல்லாவற்றுக்கும் மேலாக தெற்கு வீதியில் கூடிய கூட்டம்.

இதைப் பார்த்து மாநாடு முடிந்தவுடன் அனைவரை யும் வழியனுப்பி வைத்து விட்டு தோழர் சிவக்குமார் அவர்களிடம் குழந்தைகள் பாடிய பாட்டு, பேரணி முழக்கங்களை கேட்டேன் விடுதலை எழுத வேண்டும் என்று, நான் என்ன என்ன எழுத வேண்டும் என்று நினைத்தேனோ அதை கவிஞர், ஆசிரியர், முனியாண்டி அனைவரும் விடுதலையில் எழுதிவிட்டார்கள். இந்த மாநாட்டு வெற்றி மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தமிழர் தலைவர் இடும் கட்டளைக்கு செயலாக்கம் கொடுக்க ஓய்வில்லாது உழைக்கும் நமது கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், தோழர் செந்தமிழ்ச்செல்வி மற்றும் அனைவரின் உழைப்பு அபரிதமானது.

அடுத்து இதைவிட பெரிய நிகழ்வாக நாகையில் நடத்திக் காட்டிட வேண்டும். அது, கோட்டைவாசல் பெரியார் சிலை சீரமைப்பா, பகுத்தறிவாளர் கழக மாநாடா நமது பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் எதை சொல்கிறார்களோ அவற்றை நிறைவேற்றுவேன் என எழுச்சி பொங்க தனது உரையில் எடுத்துரைத்தார்.

பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் உரை

கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் நிகழ்வுக்கு தலைமையேற்று பாராட்டுரையாற்றினார். அவர் தனது உரையில்: இந்த மாநாட்டு வெற்றிக்கு யாரைப் பாராட்டுவது எதைப் பேசுவது என தெரியாமல் உள்ளேன். மாநாட்டிற்காக ஒரு மாத காலமாக திட்ட மிடல், கலந்துரையாடல், சுவர் எழுத்து விளம்பரம் வசூல் நோட்டீஸ், எழிலான அழைப்பிதழ், மாநாட்டுப் பேரணி, மேடை, கருத்தரங்கம் எல்லாவற்றுக்கும் மேலாக நமது தலைவரை மகிழ்விக்கக் கூடிய மாநாட்டில் கூடிய மகளிர் பெருந்திரள் கூட்டம், காலையில் மகளிரே முன்னின்று ரயில் நிலையத்தில் ஆசிரியரை வரவேற்றது. மாநாட்டை ஒட்டி திருவாரூர் நகர் முழுவதும் கழகக் கொடிகள், பதாகைகள் இவ்வாறு பெரிய வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் பாராட்டு. அனைவரும் சொன்னதுபோல் கூட்டு முயற்சியே.

மகளிரே ஒருங்கிணைக்க, மகளிர் குழுவோடு ஒவ் வொரு வீடாக அழைப்பிதழை தங்கள் இல்ல நிகழ் வுக்குக் கொடுப்பது போல், கொண்டு சேர்த்து வெற்றிக்கு வித்திட்ட தோழர் செந்தமிழ்செல்வி, சிவக்குமார், மாவட்டத் தலைவர், மாவட்டச் செயலாளர், மண்டலத் தலைவர், மண்டல செயலாளர், விவசாய அணி செயலா ளர், மகளிரணி பொறுப்பாளர்கள் இவர்களை ஒருங் கிணைத்த பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் உள் ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். இங்கே பேசிய மகளிரணி தோழர்கள் கடை வீதி வசூல் பணியின் அனுபவங்களைப் பேசினார்கள். இதையெல்லாம் பார்க் கும்பொழுது ஒரு விதமான குற்ற உணர்வோடு நான் இங்கே நிற்கிறேன். ஏற்கெனவே தஞ்சை மாவட்டச் செயலாளர் அண்ணன் அருணகிரி அவர்கள் பேசும் பொழுது, இந்த மாநாட்டை பார்க்காதவர்கள் வாழ்க்கை யில் முக்கியமானதை இழந்தவர்கள் என குறிப்பிட்டார். நான் நேரில் பார்க்க முடியவில்லையே என வருத்தப்பட் டேன், அவற்றைப் போக்க வேண்டும் என்று எண்ணியே உழைத்தவர்களுக்குப் பாராட்டு தெரிவித்து அவர்களின் அனுபவங்களை நேரில் கேட்க வேண்டும் என வந்தேன்.

ஆசிரியர் அவர்களும் தாமதிக்காமல் சென்று வா என கட்டளையிட்டார்கள். ‘மாநாட்டு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டங்களை’ ஜனவரி முதல் நடத்திடுவோம்.

வறட்சி, மோடியின் மோசடி அறிவிப்பு, இத்தனை பாதிப்புகள் இருந்தும் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய அனைவருக்கும் பாராட்டுகள் என தனது உரை யில் குறிப்பிட்டார்கள்.

அன்னை மணியம்மையார் பிறந்த நாளில், மார்ச் 10 அன்று போராட்டம் நோக்கி மார்ச் செய்வோம் என்றார். வெற்றிக்கு உழைத்திட்ட அனைவருக்கும் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்கள்.

இறுதியாக மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். தொடக்கத்தில் மாநாட்டைப் பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய அறிக் கையை திருத்துறைப்பூண்டி நகரத் தலைவர் தி.குண சேகரன் வாசித்தார். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்பு ராஜ் அவர்களுக்கு அனைத்து அணிகளின் சார்பில் பயனாடை அணிவிக்கப்பட்டது. அனைவருக்கும் பிரி யாணி உணவு வழங்கப்பட்டது.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

திருவாரூர், தஞ்சாவூர் மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 26.12.2016 அன்று திருவாரூர் கழக அலுவலகத்தில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் தலைமையில் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவரின் முன்னிலையில் நடைபெற்றது.

இரங்கல் தீர்மானம் - 1:

திருவாரூர் ஒன்றிய சோழங்கநல்லூர் ரோஸ்மேரி, இலவங்கார்குடி கே.மணி, எம்.வடிவேல் ஆகியோர் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் - 2:

திருவாரூரில் திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டை நடத்துவதற்கு ஒப்புதல் தந்து, வருகை தந்து மாநாட்டில் கலந்துகொண்டு எங்களுக்கு உற்சாகத்தைத் தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் - 3:

இயக்க வரலாற்றில் முத்திரை பதித்த திருவாரூரில் (17.12.2016 நடைபெற்ற திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்துவதற்குப் பாடுபட்ட கழக பொறுப்பாளர்களுக்கும், மகளிரணி தோழர்களுக் கும், நிதிவசூல், கடைவீதி வசூல், விளம்பரம் மற்றும் அனைத்து பணிகளிலும் உழைப்பை நல்கிய இருபால் தோழர்களுக்கும், நன்கொடை அளித்து உதவிய பெரு வுள்ளங்களுக்கும், நிதி உதவி உட்பட ஒத்துழைப்பு வழங்கிய திருவாரூர், தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்ப கோணம், திருத்துறைப்பூண்டி, மயிலாடுதுறை, நாகை மாவட்ட கழகப் பொறுப்பாளர்களுக்கும், தோழர்களுக் கும் மாநாட்டில் பங்கேற்ற நிகழ்ச்சியாளர்களுக்கும் தலைமைக் கழக பொறுப்பாளர்களுக்கும், எல்லாவற் றுக்கும் மேலாக, மாநாட்டிலும், பேரணியிலும் பெருந் திரளாகப் பங்கேற்று திருவாரூரை கருங்கடலாக்கிய இரு பால் தோழர்களுக்கும் இக்கூட்டம் பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் - 4:

17.12.2016 அன்று திருவாரூரில் நடைபெற்ற திராவிடர் மகளிர் எழுச்சி மாநாடு வரவு--செலவு கணக்கு சரிபார்க் கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தீர்மானம் -5:

டிசம்பர் 17 திருவாரூரில் நடைபெற்ற திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டில் தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை வழிமொழிவதுடன் உடனடியாக செயல்படுத்திடுமாறு மத்திய, மாநில அரசுகளை இக் கலந்துரையாடல் கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 6:

திருவாரூர் திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டின் முத்தாய்ப்புத் தீர்மானமான மனுதர்மத்தில் பெண்களை இழிவுப்படுத்தும் பகுதியை, அன்னை மணியம்மையார் பிறந்த நாளான மார்ச் 10 அன்று தமிழகம் முழுவதும் மகளிரே முன்னின்று கொளுத்துவார்கள் என்ற தீர்மானத் தையும், மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கி சனவரி முதல் திருவாருர் தஞ்சை மண்டலத்தில் அனைத்து பகுதிகளிலும் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

புதிய பொறுப்பாளர்கள்

திருவாரூர் மண்டல மகளிரணி செயலாளர்: இரா.மகேஸ்வரி

திருவாரூர் மாவட்ட மகளிரணி தலைவர்: சீ.சரசு (சோழங்கநல்லூர்), திருவாரூர் மாவட்ட மகளிரணி செயலாளர்: மரகதம் (கிடாரங்கொண்டான்), திருவாரூர் மாவட்ட மகளிரணி அமைப்பாளர்: ஜெ.மண்டோதரி (குடவாசல்).

திருத்துறைப்பூண்டி திராவிடர் மகளிர் பாசறை அமைப்பாளர்: சுகிதா பெரியார் செல்வன் (விளக்குடி).

திருத்துறைப்பூண்டி தி.க. மாவட்ட அமைப்பாளர்: என்.செல்வன்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் மஞ்சக்குடியில் தந்தை பெரியார் சிலை அமைப்பது என ஒரு மனதாக முடிவு செய்யப்படுகிறது 2017 பிப்ரவரி மாதத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அழைத்து திறப்பு விழா நடத்துவது என முடிவு செய்யப் படுகிறது. கீழ்கண்ட பெரியார் சிலை அமைப்புக்குழு அமைக்கப்படுகிறது.

குடவாசல் ஒன்றியம் மஞ்சக்குடி தந்தை பெரியார் சிலை அமைப்புக்குழு

ஒருங்கிணைப்பாளர்கள்: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர்கழகம்), வீ.மோகன், (மாநில திராவிடர் விவசாய தொழிலாளரணி செயலாளர்), கோ.செந்தமிழ்செல்வி  (மாநில திராவிடர் மகளிர் பாசறை செயலாளர்), இரா.கோபால்  (திருவாரூர் மண்டலத் தலைவர்) க.முனியாண்டி (திருவாரூர் மண்டலச் செயலாளர்), எஸ்.வி.சுரேஷ் (திருவாரூர் மாவட்டத் தலைவர்) சு.கிருஷ்ணமூர்த்தி (திருவாரூர் மாவட்டச் செயலாளர்), எஸ்.எஸ்.எம்.கே.அருண் கார்த்தி (மாவட் டத் துணைத் தலைவர்), ப.ரெத்தினசாமி (திருவாரூர் மாவட்ட விவசாய தொழிலாளரணி செயலாளர்), கரிகாலன் (திருவாரூர் மாவட்ட ப.க. தலைவர்), இரா.சிவக்குமார்  (திருவாரூர் மாவட்ட ப.க. செயலாளர்), தங்க.கலியபெருமாள் (மாவட்ட அமைப்பாளர்).

சிலை அமைப்புக்குழு தலைவர்: க.கணபதி (முன் னாள் விவசாய தொழிலாளரணி செயலாளர்), செயலாளர் : வசந்தா கல்யாணி (பொதுக்குழு உறுப்பினர்).

பொருளாளர் : வீர.கோவிந்தராசு  (மாவட்ட இணைச் செயலாளர்)

துணைத் தலைவர்கள் : சிவானந்தம் (பெரியார் பெருந்தொண்டர், மஞ்சக்குடி), வீரையன் (மாவட்ட துணைச் செயலாளர்), ஜெயராமன் (மஞ்சக்குடி)

துணைச் செயலாளர்கள் : சி.அம்பேத்கர் (ஒன்றியத் தலைவர்), அ.மகாலிங்கம் (ஒன்றியச் செயலாளர்), க. அசோக்ராஜ் (ஒன்றியச் ப.க செயலாளர்).

உறுப்பினர்கள் : கணேசன் (நெய்குப்பை) பதி.பாண்டியன் (நெய்குப்பை, ஒன்றிய இளைஞரணி தலை வர்) க.இராவணன் (மஞ்சக்குடி) செல்வம் (மு.ஒன்றியச் செயலாளர்), இரா.ராஜேந்திரன் (ஒன்றிய ப.க தலைவர்), ஓம்.சிவக்குமார் (ஒன்றிய ப.க அமைப்பாளர்).

கிராம தலைவர்கள்: மஞ்சக்குடி வீராச்சாமி, அண்ண வாசல் சேப்பெருமாள், கீழப்பாலையூர் கலியமூர்த்தி, விழிதியூர் மணி, திருவிடச்சேரி தங்கவேல், புதுக்குடி சீனிவாசன், சேங்காலிபுரம் ரெத்தினம், அபிஷேகபுரம் பாலகிருஷ்ணன், வில்லியநல்லூர் மணிசேகரன், இர வாஞ்சேரி ரஜா, குடவாசல் இரா.வீரமணி, பெருமங்கலம் முத்து, கீழ்ப்பனையூர் பாக்கியராஜ், வடுகக்குடி முரு கையன், வடுகக்குடி பழனிச்சாமி, கடலங்குடி வாசு தேவன், திருவிடச்சேரி ராஜா.


மாநாட்டில் திராவிடர் மகளிர் பாசறை மாநில செயலா ளராக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் அறிவிக்கப் பட்ட கோ.செந்தமிழ்செல்வி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் பயனாடை அணிவித்துப் பாராட்டினார்.

மயிலாடுதுறை மாவட்ட கழகத்தின் சார்பில் பொதுமக்களிடம் பெற்ற ரூ.30,000 (முப்பதாயிரம்) ரூபாய் நன் கொடையில் வாங்கப்பெற்ற ‘ஆடியோ சிஸ்டத்தினை’ மயிலாடுதுறை பெரியார் படிப்பகத்தின் பயன்பாட்டிற்காக கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.ஜெகதீசன், மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் ஆகியோரிடம் வழங்கினார். உடன் மாவட்ட அமைப்பாளர் நா.சாமிநாதன், பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், திருவாரூர் மாவட்டத் தலைவர் சுரேஷ், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி.

முத்துப்பேட்டை ஜாம்புவானோடை சிதம்பர ராமஜெயம் அறக் கட்டளை நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வழங்கிய தமிழர் தலைவர் பிரச்சார ஊர்தி நிதி ரூ.5000 திருத்துறைப்பூண்டி மாவட்டச் செயலாளர் ச.பொன்முடி கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner