எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கலி.பூங்குன்றன்

திருச்சியில் உலக நாத்திகர் மாநாடு வரும் 5, 6, 7 வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் நடை பெறவுள்ளது.

திராவிடர் கழகமும், விஜயவாடா - கோரா நாத்திக மய்யமும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.

2011 ஜனவரி 7, 8, 9 ஆகிய நாள்களில், இதே திருச்சியில் உலக நாத்திகர் மாநாட்டை நடத்தியுள்ளோம்.

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் நாத்திக அறிஞர் பெருமக்கள் நடத்தவிருக்கும் மாநாட்டில் பங்கேற்று கருத்துரை, ஆய்வுரைகளை வழங்கிட உள்ளனர்.

பன்னாட்டு மனிதநேய மற்றும் நெறிமுறை அமைப்பு (Internatinoal Humanist And Ethical Union - IHEU) உலகம் முழுவதிலுமுள்ள மனிதநேய அமைப்புகள், பகுத்தறிவு கழகங்கள், மதச்சார்பற்ற அமைப்புகள், சுதந் திரக் கருத்துடைய குழுக்கள் மற்றும் கடவுள் நம்பிக்கை அற்ற, அறிவியல் அமைப்புகள் போன்றவற்றின் ஒருங்கிணைந்த அமைப்பாகும் இது. 1950 ஆம் ஆண்டு துவங்கிய இந்த அமைப்பின் தலைவராக இங்கிலாந்தின் உயிரியல் ஆய்வாளர் ஜூலன் ஹெக்ஸ்லீ என்பவர் நியமிக்கப்பட்டார். இவர்  அய்க்கிய நாடுகள் அமைப்பான கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்புகளின் அங்கமான யுனஸ்கோவின் முதல் இயக்குநர் ஆவார். யுனஸ்கோ அமைப்பு இதற்கான நிதி உதவியை வழங்குகிறது.

இதனுடைய முதல் கூட்டம் 1952 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் கூட்டப்பட்டது. டச்சு தத்துவவியல் அறிஞரான ஜாப்வான் பராக் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், மனித உரிமை அமைப்புகளையும் இதன் கீழ் கொண்டுவர விதிகள் மாற்றப்பட்டன.

இதனுடைய பணி உலக அளவில் மனித உரிமை மீறல்களைத் தடுப்பது, மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வை ஊட்டுவது, பகுத்தறிவு கடவுள் மறுப்பு மற்றும் அறிவியல் பார்வை கொண்ட அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுப்பது போன்றவை யாகும்.

மதச்சார்பற்ற கொள்கைகளை மேலும் உலகெங்கும் பலப்படுத்தும் வகையில் 2011 ஆம் ஆண்டு நார்வேயில் நடந்த மனிதநேயக் கருத்தரங்கில், ‘‘அமைதியான மனிதம்'' என்ற தலைப்பில் ஓஸ்லோ அறிக்கை வெளி யிடப்பட்டது. இந்த அமைப்பின் உறுப்பினர்கள் உலகம் முழுவதிலும் மனித உரிமை மற்றும் அமைதியான வாழ்வியல் குறித்தும் அந்த அந்த நாடுகள் மதச்சார்பற்ற கொள்கைகளை கடைப்பிடிக்கும் வழிமுறைகள் குறித்தும் வலியுறுத்தி வருகின்றனர்.

2014 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்-இல் நடந்த கூட்டத்தின்போது சுதந்திரமான கருத்து மற்றும் பகுத்தறிவுப் பிரச்சாரம் குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை ‘‘ஆக்ஸ்போர்ட் டிகலரேசன்'' என்று அழைக்கப்படுகிறது. முக்கியமாக இந்த அறிக்கை மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுகள் மதவாதத்தில் இருந்து முற்றிலும் விலகி இருக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உலக மனிதநேய அமைப்பில் திராவிடர் கழகம் 6.7.1994 அன்று டொரான்டோவில் கூடிய செயற்குழுக் கூட்டத்தில் ஓர் உறுப்பினராக ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நான்காண்டுகளுக்கு ஒருமுறை இந்த அமைப்பின் மாநாடு வெவ்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.

10.1.1999 அன்று மும்பையில் நடைபெற்ற இவ்வமைப் பின் மாநாட்டில், தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் கழகத்தின் சார்பிலும், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பிலும் பலரும் பங்கேற்றனர்.

அந்த மாநாட்டில், திராவிடர் கழகத்தின் சார்பில் முன்மொழியப்பட்ட முக்கிய மூன்று தீர்மானங்கள் முக்கியமானவை!

1. சு.அறிவுக்கரசு

மூன்றாம் தீர்மானம்:

‘‘மின் தொலைத்தொடர்புச் சாதனங்கள் பகுத் தறிவை  வளர்க்கவும், அறிவியற் சிந்தனையைப் பயன்படுத்தும் கருவியாக இருப்பதற்கும் எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும்'' என்பதே அத்தீர்மானம்.

தொலைக்காட்சியிலும், வானொலியிலும் மூடநம்பிக் கையின் முடைநாற்றம் வீசுவதை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டினார்.

எல்லா நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சியில் கடவு ளைப் பரப்பவும், மதத்தைப் பரப்பவுமே செயல்படுகின்றன என்றார். பகுத்தறிவுக்கு அங்கே இடமே இல்லை என்றும் குறிப்பிட்டார். இது பகுத்தறிவுக்காலம், எனவே, பகுத் தறிவின் மேன்மையை உணர்த்துவதாகவே தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் அமையவேண்டும் என்று கூறி தம் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. நான்கைந்து பேர் தவிர, அனைவரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். தீர்மானம் நிறைவேறியது!

பெரியார் வென்றார்!

2. அ.மணிநிலவன், பொறியாளர்

ஏழாம் தீர்மானம்:

‘‘ஆட்சிப் பொறுப்பில் தலைமை இடங்களில் இருப்ப வர்கள், மதச்சார்புடைய இடங்களுக்குச் செல்வதும் சாமியார்களைச் சந்திப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. எனவே, மதச்சார்பின்மை உள்ள இந்த நாட்டில் மதவாதிகளும், சாமியார்களும் நடத்தும் நிகழ்ச்சிகளில் அவர்கள் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளக்கூடாது என்றும், மதத் தலைவர்களை  அரசு விழாக்களுக்கு அவர்கள் அழைக்கக் கூடாது என்றும் அவர்களைக் கேட்டுக் கொள்ளுகின்றது'' என்பதே அத்தீர்மானம்.

3. முனைவர் பு.இராசதுரை

எட்டாம் தீர்மானம்:

‘மனிதநேயம் என்பது உலகில் எந்தப் பாகத்திலும் நிறம், இனம், மொழி வாழ்கின்ற பகுதி இவற்றின் பெயரால் புறக்கணிக்கப்படக் கூடாது என்பதாகும். ஆனால், இந்தியாவிலோ சாஸ்திரங்களின் ஒப்புத லைப்  பெற்றுள்ள வர்ண ஜாதி முறை இந்நாட்டுப் பெரும்பான்மையான மக்களைச் சூத்திரர் என்றும், பஞ்சமர் என்றும் பழிக்கின்றது. இந்த ஜாதி முறை நியாயமற்றதாகும். எனவே, இது மனித முன்னேற்றத் தையும், மனித சமுதாய மகிழ்ச்சியையும் வளர்ப்பதற் குக் குறுக்கே உள்ள தடையாகும். இந்தத் தீமை விளைவிக்கும் முறையை நீக்கவேண்டும். தீண் டாமை என்பது ஜாதி முறை காரணமாக இருக்கிறது. எனவே, சட்டம் இயற்ற உரிமை படைத்தவர்கள் ‘தீண்டாமை ஒழிப்பு' என்ற சொற்றொடரை இந்திய அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்கிவிட்டு, ‘‘ஜாதி முறை ஒழிப்பு'' என்ற சொற்றொடரை இடம்பெறச் செய்ய சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகின்றது'' என்பதே அத்தீர்மானம்.

கடவுள் மறுப்பு, மத எதிர்ப்பு என்கிற அளவில் சுருங்கிவிடாமல், பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கப்படும் ஜாதி முறையை எதிர்த்து ஓர் அமைப்பில் திராவிடர் கழகத்தின் முயற்சியால் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது - இவ்வமைப்பின் வரலாற்றில் ஒரு திருப்பமாகும்.

இரண்டாவது முறையாக அய்.எச்.இ.யூ.வின் மாநாட் டினை அதே திருச்சியில் வரும் 5, 6, 7 ஆகிய நாள்களில் நடத்துகிறது கழகம். அந்நிகழ்வில் பன்னாட்டு அறிஞர்கள் பங்கேற்பர். விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த அரிய வாய்ப்பை

நழுவ விடாதீர் - நழுவ விடாதீர்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner