எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, பிப்.10 மலேசிய நாட்டிலிருந்து மலேசிய திராவிடர் கழகத்தின் தேசிய, மாநிலத் தலைவர்கள் சென்னை - பெரியார் திடலுக்கு 9.2.2018 அன்று மாலை வருகை தந்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்துப் பேசினர்.

சென்ற ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற மலேசிய திராவிடர் கழகத்தின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் தமிழகத்தில் திராவிடர் கழக செயல்பாடுகள் பற்றி நேரில் அறிந்து கொள்ள சென்னை - பெரியார் திடலுக்கு வருகை தந்து இருந்தனர். பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் மற்றும் அன்னை மணியம்மையார் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து மரியாதையினை தெரிவித்தனர். தமிழர் தலைவரிடம் மலேசிய திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள் பற்றி எடுத்துக் கூறினர்.

பெரியார் காட்சியகம், பெரியார் புத்தக நிலையம், பெரியார் பகுத்தறிவு ஆராய்ச்சி நூலகம் மற்றும் பெரியார் திடலில் செயல்பட்டுவரும் இயக்கத்தின் அமைப்புகளைப் பார்வையிட்டனர்.

பின்னர் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் மலேசிய திராவிடர் கழகத்தின் தலைவர்களுக்கு சிறப்புச் செய்யப்பட்டது. பொறுப்பாளர்கள் அனைவருக்கும் தமிழர் தலைவர் சால்வை அணிவித்து, இயக்கப் புத்தகங்களை நினைவுப் பரிசாக வழங்கினார்.

பெரியார் திடலுக்கு வருகை தந்த மலேசிய திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள்:- பொன்.பொன்வாசகம் (தேசியபொதுச் செயலாளர்), சா.பாரதி (தேசியப் பொரு ளாளர்), பொ.இராமன் (தேசிய மத்திய செயலவை உறுப்பினர்), கு.கிருட்டிணன் (தேசியக் கணக்காயர்), த.அண்ணாமலை (பினாங்கு மாநிலத் தலைவர்), இரா.கெங்கையா (பேராக் மாநிலத் தலைவர்), வ.கதிரவன் (கெடா மாநிலத் தலைவர்), கா.கோபால் (சிலாங்கூன் மாநில துணைத் தலைவர்), அய்.அர்ச்சுனன் (பேராக் மாநில செயலவை உறுப்பினர்).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner