எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தூத்துக்குடி, ஏப்.16 தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் 5ஆவது கூட்டம் பெரியார் மய்யம், அன் னை மணியம்மையார் அரங்கம், தூத்துக்குடியில் 24.3.2018 அன்று மாலை 6 மணிக்கு நடை பெற்றது.

மாவட்ட கழக தலைவர் பேராசிரியர் தி.ப.பெரியாரடியான் தலைமை தாங்கி உரையாற்றினார். முன்னிலை வகித்த மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் பொ.சாந்தி, மண்டல இளைஞரணித் தலைவர் தி.இல.கார்த்திகேயன் ஆகியோர் உரைக்குப்பின் மாண வரணித் தோழர் செ.வள்ளி, அன்னை மணியம்மையாரின் சாதனைகள் என்ற தலைப்பில் கட்டுரை படித்தார். சிறப்புரையாக மண்டலத் தலைவர் மா.பால்ராசேந்திரம், அன்னை மணியம்மையாரின் வாழ்வும் தொண்டும் என்ற பொருளில் கருத்துகளை எடுத் துக் கூறினார். இறுதியாக மாவட்ட செயலாளர் மு.முனிய சாமி நன்றி கூற நிகழ்ச்சி நிறை வுற்றது. இந்நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர் இரா. ஆழ்வார், மாவட்டத் துணைத் தலைவர் பொ.செல்வராசு, மாவட்ட இளைஞரணித் தலை வர்  த.செல்வராசு, மாவட்ட மாணவரணித் தலைவர் ம.தென் னவன், அமைப்பாளர் ம.முல் லையரசு, மாநகர ப.க. தலைவர் ப.பழனிச்சாமி, வழக் குரைஞர் ந.செல்வம், அ.பார்த்தசாரதிக் கண்ணன், பொ.போஸ், செ.அழகு, ரெங்கசாமி, பெரியார் பிஞ்சு கவுதம், சி.முருகராசா உட்படத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner