எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பார்ப்பனர்களுக்கு

திராவிடர் இயக்கத்தின் மீது கோபம் ஏன்?

பாடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழகத் துணைத்தலைவர் விளக்கம்!

கொரட்டூர், ஜன. 11 பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவு பாசறை சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கவி ஞர். கலிப்பூங்குன்றன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா ஆகியோர் பங்கு கொண்டு பேசினர்.

ஆவடி கழக மாவட்டத்தில் உள்ள பாடி பகுதியில் பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவுப் பாசறை என்ற பெயரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரு அமைப்பு வாரமொரு முறை மாலை நேர கருத்தரங்கங்களை திராவிடர் கழகத் தோழர்களின் ஒருங்கிணைப்போடு நூறு வாரங்களைத் தாண்டி நடத்தி வருகிறது. நூறாவது நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக நடத்தவேண்டும் என்று விரும்பிய அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளரான கொரட் டூர் இரா.கோபால், திராவிடர் கழகத்தின் சார்பில் துணைத் தலைவர் கவிஞர். கலிப்பூங் குன்றன், தி.மு.க.வின் சார்பில் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா ஆகியோரை அழைத்து நிகழ்ச் சியை நடத் திடவேண்டும் என்று திட்ட மிட்டு அதேபோல கடந்த மாதம் 22-.12.2017 அன்று மாலை யில் பாடியில் பொதுக்கூட்டமாக மிகச் சிறப்பாக நடத்திக் காட்டி னார்.

முழங்கிய இரட்டைக்குழல் துப்பாக்கிகள்!

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக மேடையருகில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த 40 அடி உயர கொடிக்கம்பத்தில் திராவிடர் கழகத்தின் கொடியை இளவரசு முன்னிலையில் மண்டல செயலாளர் பன்னீர் செல்வம் பலத்த ஒலிமுழக்கங் களுக்கிடையில் ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து தோழர் பகலவன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவுப் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் இரா. கோபால் தலைமையேற்று உரையாற்றினார்.

திராவிடர் கழகத்தின் மண்டல செயலாளர் பன்னீர் செல்வம், மண்டல மாணவரணிச் செயலாளர் பா. மணியம்மை, தி.மு.கழகத்தைத் சேர்ந்த வட்டச் செயலாளர் லால், தி.மு.க. தெற்குப்பகுதிச் செயலாளர் இராஜகோபால் ஆகியோர் முன் னிலையேற்றி உரை நிகழ்த்தினர். ஆவடி மாவட்டத் தலைவர் தென்னரசு இணைப்புரை வழங்கி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொடுத்தார்.

ஆரியரின் சூழ்ச்சியும் திராவிடரின் வெற்றியும்!

சிறப்புரையாற்றிய துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் தனது உரையில்:-

பார்ப்பனர்களுக்கு திராவிடர் இயக்கத்தின் மீது கோபம் ஏன்? என்ற கருத்தில் ஆதாரங்களோடு நடப்பு அரசியலையும் கலந்து பேசினார். அதில், திராவிடர் இயக்கம் ஜாதிமத பேதம் கூடாது என்று சொல்கிறது; பெண்ண டிமைத்தனம் கூடாது என்கிறது; அனைவருக்கும் அனைத்தும் என்கிறது; மூடநம்பிக்கை இல் லாத சமூகமாக நமது சமூகம் மாறவேண்டும் என்கிறது; மொத்தத்தில் எல்லா வகையிலும் சமதர்மம் வரவேண்டும் என்கிறது; அதற்காக அர்ப்பணிப் போடு செயலாற்றிக் கொண்டிருக் கிறுது என்பதைக் குறிப்பிட்டு விட்டு, இவைகளெல்லாம் ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்றிருக்கும் மனுதர்மவாதிகளுக்கு எப்படிப் பிடிக்கும்? அதனால்தான் அவர்கள் நம் மீது கோபமாக இருக்கின்றனர் என்று விளக் கினார். அந்தக் கோபத்தில்தான் ஊழல் என்று சூழ்ச்சியாக பரப்புரை செய்து நம்மை வீழ்த்த நினைத்தனர். ஆனால், நமது மானமிகு. ஆ.ராசா சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் என்றும், தொடக்கத்தில் 2ஜி பற்றி யாருமே பேசாத நிலையில் உண்மை நம்பக்கம்தான் என்று துணிந்து பேசியவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணிதான் என்றும், சனாதன வாதிகளின் நெருக்கடி காரணமாக பதவியைத் துறந்துவிட்டு திரும் பிய போது சென்னை விமான நிலையத்தில் தமிழர் தலைவரின் தலைமையில் மேளதாளத்தோடு மாபெரும் வரவேற்புக் கொடுத் ததையும் நினைவுகூர்ந்து தனது உரையை நிறைவு செய்தார்.

நீதிபதியின் தீர்ப்பிலிருந்தே ஆதாரங்களைத்தந்த தமிழன் பிரசன்னா!

முன்னதாக திராவிட முன் னேற்ற கழகத்தின் மாநில செய்தித்தொடர்பாளர் தமிழன் பிரசன்னா அவர்கள் உரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரைக்காக நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன் தினம் (21-.12.-2017) 2ஜி வழக்கின் தீர்ப்பு வெளியாகியிருந்ததை ஒட்டி, அந்த தீர்ப்பின் நகலை கையில் வைத்துக்கொண்டு திராவிட இயக்கத்தின் மீது பொய்யாக ஊழல் பிரச்சாரம் என்று குற்றம் சாட்டியவர்களின் முகமூடியை கிழிக்கும் வண்ணம் மாண்பமை நீதிபதி சைனி அவர்கள் தந்த தீர்ப்பிலிருந்த தையே ஆதாரங்களாக வைத்து உரையாற்றினார்.

உண்மை இதழுக்கான சந்தாவும்!

பெண் ஏன் அடிமையானாள் பரப்புரை தொகையும்!

நிகழ்வில் பெண் ஏன் அடிமையானாள் புத்தகப் பரப் புரையில் ஈடுபட்ட மகளிரணியினரின் சார்பில் ஆவடி மாவட்ட உண்மை வாசகர் வட்டத்தின் துணைச்செயலாளர் ஜெயந்தி அவர்கள் 100 பெண் ஏன் அடிமை யானாள்? புத்தகங்களுக்கான தொகையாக ரூபாய். 3000த் தையும், அதேபோல நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவுப் பாசறையின் ஒருங்கிணைப் பாளரான கொரட்டூர் இரா. கோபால் 10 உண்மை சந்தாக் களுக்காக தொகையாக ரூபாய் 3,500யும் கழகத்துணைத் தலை வரிடம் வழங்கி மகிழ்ந்தனர்.

கலந்து கொண்டவர்கள்!

நிகழ்ச்சியில் ஆவடி மாவட் டத்திற்கென்று தனியாக மேடை அமைக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஆவடி மாவட்ட இளைஞரணித் தலை வர் கார்வேந்தன் மற்றும் முத்துக் குமார் ஆகியோருக்கு மேடையில் ஆடையணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதேபோல நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பெரி யார், அண்ணா, கலைஞர் பகுத் தறிவு பாசறையின் சார்பில் மரி யாதை செய்யப்பட்டது.

திராவிடர் கழகத் தோழர்களில் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் ஏழுமலை, மாவட்டச் செயலாளர் சிவக்குமார், அமைப் பாளர் உடுமலை வடிவேல், அம்பத்தூர் நகரக் கழகத்தலைவர் இராமலிங்கம், தெய்வானை, விடுதலை,  வை. கலையரசன், கலைமணி, ஜெயந்தி, ஜெயப்பிரியா, கார்த்திக், பகுத்தறிவு, மூர்த்தி, ஆ.வெ. நடராசன், அம்பத்தூர் முத்துக்கிருஷ்ணன், தமிழ்மணி, செந்துறை இராசேந் திரன், ஆவடி உண்மை வாசகர் வட்டச் செயலாளரும், விடுதலை சிறுத்தைகள் மாநில இலக்கிய கருத்தியல் பரப்புரையின் துணைத் தலைவருமான கி.மு. திராவிடமணி, இளஞ்செழியன், பிச்சைமணி, கே.செல்வம், கோவிந்தராஜ், ஜனா, சுந்தர், இராவணன், சித்தார்த்தன், ராம சாமி, புகழேந்தி, சரவணன், சோழவரம் சக்கரவர்த்தி, கஜேந் திரன், கொரட்டூர் இளந்திரையன்  மற்றும் கலைஞர் மன்றம், தளபதி மன்றம், அண்ணா பகுத் தறிவு மன்றம் சார்பில் தி.மு. க.வின் இளைஞரணித்தோழர்கள் கலந்து கொண்டனர். தோழர் அமரன் நன்றியுரை கூறி நிகழ்ச் சியை நிறைவு செய்தார். --------

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner