எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தஞ்சாவூர், ஜன. 6  தஞ்சாவூர் நாகை சாலை ஞானம் நகரில் புத்தகங்கள், எழுதுப்பொருட்கள் விற்பனையகமான வேர்ட்ஸ் வொர்த் முகவாண்மை திறப்பு விழா 27.12.2016 அன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

மாரியம்மன் கோவில் ஊராட்சி மன்ற மேனாள் தலை வர் ரெ.தனசேகர் தலைமை வகித்தார். சி.எஸ்.மெட்ரிக் குலேசன் பள்ளி நிறுவனர் சிவா னந்தம், ஊராட்சிமன்ற உறுப் பினர் ரெ.இரவிச்சந்திரன், ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியர் சோ.குருசாமி, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி கோவிந்த ராசு, நிலக்கிழார் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித் தார்கள். வேர்ட்ஸ் வொர்த் முக வாண்மையை கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்து, புத்தக நிலையத்தை குட்டிமணி மிகவும் நன்றாக நடத்தி வருகிறார். மனிதநேயம் வளரவேண்டுமானால், புத்தகங் களை வாசிக்கும் பழக்கத்தை அனைவரும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்நிறு வனம் மேன்மேலும் சிறப்பாக நடைபெற துணை நிற்போம் என வாழ்த்தி உரையாற்றினார்.

நிகழ்வில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் பயனாடை அணி வித்து பாராட்டு தெரிவித்தார். அனைவரையும் மா.திராவிடச் செல்வன் வரவேற்றார். உரிமை யாளர் கு.குட்டிமணி நன்றி கூறினார்.

கலந்து கொண்டோர்

கழகப் பொதுச் செயலாளர் இரா.செயக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில ப.க. பொதுச் செயலாளர் மா.அழகிரி சாமி, மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், பொதுக்குழு உறுப் பினர் கை.முகிலன், மாவட்ட அமைப்பாளர் ப.தேசிங்கு, மாவட்ட துணைத் தலைவர் தேச பந்து, தஞ்சை ஒன்றிய செயலாளர் ஆட்டோ செ.ஏகாம்பரம், மாவட்ட ப.க.செயலாளர் கோபு.பழனிவேல், பேச்சாளர்கள் முனைவர் க.அன்பழகன், இரா.பெரியார் செல்வன், உரத்தநாடு ஒன்றிய ப.க.தலைவர் கு.நேரு, பூவை.முருகேசன், தென் கொண் டார் இருப்பு காத்தையன், கி.சவுந்தரராசன், பாலா கன்ஸ்ட் ரக்சன்ஸ் உரிமையாளர் பொறி யாளர் ப.பாலகிருஷ்ணன், புலவர் இரா.மோகன்தாஸ், பெரி யார் மணி, இரா.செந்தூரப் பாண்டியன், நடராஜிலு உள் ளிட்ட ஏராளமான கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner