எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, மே 8- பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம் 29.4.2018 அன்று காலை 10 மணியளவில் புதுச் சேரி பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.

புதுச்சேரி உள்ளிட்ட தமிழக பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் புதுவை மு.ந.நடராசன் தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி, புதுச்சேரி மண்டல தலைவர் இர.இராசு, புதுச்சேரி பகுத்தறி வாளர் கழக தலைவர் ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுச் சேரி, விழுப்புரம், விருத்தா சலம், திண்டிவனம், கடலூர் மாவட்ட ப.க. பொறுப்பாளர் கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். இறுதியாக சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொண்ட பகுத்தறி வாளர் கழக மாநில பொதுச் செயலாளர் இரா.தமிழ்ச்செல் வன் அவர்கள் பகுத்தறிவாளர் கழக செயல்பாடுகள் பற்றியும், பகுத்தறிவாளர் கழகத்துக்கு உறுப்பினர்களை சேர்க்க வேண் டும் எனவும், பகுத்தறிவாளர் கழக பணிகளில் முக்கியமான பணியான நமது இயக்க இத ழான The Modern Rationalist இதழை அனைத்து பகுதிகளி லும் பரப்ப சந்தா சேர்க்கும் பணியை தீவிரப்படுத்தி சந்தா சேர்க்க வேண்டும் எனவும் இதற்கு பகுத்தறிவு ஆசிரியரணி பொறுப்பாளர்கள் உதவிகரமாக இருக்க வேண்டும் எனவும், வருகிற 19, 20 தேதிகளில் ஆத்தூரில் நடைபெறும் பெரி யாரியப் பயிற்சி முகாமுக்கு புதுச்சேரி மற்றும் கலந்துரை யாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் பெரியாரியப் பயிற்சி முகாமுக்கு அதிக அள வில் கலந்து கொள்ள வேண் டும் என்றும் தமிழர் தலைவரின் அடியொற்றி இயக்க பணி களில் மும்முரமாக ஈடுபட வேண்டும் என பல்வேறு இயக்க சம்பவங்களை எடுத்துக் காட்டி உரையாற்றினர். இறுதி யாக பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பெரியார் பெருந் தொண்டர் அரியூர் கி.வ.இராசன் நன்றி நவின்றார். வந்திருந்த அனைவருக்கும் பகுத்தறிவாளர் கழக வெளியீடுகளை புதுவை மு.ந.நடராசன் வழங்கினார்.

1) ஒவ்வொரு மாவட்டத் திற்கும் உறுப்பினர் சேர்க்கைக் கான இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. மாவட்டத்திற்கு 100 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

2) ஆத்தூரில் மே 19, 20 தேதிகளில் பெரியாரியப் பயிற்சி முகாமுக்கு மாவட்டந் தோறும் 10 பேர் கலந்து கொள் வதென முடிவு செய்யப்பட்டது.

3) பெரியார் 1000 நிகழ்ச் சியை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் ஏற்று சிறப்பான முறை யில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கலந்துரையாடல் கூட்டத் தில் பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் பா.குமரன், விடுதலை வாசகர் வட்ட புதுச்சேரி தலைவர் இரா.சடகோ பன், விருத்தாசலம் மாவட்ட ப.க. தலைவர் இரா.பெரியார் செல்வம், திண்டிவனம் மாவட்ட ப.க.தலைவர் சா.மாரிமுத்து, புதுச்சேரி நகராட்சி அமைப்பாளர் மு.குப்புசாமி, திண்டிவனம் ப.க. கே.மாரி முத்து, அண்ணாகிராமம், ஒன் றிய கழக பொறுப்பாளர் இ.இராசேந்திரன், கடலூர் கவிஞர் க.எழிலேந்தி, வடசென்னை மாவட்ட ப.க. பொறுப்பாளர் கோவி.கோபால், முகமது நிஜாம், காசி தனுசு, செ.தர்ம லிங்கம், புதுச்சேரி நகராட்சி கழக தலைவர் மு.ஆறுமுகம், உழவர்கரை நகராட்சி கழக அமைப்பாளர் ஆ.சிவராசன், துணை அமைப்பாளர் கா.நா. முத்துவேல், புதுச்சேரி பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் கோ.கிருட்டிணராசு, என்.நட ராசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner