எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வலங்கைமான், ஜன. 11- கும்ப கோணம் கழக மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம், வலங்கைமான் கடைவீதியில் 27.12.2016 அன்று மாலை பகுத் தறிவாளர் கழகம், திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரி யார் பிறந்த நாள் தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர்  வே.கோவிந் தன் தலைமை ஏற்றார். ஒன்றிய பொறுப்பாளர் அய்யனான், குழந்தை ஆகியோர் முன் னிலை வகித்தனர். கூட்டத்தை தொடங்கிவைத்து ஒன்றியத் தலைவர் நா.சந்திரசேகரன் உணர்ச் சிகரமான தொடக்கத்தை அளித்து கடைவீதியில் இருந்தவர்களின் கவனத்தைத் திருப்பினார்.

தொடர்ந்து குடந்தை இரா சப்பா, மகளிரணி பொறுப்பா ளர் திரிபுரசுந்தரி ஆகியோரது உரைகளுக்குப்பின் சரியாக 7 மணிக்கு தலைமை கழக சொற் பொழிவாளர் கு.இரா.பெரியார் செல்வன் உரை நிகழ்த்தினார்.

திராவிடர் கழகம் எப்படிப் பட்ட மனிதநேய இயக்கம் என்பதைப் பல நிகழ்வுகளை சுட்டிக்காட்டி வீதியில் நின்றி ருந்தோரை கூட்டத்தை நோக்கி ஈர்த்தார். தொடர்ந்து இந்த இயக்கம் ஏன்? என்பது பற்றி பேசி நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்கும் கூட்டமாக மாற்றி னார். இறுதியில் ஒன்றிய செய லாளர் க.பவானிசங்கர் நன்றி கூறிட கூட்டம் இனிதே முடி வுற்றது.

கூட்டத்தில் மாவட்ட செய லாளர் குருசாமி, இளைஞரணி செயலாளர் சிவக்குமார், மாவட்ட பகுத்தறிவு ஆசிரிய ரணி அமைப்பாளர் அ.விஜய பூபாலன், மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் வி. மோகன், கோவிந்தகுடி இரா மச்சந்திரன், இரமேஷ், ஜெய பால், நத்தம் ராஜேந்திரன், மக ளிரணி தோழர்கள் மற்றும் ஏரா ளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner