எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மேட்டுப்பாளையம், டிச.5- ஜாதி ஒழிப்புப்  போராட்ட 60ஆம் ஆண்டு நினைவு -- நிகழ்வு விளக்கக் கூட்டம் நடந்தேறி யது.

ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட் டத்தை கொளுத்தும், ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை தந்தை பெரியார் அவர்கள் 1957 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி அறிவித்ததையொட்டி கழகத் தோழர்கள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்று இந்திய அரசமைப்புச் சட்டத்தை கொளுத்தினார்கள்!

அதில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டு 6 மாதங்கள் முதல் 3ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் விளைவாக சிறையிலும், சிறை யிலிருந்து வெளியே வந்த பின்பும் 18 பேர் மறைவுற்றனர். இந்த ஜாதி ஒழிப்புப் போராட் டத்தின் 60 ஆம் ஆண்டு நிறைவு- நினைவு நிகழ்வாகவும், இப் போராட்டத்தில் ஜாதியை ஒழித்திட, தன் இன்னுயிரை யும் இழந்த கருஞ்சட்டை தோழர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வாகவும் "சிறப்புக்கூட்டம்" மேட்டுப் பாளையம் கழக மாவட்ட திராவிடர் மாணவர் கழகம் சார்பில்  26.11.2017 ஞாயிற்றுக் கிழமை இரவு 7 மணியளவில் மேட்டுப்பாளையம் அன்ன பூர்ணா உணவக அரங்கில் கொள்கை வீச்சோடு நடந்தது.

இக்கூட்டத்திற்கு மேட்டுப் பாளையம் கழக மாவட்ட திராவிடர் மாணவர் கழகத் தலைவர் ரா.அறிவுமணி தலைமை தாங்கினார். கோவை மண்டல கழக மாணவரணிச் செயலாளர் ரா.சி.பிரபாகரன் அனைவரையும் வரவேற்றார்.

கழக அமைப்பாளர் உரை

நிகழ்வில் சிறப்போடு பங்கேற்ற திராவிடர் கழகத்தின் மாநில அமைப்பாளர் உரத்த நாடு  இரா.குணசேகரன் உரை யாற்றியதாவது:  உலக வரலாற் றிலேயே இன இழிவை ஒழிக்க  பத்தாயிரம் பேர் பங்கேற்ற ஒரு போராட்டம் உண்டு என்றால்... அது ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட் டத்தை கொளுத்த தந்தை பெரியார் அவர்கள் அறிவித்து நடத்திய சட்ட எரிப்புப் போராட்டமே யாகும்! அந்த போராட்டத்தின் 60 ஆம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியாக வும், போராட்டத்தில் சிறை சென்று மறைவுற்ற கழகத் தோழர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வாகவும் இந் நிகழ்வு நடைபெற்றுக் கொண் டிருக்கிறது என்று உரையாற் றினார்.

தமிழன் மீது தொடுக்கப்பட்ட போர்

கூட்டத்தில் கலந்து கொண்டு "தமிழன் மீது தொடுக்கப்பட்ட போர்" என்ற தலைப்பில் கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

பங்கேற்றோர்

மேட்டுப்பாளையம் கழக மாவட்டத் தலைவர் சு.வேலுச் சாமி, செயலாளர் அர.வெள் ளியங்கிரி, அமைப்பாளர் செல் வராஜ், கழகப் பொதுக்குழு உறுப்பினர் சாலைவேம்பு சுப்பையன், கோவை மாவட் டத் தலைவர் சிற்றரசு, செய லாளர் தி.க.செந்தில்நாதன், மாநில கழக மாணவரணி துணைச் செயலாளர் ஆ.பிரபாகரன்,  கோவை மண்டல மாணவரணிச் செயலாளர் ரா.சி.பிரபாகரன், கோவை மண்டல இளைஞரணிச் செய லாளர் வெள்ளகோவில் ச.மணிகண்டன், மேட்டுப்பாளை யம் மாவட்டபகுத்தறிவாளர் கழகத் தலைவர் த.வீரமணி, செயலாளர் திருவள்ளுவர், பகுத்தறிவாளர் ரா.ரங்கசாமி, மேட்டுப்பாளையம் நகரக் கழகத் தலைவர் சந்திரன், செய லாளர் கோ.அர.பழனிச்சாமி, மேட்டுப்பாளையம் கழக மாவட்ட முன்னாள் தலைவர் பா.பாலசுப்பிரமணி, காரமடை ஒன்றியப் பொறுப்பாளர் ஏ.எம்.ராஜா, கோவை மாவட்டக் கழக இளைஞர ணியைச் சார்ந்த பிரபு, விவேக், கோவை மாவட்ட மாணவ ரணித் தலைவர் சக்தி பழனி யப்பன், அமைப்பாளர் விஜ யன், கோவை ராகுல், பிரதீப் மேட்டுப்பாளயம் நகர திரா விடர் மாணவர் கழக அமைப் பாளர் செ.அன்பரசு, நகரக் கழக இளைஞரணித் தலைவர் நந்தகுமார், செயலாளர் சிவக் குமார், திராவிடர் மாணவர் கழகத்தின் வேல்ஸ்புரம் அரசு மேல்நிலைப் பள்ளி அமைப் பாளர் கவின், புஜங்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைவர் ரா.அன்புமதி, செய லாளர் வீரமணி, காரமடை வெள்ளியங்காடு அரசு மேல் நிலைப் பள்ளி அமைப்பாளர் பிரபாகரன் அன்னூர் தமிழ் மணி, சுரேஷ் அம்பேத்கர், பகுத்தறிவாளர் கழகத்தைச் சார்ந்த ராமசாமி, பெரியசாமி உள்ளிட்டகழகத் தோழர்களும் கழக ஆதரவாளர்கள் பலரும் நிகழ்வில் பங்கேற்றுச் சிறப் பித்தனர். திராவிடர் மாணவர் கழகத்தின் மேட்டுப்பாளையம் கழக மாவட்டச் செயலாளர் விக்னேஷ் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner