எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆயக்காரன்புலம், மே 8- முது பெரும் சுயமரியாதை வீரரும் முன்னாள் நாகை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவருமான ஆயக்காரன் புலம் க.சுந்தரம் நான்காமாண்டு நினைவு (4.5.2018) ஆயக்காரன் புலம் முதல்சேத்தி ஊராட்சி மன்றம் அருகில் அவரது நினை வுக் கல்வெட்டு மேடையில் அமைந்திருக்கும் கொடிக்கம் பத்தில் மாவட்டத் தலைவர் கி. முருகையன் கொடியேற்றினார்.

க.சுந்தரம் அவர்களது உற்ற நண்பர்களாக, கழகத்தில் அடி நாள் தொட்டு என்றும் மாறாது விளங்கும் பெரியார் பெருந் தொண்டர்கள் கோ.சோமு, சா.சிங்காரவேலு, குரவப்புலம் எஸ்.முத்தையன், மருதூர் க. திராவிடமணி, இராசி.கதிர வன், பொதுக்குழு உறுப்பினர் கோ.சு.மணி, ஆசிரியர்கள் சொ.மாறன், சி.முத்துச்சாமி, சுதாகர், பாஸ்கர், சோ.சேகர், தமிழ்ச்செல்வன், கென்னடி மற்றும் ஊர்ப் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர். வழக்கம்போல் க.சுந்தரம் அவர்களது மகன் பெரியார் பெருந்தொண்டர் க.சு.அன்பழ கன் குடும்பத்தினர்கள் நன்றி உணர்வோடு அனைவரையும் வரவேற்று சிற்றுண்டி வழங்கி தங்களது அன்பை தெரிவித்த னர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner