எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அத்திமாஞ்சேரிபேட்டை, ஜன.3   திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டை கிரா மத்தை சார்ந்த  பெரியார் பெருந் தொண்டர், நூறாண்டு கண்ட சுயமரி யாதை சுடரொளி, ஆசிரியர் பி.எஸ். சக்கரபாணி (வயது 100)அவர்களது இறுதி ஊர்வலம் ஜனவரி 01 திங்கள் கிழமை அன்று பிற்பகல் 3.00 மணி அளவில் அவரது காந்தி தெரு இல்லத் திருந்து இடுகாடு வரை கழக தோழர் களின் வீர வணக்க முழக்கத்தோடு,  கிராம மக்களோடு  ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

தந்தை பெரியாரின் கொள்கையை பின்பற்றி வாழ்ந்த அவர் வாழும் போது கைப்பட எழுதி வைத்த  அவரது வேண்டுகோளின் படி எந்தவிதமான சடங்கையும் பின்பற்றாமல் அவரது உடல் எரியூட்டப்பட்டது.  அதற்கு முன்பாக திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் தலைவர் வழக்குரைஞர் மா.மணி அவர்களின் தலைமையிலும் மாவட்ட செயலாளர் ந.அறிவுச்செல்வன் அவர்களது முன்னி லையிலும்  இரங்கலுரை நிகழ்த்தப் பட்டது. இதில் தலைமை கழகத்தின் சார்பாக வந்திருந்த காஞ்சி மாவட்ட தலைவர் டி.ஏ.ஜி.அசோகன், மண்டல தலைவர் பு.எல்லப்பன், அரக்கோணம் கழக மாவட்ட தலைவர் லோகநாதன், கழக சொற்பொழிவாளர் பாவலர் பொதட்டூர் புவியரசன், க.ஏ.மோகன வேலு, பாணவரம் பெரியண்ணன், கர்லம்பாக்கம் பெருமாள், கணேசன், கவிஞர் கி.எழில், புலவர் பு.வெ.வை யாபுரி,கழக பாடகர் ந.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கலுரையை நிகழ்த் தினர்.

பெரியார் உலகத்திற்கென அவர் வழங்கிய நன்கொடை, அவரது கழக பணிகள் குறித்த செய்திகளை தோழர்கள் எடுத்துக்கூறி அவரது  உறவினர்களுக்கும் தோழர்களுக்கும் இரங்கலை தெரிவித்தினர். இறுதியாக அவரது மகன் தலைமையாசிரியர் ச.இலங்கேஷ்வரன் நன்றி தெரிவிக்க , தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இரங்கலுரை அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பேராசிரியர்  சி.நீ.வீர மணி, கிருஷ்ணமூர்த்தி, சுந்தரம், தமிழ்முரசு, திராவிடமணி,  டில்லிபாபு, மாவட்ட கழக துணை செயலாளர் ஸ்டாலின் மற்றும் கழக தோழர்கள் பலர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner