எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வடமணப்பாக்கம், அக். 12- பெரியார் பற்றாளர் நல்லாசிரியர் மறைவுற்ற வடமணப்பாக் கம் பி.ஜே.விஜயராகவன் அவர் களின் விழிகள் கொடையாக அளிக்கப்பட்டு 10.10.2017 அன்று எவ்வித மூடச்சடங்கின்றி உடல் அடக்கம் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட் டம், செய்யாறு வட்டம், வடமணப்பாக்கம் திமுக கிளை கழக தலைவர் தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரி யர் மன்றத்தின் திருவண்ணா மலை மாவட்ட தலைவர் - பெரியார் பற்றாளர் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவ ருமான வேதா மெடிக்கல்ஸ் குழுமத்தின் நிறுவனர் பி.கே.விஜயராகவன் (வயது 85) அவர்கள் உடல் நலக்குறைவால் 9.10.2017 அன்று பிற்பகல் 3 மணியளவில் வடமணப்பாக் கத்தில் உள்ள தனது இல்லத்தில் மறைவுற்றார்.

மறைவுற்ற பி.கே.விஜய ராகவன் அவர்களுக்கு வி.சாந்தா - கணேசன் என்ற மக ளும், திரைப்பட இயக்குனநர் (நினைவில் வாழும்) செய்யாறு ரவி - ஜெயந்தி, வி.வெங்கட்ரா மன் - மு.தமிழ்மொழி, வி.தேவ குமார் - தரணி ஆகிய மகன்க ளும் - மருமகள்களும் உள்ளனர்.

விழிக்கொடை அளிப்பு

பெரியார் பற்றாளர் நல்லா சிரியர் பி.கே.விஜயராகவன் அவர்களின் விருப்பப்படி அவரின் விழிகள் செய்யாறு அரிமா சங்கத்தின் ஏற்பாட்டில் காஞ்சிபுரம் அகர்வால் மருத் துவமனைக்கு கொடையாக அளிக்கப்பட்டது.

தமிழர் தலைவர் ஆறுதல்

தகவல் அறிந்ததும் திராவி டர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நல்லாசி ரியர் பி.கே.விஜயராகவன் அவர் களின் மகன் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வட மணப்பாக்கம் வி.வெங்கட் ராமன், மருமகள் பேராசிரியர் மு.தமிழ்மொழி மற்றும் குடும் பத்தாருக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் அவர்களும் ஆறுதல் தெரிவித்தார்.

கழகத்தின் சார்பில் மரியாதை

10.10.2017 அன்று பி.கே.விஜயராகவன் அவர்களின் உடலுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் செய்யாறு மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், காஞ்சிபுரம் மாவட்டத் தலை வர் டிஏஜி அசோகன், வேலூர் மண்டலத் தலைவர் வி.சட கோபன், தாண்டவமூர்த்தி, செல்வநாதன், தலைமை கழ கத்திலிருந்து விடுதலை தலைமை செய்தியாளர் வே.சிறீதர் மற்றும் மண்டல, மாவட்ட நிர்வாகிகள் மலர் மாலை வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.

திமுக சார்பில் மரியாதை

திமுக சார்பில் செய்யாறு சட்டமன்ற தொகுதி மேனாள் உறுப்பினரும், மாநில விவ சாய தொழிலாளரணி துணைச் செயலாளருமான வ.அன்பழ கன், நாளந்தப் பள்ளி தலைவர் ஆர்.வேல்முருகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.வி. சுப்பிரமணி, செய்யாறு ஒன்றிய செயலாளர் வழக்குரைஞர் ஆர்.வி.பாஸ்கரன், மேற்கு ஒன்றிய செயலாளர் தினகரன், மேற்கு ஒன்றிய தலைவர் சங் கர், வடமணப்பாக்கம் கிளைக் கழக செயலாளர் மு.சேகர், ராந் தம் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ராந்தம் சேட்டு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் சார்பில் மரியாதை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட் டியின் மேனாள் தலைவரும் மேனாள அரக்கோணம் நாடா ளுமன்ற தொகுதி உறுப்பின ரான கே.கிருஷ்ணசாமி அவர் கள் தனது பள்ளி தோழரான மறைவுற்ற பி.கே.விஜயராக வன் அவர்களின் உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தா ருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

எவ்வித மூடச்சடங்கின்றி உடல் அடக்கம்

பெரியார் பற்றாளர் மறை வுற்ற பி.கே.விஜயராகவன் அவர்களின் உடல் 10.10.2017 அன்று மதியம் 3 மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து எவ்வித மூடச்சடங்குமின்றி ஊர்வலமாக எடுத்து செல்லப் பட்டு வடமணப்பாக்கம் இடு காட்டில் வீரவணக்கம் செலுத் தப்பட்டு அடக்கம் செய்யப் பட்டது.

முக்கிய பிரமுகர்கள் மரியாதை

முன்னதாக அவரது உட லுக்கு மலர்மாலை வைத்து இறுதி நிகழ்வில் பங்கேற்று மரியாதை செலுத்தியோர்:-

பி.கே.வெங்கடேசன், டி.கணேசன், முக்கூர் ஜெய ராமன், ஜெ.சுப்பிரமணி யன், சென்னை மாநகர குடிநீர் வாரிய மூத்த பொறி யாளர் இரா.ஜெய்சங்கர், பேராசிரியர் ஜெயா, கி. பிரியா, அடையாறு வே.ஆனந்தன், காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கலால் பிரிவு கண்காணிப் பாளர் கணேசன், செய்யாறு அரிமா சங்க நிர்வாகிகள், வழக்குரைஞர் விசுவநா தன், ஆரணி மு.பாண்டிய நெடுஞ்செழியன், மு.தென் னரசு, எல்.அய்.சி பாண்டி யன், இ.வாணி இளங்கோ வன், பா.கணேசன், பா. பாலாஜி, திருபருத்திகுன் றம் சங்கர், குப்பிடிசாத்தம் பழனி,கார்த்தி, செய்யாறு மருத்து வணிகர்கள் நலச் சங்க நிர்வாகிகள் இராஜ சேகரன், பிரேம்குமார், குணாளன், ஜெ.சேட்டு, குரு.

செய்யாறு நகர கழகத் தலைவர் தி.காமராஜ், தங் கம் பெருமாள், பெரியார் பெருந்தொண்டர் கோவிந் தன், என்.சீனுவாசன், ஆறு முகம், மணிவண்ணன், பிர காசம், அரக்கோணம் கழக மாவட்ட அமைப்பாளர் பாணாவரம் மா.பெரியண் ணன், இராணிப்பேட்டை பொன்.பெருமாள், அரக்கோணம் மாவட்ட கழக துணைத்தலைவர் பொன்.வெங்கடேசன்.

வடமணப்பாக்கம் கழ கத் தோழர்கள் மு.வெங் கடேசன், பொன்.கணேசன், பொன்.இரமேசு, பொன். சுந்தர், த.ஏகாம்பரம், மு.செல்வம், க.ஜெயபாலன், வெ.தயாளன், வெ.இளங்கோவன், வெ. சசிகுமார், வெ.கொடிமணி பாரதி மு.குப்பன், ஏழு மலை, மு.ராஜ், மு.பாலு, க.சங்கர், இரா.நந்தன்பாரதி, வெ.எழில்மதி, எஸ்.அன் புச்செல்வி, இரா.தேன் மொழி, வெ.இளஞ்செழி யன், தே.அன்புச்செழியன், தே.கயல்விழி மற்றும் திர ளானோர் இறுதி நிகழ்வில் பங்கேற்று வீர வணக்கம் செலுத்தினர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner