எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வல்லம், மே 9- 5.5.2018 அன்று மாலை 6 மணியளவில் வல்லம் பேருந்து நிலையத்தில் தஞ்சை ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார் பில் பட்டுக்கோட்டையில் மே 29 அன்று நடைபெறும் இளைஞர் எழுச்சி மாநாட்டு விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வருகை தந்த அனை வரையும் வரவேற்று ஒன்றிய இளைஞரணி தலைவர் ந.வெங்கடேசன் வரவேற்று உரை யாற்றினார்.

திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் கு.மணியன் தலைமையேற்று உரையாற் றினார். வல்லம் நகர கழகத் தலைவர் ம.அழகிரிசாமி, தஞ்சை ஒன்றிய செயலாளர் செ.ஏகாம்பரம், வல்லம் டி.மூர்த்தி, திமுக எஸ்.ஏ.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் கஜேந்திரன், செய்தி தொடர்பாளர் பவுண்.அந்தோணி ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினார்.

தஞ்சை மாநகரத் தலைவர் ப.நரேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஜ யக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு உரை யாற்றினர். தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.ராஜவேல் தொடக்கவுரையாற் றினார். மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனிவேல் கருத்துரையாற்றினார். திராவிடர் கழக தலைமை கழக பேச்சாளர் இராம.அன்பழகன் அவர்கள் சிறப்புரையாற் றினார். வல்லம் நகரச் செயலாளர் அ.இரா பர்ட் இறுதியில் நன்றி கூறினார்.

தஞ்சை மண்டல இளைஞரணி செயலா ளர் இரா.வெற்றிக்குமார், தஞ்சை மாநகரச் செயலாளர் சு.முருகேசன், திருச்சி மூர்த்தி, ஓட்டுனர் முத்துகிருஷ்ணன் மற்றும் ஏராள மான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அம்மாப்பேட்டை

அம்மாப்பேட்டை ஒன்றியம், கோவிலுர், கிராமத்தில் திக்கெட்டும் பாய்வோம்.திரா விடத்தைக் காப்போம், மண்டல தி.க.இளை ஞரணி மாநாட்டை விளக்க தெருமுனைக் கூட்டம் ஒன்றிய தி.க.செயலாளர் செ.காத் தையன் தலைமையில். ஒன்றிய தி.க. தலை வர் கி.ஜவகர், தி.மு.க. கிளைச் செயலாளர்  மா.திருநாவுக்கரசு, கவிஞர் கூத்தரசன், கம்பன்தும்பி ஜெயராமன். ஒன்றிய ப.க. தோழர் ஆசிரியர் ப.மாரிமுத்து .பெரியார் பட்டறை இரா.காமராசு ஆகியோர் முன் னிலை வகித்தனர். ஒன்றிய தி.க.அமைப்பாளர்  சாமி.தமிழ்செல்வன் வரவேற்று பேசினர். மாவட்ட தலைவர் சி.அமர் சிங் தொடக்க வுரையாற்றினார். தலைமைக் கழகப் பேச் சாளர் இரா.அன்பழகன்  சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாநில ப.க.துணைத் தலைவர் கோபு.பழனிவேல், மாவட்ட தி.க.அமைப் பாளர் ப.தேசிங்கு, மாவட்ட ப.க.செயலாளர் ச.அழகிரி, மாவட்ட ப.க.அமைப்பாளர் பொ.இராஜீ, ஒன்றிய தி.க.துணைச் செயலா ளர் வை.இராசேந்திரன் விடுதலை அறிவு செல்வன்  அண்ணா.இராவணன், தஞ்சை அ.பெரியார் செல்வன், பி.தங்கமணி, போட்டோ இரவி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். வழக்குரைஞர் இரா.திலீபன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் அதிக பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பாப்பாநாடு

4.5.2018 அன்று மாலை உரத்தநாடு ஒன்றி யம் பாப்பாநாட்டில் நடைபெற்றது.மாவட்ட இளைஞரணி செயலாளர் வே. இராஜவேல் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்   உரத்தநாடு நகர துனைத் தலைவர் சாமி.அரசிளங்கோ  தலைமையேற்று உரையாற்றினார். ஒன்றிய செயலாளர், அ. உத்திராபதி மாவட்டச் செயலாளர், அஅருண கிரி கழக பேச்சாளர்  வழக்குரைஞர், சி.கோவிந் தராசு ஆகியோர் உரையாற்றியதை  தொடர்ந்து இறுதியாக தலைமைக் கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன்  சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில வீதி நாடக கலைக் குழு அமைப்பாளர் பி.பெரியார் நேசன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் இரா.சுப்ர மணியன். நா.பிரபு, மாவட்ட மாணவரணி தலைவர்வே.தமிழ்செல்வன், தெற்குநத்தம் இளைஞரணி தலைவர் குமரவேல் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக பத்திக்கோட்டை த.முரசு நன்றி கூறினார்

பெருமகலூர்

04-.05.-2018 அன்று மாலை சேதுபாசத்திரம் ஒன்றியம் பெருமகலூரில்  ஒன்றிய தலைவர்  பெரியராசன் தலைமையில் நடை பெற்றது

தலைமைக் கழக பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா  சிறப்புரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர்  அரு.நல்லதம்பி   மாவட்ட அமைப்பாளர் வை.சிதம்பரம் மாவட்ட ப.க புரவலர் ஆசிரியர் வேலு மாவட்ட இளைஞரணிதலைவர் சோம.நீல கண்டன் ஆகியோர் உரையாற்றினர். கூட்டத் தில் ஏராளமான கழகத் தோழர்களும்  பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner