எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோபி, ஜன. 2- கோபி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ‘தந்தை பெரியார் நினைவு நாள்’ சிறப்பாகக் கொண்டா டப்பட்டது. அன்று காலை 9 மணியளவில் கோபி பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.சீனிவாசன், மாவட்ட செயலாளர் ந.சிவலிங்கம், பொதுக்குழு உறுப்பினர்கள் கா.மு.பூபதிநாதன், க.யோகானந்தம், கோபி ஒன் றிய கழக தலைவர் எழில் ராமலிங்கம், ஒன்றிய செயலா ளர் க.மு.சிவக்குமார், இராச மாணிக்கம், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கே.எம்.கருப்பணசாமி, பொருளாளர் பொறியாளர் சிவக்குமார், கழக நகரத் தலைவர் த. ஆனந்த ராஜ், ஈரோடு புத்தக நிலையம் சீனுமதிவாணன், ப.க.துணைச் செயலாளர் அ. குப்புசாமி மற்றும் திரளான கழகத் தோழர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாவட்டத் திராவிட முன் னேற்ற கழகத்தின் சார்பாக ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம், நகரச் செயலாளர் நாகராஜன், நாடா ளுமன்ற முன்னாள் உறுப்பி னர் வி.பி.சண்முகசுந்தரம், சட்டமன்ற முன்னாள் உறுப்பி னர் கு.ப.வெங்கிடு, கோவை குமணன், கோ.வெ.மணிமாறன் மற்றும் திராளான தொண்டர் கள் கலந்து கொண்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner