எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜன.11 தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 24 ஆண்டுகளாக இயல், இசை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி, சமூகத்தின் முற்போக்கு வளர்ச்சிக்கு பாடுபட்டுவரும் தமிழர்களை தெரிந்தெடுத்து தை முதல்நாளாம் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை யொட்டி பெரியார் பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் மேற்கண்டுள்ளபடி பல்துறைகளில் சிறந்து விளங்குகின்ற தமிழர்களுக்கு பெரியார் விருது அறிவிக் கப்பட்டுள்ளது.

ஜனவரி 15, 16 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை பெரியார் திடலில் நடைபெறும் திராவிடர் திருநாள் விழாவில் இவ்விருதுகள் வழங்கப்பட வுள்ளன.

மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி, கவிஞர் செவ்வியன், திரைப்பட இயக்குநர் கோபி நயினார், பறையிசைக் கலைஞர் வேலு ஆசான், ஓவியர் ஹாசிப் கான் ஆகியோருக்கு முதல் நாள் (15.01.2018) விழாவிலும், இயக்குநர் - நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் (2017-ஆம் ஆண்டுக்குரியது), மாரத்தான் வீரர் சைதை மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ, இன்னிசை ஏந்தல் திருபுவனம் ஆத்ம நாதன், இயக்குநர் ஒளிப்பதிவாளர் செழியன், கவிஞர் சல்மா, ஓவியர் அபராஜிதன் ஆகியோர்க்கு இரண்டாம் நாள் (16-01-2018) விழாவிலும் பெரியார் விருது வழங்கப்படவுள்ளது.

திராவிடர் கழகத் தலைவர்

கி.வீரமணி அவர்கள் மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று விருது வழங்க விருக்கிறார். விருது பெறுவோர் அனை வருக்கும் வாழ்த்துகள்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner