எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியாரியல் பயிற்சி முகாம் 4ஆவது ஆண்டாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் பெரியார் மன்றத்தில் 28, 29 மற்றும் 30.12.2016 புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நடைபெற்றது. பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவர்கள் சிலரைத் தவிர மற்றையோர்  பெரும்பாலும் புதியவர்கள் ஆவர். பள்ளி இறுதி வகுப்பு தொடங்கி எல்.எல்.பி. வரை படித்தவர்களே ஆவர்.

கழகப்பதாகைகளும், கொடிகளும் சுற்றுலாத்தனமான ஒகேனக்கல்லில் பெரியாரியல் பயிற்சி முகாம் நடக்க இருப்பதை மற்றவர்களுக்கு அறிவிப்பதாய் அமைந்திருந்தது. 28.12.2016 அன்று காலை 10.30 மணிக்கு தொடக்க நிகழ்ச்சி. அதற்கு முன்பாக பங்கு பெறும் தோழர்களின் பதிவு நடந்தது. கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் முகாமைத் தொடங்கி வைத்துப் பேசினார். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் முகாமின் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை பற்றி கருத்துரையாற்றினர்.

கழகச் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பேராசிரியர் ப.காளிமுத்து, யோகா மாஸ்டர் மல்லிகா அமைப்புச் செயலா ளர் ஊமை செயராமன், மாவட்ட கழக தலைவர் வீ.சிவாஜி, முன்னாள் மாவட்ட கழகத் தலைவர் வேட்ராயன், மாநில ப.க.செயல்தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி, மண்டல நிர்வாகிகள் கரு.பாலன், பழ.வெங்கடாசலம், ப.க.நிர்வாகி அண்ணா.சர வணன், மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், கடமடை தீர்த்தகிரி, அ.தமிழ்ச்செல்வன், தமிழ் பிரபாகரன், கே.ஆர்.குமார், மாவட்ட அமைப்பாளர் இ.மாதன், ஆசிரியர் கிருட்டிணமூர்த்தி, திமுக மாநில ஆதிதிராவிடர் பிரிவு துணைச் செயலாளர் இராசேந்திரன், கவிஞர் கண் ணிமை ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

‘பெரியார் ஓர் அறிமுகம்‘, ‘திராவிடர் கழக வரலாறு’, ‘பார்ப் பனர் பண்பாட்டுப் படையெடுப்பு’, ‘பெரியாருக்குப்பின் திரா விடர் கழகம்‘, ‘தமிழர் தலைவரின் தனித்தன்மைகள்’ ஆகிய தலைப்புகளில் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், ‘சுயமரியாதை இயக்கம் மற்றும் நீதிக்கட்சி வரலாறு’, ‘இந்துத் துவா’ ஆகிய தலைப்புகளில் செயலவைத் தலைவர் சு.அறி வுக்கரசு’, ‘கடவுள் மறுப்பு’, ‘சமூகநீதி’ ஆகிய தலைப்புகளில் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், ‘இயக்க ஏடுகளும், நமது நிறுவனங்களும்‘ எனும் தலைப்பில் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பெரியார் போற்றிய பெண்ணியம் எனும் பொருள் பற்றி கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, ‘அறிவியலும் மூடநம்பிக்கையும்‘, ‘புராண இதிகாசப் புரட்டு’, ‘திராவிடத்தால் எழுந்தோம்‘, ‘புதிய கல்விக் கொள்கை’ ஆகிய தலைப்புகளில் பேராசிரியர் ப.காளிமுத்து, ‘சாமியாடுதல் மோசடியே’ எனும் பொருள் பற்றி டாக்டர் கவுத மன் ஆகியோர் வகுப்புகள் நடத்தினர்.

‘கேள்வியும் கிளத்தலும்‘ வகுப்பில், பயிற்சி மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் பதில் அளித்து அய்யங்களைப் போக்கினார். பயிற்சி மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வழி காட்டுதல் உரையும் ஆற்றினார். புதியவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் ஆசிரியரின் பதில்கள் அமைந் திருந்தன. தமிழர் தலைவரை நேரில் பார்த்ததும் அவருடன் உறவாடுவதை பெரும் உற்சாகமாக பயிற்சி மாணவர்கள் கருதினர்.

காலை 6 மணி முதல் 7 மணி வரை யோகா எனும் உடலுக் கும், உள்ளத்துக்கும் நலமளிக்கும் பயிற்சியினை யோகா மாஸ்டர் மல்லிகா ராசரத்தினம் பயிற்சி மாணவர்களுக்கு அளித்தார்.

பெரியார் ஊடகத்துறையின் சார்பில் குறும்படம், ஆவ ணப்படம் ஒளிபரப்பப் பெற்றது. மாணவரணி, இளைஞரணி அமைப்புப் பணிகள் பற்றி மாநில மாணவரணி செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் பயிற்சி மாணவர்களிடையே கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அவ்வப்பொழுது, மாண வர்களி டையே இயக்கப் பாடல்களை அண்ணா.சரவணன், பழனி, சுதா ஆகியோர் பாடினர். பகுத்தறிவாளர் கழக மாநில செயல் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி பயிற்சி மாணவர்க ளுக்கு வினாடி வினா போட்டிகள் நடத்தி உற்சாக மூட்டினார்.

பரபரப்பான பட்டிமன்றம்...

29.122016 இரவு 8.30 மணிக்கு பயிற்சி மாணவர்களின் பேச்சுத்திறனை மதிப்பீடு செய்யும் விதமாக பரபரப்பான பட்டிமன்றம் நடத்தப் பெற்றது.
தந்தை பெரியார் தொண்டில் விஞ்சி நிற்பது இன நலனா? பகுத்தறிவா? எனும் தலைப்பிலான பட்டிமன்றம் கழக அமைப்பு செயலாளர் ஊமை செயராமனை நடுவராகக் கொண்டு நடத்ததப்பெற்றது.

‘இனநலனே’ எனும் அணியில் ஆனந்த சைனி, கோவிந்த ராசு, சுதா, வி.பி.சிங் ஆகியோரும் பகுத்தறிவு எனும் அணியில் சந்தீப், ஓவியா, வீ.சிவாஜி, கனிமொழி ஆகியோரும் சிறப்பாக வாதிட்டனர். நடுவர் தமது தீர்ப்புரையில் ‘இனநலனே’ அய்யாவின் தொண்டில் விஞ்சி இருப்பது என்று குறிப்பிட்டார். பயிற்சி மாணவர்களின் சீரிய கருத்துக்களுக்கு இடைஇடையே கைதட்டி ஊக்குவித்தனர்.

இளம் பேச்சாளர்கள் என்று பாராட்டிப் பேசும் வண்ணம் மாணவர்களின் உரை அமைந்திருந்தது. மூன்று நாட்கள் நடைபெற்ற பயிற்சி முகாம் பயன்தரும் வண்ணம், பெரியார் கொள்கைப் பரவலுக்கு இளம் தோழர்களை தயாரித்திடும் பட்டறையாக இந்த முகாம் அமைந்தது. எவ்வித குறைபாடு மின்றி உணவு, தங்குமிடம் இருந்தது.

பட்டறையை நல்ல வண்ணம் உற்று நோக்கி சிறப்பாகக் குறிப்பு எடுத்த மாணவர்கள் மூவருக்கு பரிசு நூல்களை குன்னூர் டாக்டர் இரா.புகழேந்தி வழங்கினார். கிருஷ்ணகிரி கனிமொழி, கோபி அ.குப்புசாமி, தேன்கனிக்கோட்டை சிவக் குமார் பரிசுகள் பெற்றனர்.

அமெரிக்காவிலிருந்து பயிற்சி முகாமைக் காண வந் திருந்த கி.வீ.அசோக்ராஜ் (ஆசிரியரின் மூத்த மகன்) ‘உலகில் நாத்திகம்‘ எனும் தலைப்பில் சுருக்க உரையாற்றினார்.

தர்மபுரி மாவட்டத்தின் கழக நிர்வாகிகள் கழக அமைப்பு செயலாளர் ஊமை செயராமனுடன் இணைந்து சிறப்பாக பயிற்சி முகாம் நடைபெற ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். குறையொன்றும் இல்லை என்று சொல்லக்கூடிய விதத்தில் நிறைகள் பல நிறைந்திருந்த சூழலில் ஒகேனக்கல் பெரியாரி யல் பயிற்சி முகாம் அமைந்தது. பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் எண்ணத்துக்கு மாவட்டத்தின் முன்னாள், இந்நாள் கழக நிர்வாகிகள், தோழர்கள், பெரியார் மன்ற பொறுப்பாளர்கள், பெரியார் மன்றத்தில் கடை வைத்து இருப்போர், முன்னாள் பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்கள் என அனைவரும் செயல் வடிவம் கொடுத்த காரணத்தால் மாவட்ட தலைவர் வீ.சிவாஜி மற்றும் அமைப்புச் செயலாளர் ஊமை செயராமன், மற்ற நிர்வாகிகளின் இணைந்த செயல்பாடு முகாமின் சிறப்புக்கு சிறப்பு சேர்த்தன என்றால் மிகையல்ல.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner