எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பழனி,நவ.14 விடுதலைச் சந்தா சேகரிப்புதொடர் பாக பழனிக்கு வருகை தந்த கழக அமைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்கள், பழனி ஓபளாபுரம் பகுதியைச் சார்ந்த பெரியார் பெருந்தொண்டர் இராமலிங்கம் முதுகுத் தண்டு பாதிப்பால் உடல் நலம் குன்றியிருப் பதை அறிந்து, அவரது இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்ததோடு, மரியாதை நிமித்தமாக பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

‘விடுதலை’ சந்தா வழங்கும் விழா குறித்து விவரம் அறிந்த பெரியார் பெருந்தொண்டர் இராமலிங்கம் அவர்கள், தமிழர் தலைவரின் பிறந்தநாள் பரிசாக கொள்கை உணர்ச்சிப் பெருக்கோடு கழக அமைப்பாளரிடம்  அரை யாண்டு விடுதலைச் சந்தா ரூ.900/- வழங்கி னார். மாவட்டத் தலைவர் பெரியார் இரணி யன், செயலாளர் நல்லதம்பி, அமைப்பாளர் ராதாகிருட்டிணன், அறிவழகன், பெரியார் பெருந்தொண்டர் அங்கப்பன் ஆகியோர் உடன் வந்திருந்தனர் (13.11.2017).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner