எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, ஜன. 10 மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக ‘ஜாதி ஒழிய வேண்டும் -ஏன்?' என்னும் தலைப் பில் சிறப்புக்கூட்டம் 25.11.2017 அன்று மாலை 6.20 மணிக்கு மதுரை யானைக் கல்லில் உள்ள ஏ.எஸ்.ஏ. அரங்கில் நடை பெற்றது.

கருத்தரங்கத்திற்கு பகுத்தறிவாளர் கழகத் தின் மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு தலைமை தாங்கினார். பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்ட துணைச்செயலாளர்  செல்வ.சேகர்  அனைவரையும் வரவேற்றார். திராவிடர் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் வே.செல்வம், கழக வழக் குரைஞர் அணியின் மாநிலச்செயலாளர் -ஓய்வுபெற்ற நீதிபதி பொ.நடராசன், மண் டல செயலாளர் மா.பவுன்ராசா, மண்டலத் தலைவர் அ.முருகானந்தம், மாவட்டத்தலை வர் சே.முனியசாமி மாவட்ட செயலாளர் தலைமைக்கழகச் சொற்பொழிவாளர் அ.வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்ட செயலாளர் புத்தகத்தூதன் பா.சடகோபன் நிகழ்வினைஒருங்கிணைத்தார்."ஜாதி ஒழிய வேண்டும்- ஏன்?" என்னும் தலைப்பில் உரையாற்றிய வழக்குரைஞர் நா.கணேசன், தான் திராவிடர் கழகத்தில் தொடக்கத்தில் இணைந்தது பற்றியும், வழக்குரைஞர் மறைந்த கி.மகேந்திரன் அவர்களின் அணுகு முறைகள் பற்றியும் அரங்கத்தில் பகிர்ந்து கொண்டு, தந்தை பெரியாரின் வாழ்நாள் குறிக்கோள் என்பது இரண்டு அடிப் படைகளைக்கொண்டது. ஒன்று ஜாதி ஒழிப்பு மற்றொண்டு பெண் விடுதலை. ஜாதி ஒழிப்புக்காக தந்தை பெரியார் எடுத் துக்கொண்ட முயற்சிகள், போராட்டங்கள் என்பது மட்டுமல்ல, தந்தை பெரியார் தன்னுடைய தொண்டர் ஒவ்வொருவரும் ஜாதி ஒழிப்பு அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தினார். அப்படி ஜாதி மறுப்பு திருமணங்களை முடித்துக்கொண்டவர்கள் ஏராளம். ஜாதி மறுப்புத் திருமணம் என்பது அடிப்படை. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் இருவரும் ஜாதி ஒழிப்பை வலியுறுத்தியவர்கள் என்று உரையாற்றினார்.

கூட்டத்தின் இறுதியில் மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் துணைத்தலைவர் செல்ல.கிருட்டிணன் நன்றி கூறினார். கூட்டத்தில் திராவிடர் கழக உசிலை மாவட்ட தலைவர் சிவகுருநாதன், மேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பால்ராஜ், செயலாளர் வேம்பன், மாவட்ட அமைப்பாளர் நா.முருகேசன், இரா.திருப்பதி, பொறியாளர் முத்தையா, துணைச்செயலாளர் ஆட்டோ செல்வம், காசி விசுவநாதன், வழக்குரைஞர் தியாக ராசன், பேக்கரி கண்ணன், மாரிமுத்து உள் ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner