எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, நவ. 14 கருநாடக மாநில திராவிடர் கழகம் சார்பில் விடுதலை சந்தா வழங்கும் நிகழ்ச்சி - "கருத்துச் சுதந்திரம் காப்போம்" கருத்தரங்கத்துடன் மாநில தலைவர் மு.சானகிராமன் தலைமையில், பெங்களூரு பெரியார் மய்யத்தில்,  தமிழர் தலைவர் கி.வீரமணி அரங்கில் 12.11.2017 அன்று காலை 11 மணி முதல் 1.30 மணி வரை நடந்தது. மாநில செயலாளர் இரா.முல்லைக்கோ வரவேற்றுப் பேசியதுடன், நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார். இந்திய தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் - பெரியார் பெருந்தொண்டர் முத்துசெல்வன் முன்னிலை வகித்தார்.

‘‘கருத்துச் சுதந்திரம் காப்போம்'' என்ற தலைப்பில் கழகப்பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மனித உரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமைக்கு எதிரான மோடி அரசின் அடாவடித்தனம், சமுதாய இழிவுகளை துடைத்து கருத்துச் சுதந்திரம் காத்திட விடுதலையும், திராவிடர் கழகமும் ஆற்றிய பங்கு பணிகள், கவுரிலங்கேஷ், கல்புர்கி, பன்சாரே, தபோல்கர் மீது ஏவப்பட்ட படுகொலைகள் பற்றியும் விளக்கி சிறப்புரையாற்றினார்.

‘குழந்தைகள் நலம் காப்பு' எனும் பொருளில் வழக் குரைஞர்கள் சே.குணவேந்தன், ஜெ.அருண் கதிரவன் பேசினார்கள். முன்னதாக செல்வி கலையரசி ராஜா கழகக் கொடியினை ஏற்றிவைத்தார். தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்து பேசிய பொதுச்செயலாளர் துரை.சந்திர சேகரனிடம், ‘விடுதலை', ‘உண்மை', ‘பெரியார் பிஞ்சு,  தி மாடர்ன் ரேசனலிஸ்டு' ஆகிய ஏடுகளுக்கு சந்தாக்களை கழக நிர்வாகிகள் வழங்கினர்.

வழங்கப் பெற்ற சந்தா விவரம்

‘விடுதலை' 30 ஆண்டு சந்தா, ‘உண்மை' 10 ஆண்டு சந்தா, ‘பெரியார் பிஞ்சு' 4 ஆண்டு சந்தா, ‘மாடர்ன் ரேசனலிஸ்டு' 13 ஆண்டு சந்தா.

தங்கம்- இராமச்சந்திரா அறக்கட்டளை சார்பில் பொதுச் செயலாளருக்கு சிறப்புகள் செய்யப்பட்டன. தோழர்கள் தங்கம்  - இராமச்சந்திரன் பெரியார் மய்யத்துக்கு பாத்திரங் கள் வழங்கினர். மாநில செயலாளர் இரா.முல்லைக்கோ தோழர்கட்கு மதிய உணவு அளித்தார்.

விடுதலை சந்தா வழங்கும் நிகழ்வில் கிருட்டிணகிரி மாவட்ட இணை செயலாளர் சு.வனவேந்தன், ஓசூர் ஒன்றிய செயலாளர் ம.சின்னசாமி, பெரியார் பெருந் தொண்டர், மாநில துணைத் தலைவர் வி.மு.வேலு, தங்கம் ராமச்சந்திரா, வழக்குரைஞர் பிரிவு செயலாளர் அருண், கதிரவன், சிவாஜி நகர் பிரிவு செயலாளர் மலர்முருகேசஷ் பாண்டியன், சுப்பிரமணியன், தென் மண்டல தலைவர் கவிஞர் வீ.ரத்தினம், பொதுக்குழு உறுப்பினர் ராஜாராம், பிரபாவதி, பிரேம்குமார், கே.எஸ்கார்டன் ஆனந்தன், மாநில துணை செயலாளர் வே.நடராசன், கிருபாநிதி, கே.ஆர்.புரம் செயலாளர் ஈ.ஜிபுரா தலைவர் சண்முகம்,  தர்மபுரி மாவட்ட காரிமங்கலம் ஒன்றிய செயலாளர் ராமசாமி, எலக்ட்ரானிக் சிட்டி ராஜா, மதியழகன், கலையரசி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக மாநில பொருளாளர் ஜெயகிருட்டிணன் நன்றி கூறினார். வந் திருந்த அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner