எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆவடி, மே 9-- ஆவடி உண்மை வாசகர் வட்டத்தின் ஏப்ரல் மாதக்கூட்டத்தில் திராவிட மாணவர் கழகத்தின் மாநில கூட்டுச்செயலாளர் சே.மெ.மதிவதனி “அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?“ என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் திராவிடர் கழக (இயக்க) வெளியீடான “இராமன் இராமாயணம், கிருஷ்ணன் - கீதை” என்ற நூலின் வெளி யீட்டு விழா நடைபெற்றது.

ஆவடி மாவட்டம் உண்மை வாசகர் வட்டம் மாதந் தோறும் அந்தந்த மாதத்தில் வருகின்ற சிறப்பு வரலாற்றுக் குறிப்புகள், நடப்பு அரசியல் ஆகியவற்றின் அடிப்படை யில் ஒரு தலைப்பைத் தேர்வு செய்து, தகுந்த ஒருவர் உரைநிகழ்த்துவார். அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் பிறந்த சமூகப் புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கரின் 128 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் முகத்தான் 15-.4.2018 அன்று காலை 10 மணிக்கு “அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?” என்ற தலைப்பில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தியது. அதில் திராவிட மாணவர் கழகத்தின் மாநில கூட்டுச்செயலாளர் சே.மெ.மதிவதனி பேசினார்.

க.வனிதா (தலைவர்), இ.தமிழ்மணி (செயலாளர்), சி.ஜெயந்தி (துணைத்தலைவர்), க.கலைமணி (துணைச் செயலாளர்) ஆகியோர் உண்மை வாசகர் வட்டத்தின் புதிய பொறுப்பாளர்களாகவும், வெ.கார்வேந்தன், இராவ ணன், வஜ்ரவேலு, ஆ.ப.நடராசன், வை.கலையரசன், ஆவடி கோபாலகிருஷ்ணன், பெரியார் மாணாக்கன், கீதா ராமதுரை, தேன்மொழி, பூவை.வெங்கடேசன் ஆகி யோர் உண்மை வாசகர் வட்டத்தின் செயற்குழு உறுப் பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டு க.வனிதா அவர்களின் தலைமையில் மிகச்சிறப்பான ஒருங்கிணைப் பில் புத்தாக்கத்துடன் நடைபெற்றது. ஏற்கெனவே உண்மை வாசகர் வட்டத்தின் பொறுப்பாளர்களான செந் துறை சா.இராஜேந்திரன் (தலைவர்), கி.மு.திராவிடமணி (செயலாளர்), பூவை. செல்வி (துணைத்தலைவர்) ஆகி யோர் புரவலர்களாக அறிவிக்கப்பட்டனர். செவ்வாப் பேட்டை கோரா அவர்கள் தொடர்ந்து புரவலராக இருந்துவருகிறார்.

உண்மை வாசகர் வட்டத்தின் நிகழ்வு தொடங்கும் முன்பாக அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, திராவிடர் கழக (இயக்க) வெளியீடான “இராமன் - இராமாயணம், கிருஷ்ணன் - கீதை” என்ற நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது. நூலை சென்னை மண்டலத்தலைவர் வி.பன்னீர்செல்வம் வெளியிட தோழர்கள் வரிசையாக வந்து பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து உண்மை வாசகர் வட்டத்தின் செயலாளர் இ.தமிழ்மணி அனைவரையும் வரவேற்றுப்பேசினார். உண்மை வாசகர் வட்டத்தின் துணைத்தலைவர் சி.ஜெயந்தி, மண்டலச்செயலாளர் வி.பன்னீர் செல்வம், மாவட்டத்தலைவர் பா.தென்னரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலப்பொறுப்பாளர் கி.மு.திராவிடமணி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.

சிறப்புப் பேச்சாளர் தனது உரையில், “இந்துமதம் சமத்துவமின்மை என்ற கோட்பாட்டை அடித்தளமாகக் கொண்டது. அந்த சமத்துவமின்மைக் கோட்பாட்டை முற்றிலும் ஏற்காத அம்பேத்கர், எப்படியெல்லாம் இந்து மதத்தை எதிர்த்துப் போராடினார். இந்தியாவே காந்தியை மகாத்மா என்று போற்றிக் கொண்டிருந்தபோது, தந்தை பெரியாரைப்போலவே எப்படி காந்தியுடன் மாறு பட்டார். “நான் இந்துவாகப் பிறந்துவிட்டேன். அது என் கையில் இல்லை. ஆனால், ஒருபோதும் இந்துவாகச் சாகமாட்டேன்!” என்று அவர் சூளுரைக்க வேண்டிய தேவை ஏன் வந்தது? இந்து மதத்தைவிட்டு வெளியேற அவர் தந்தை பெரியாரிடம் ஆலோசனை கேட்டது, அதற்கு தந்தை பெரியார் சொன்னது என்று விளக்கமாகப் பேசிவிட்டு, இந்துத்துவம் அதிர்ச்சியடையும் வகையில் இந்து மதத்தைவிட்டு வெளியேறி பவுத்த நெறியைத் தழுவினார் என்றும், அப்போது அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழிகள் என்னென்ன? அதைப்பின்பற்றாமல் அம்பேத்கரியவாதிகள் என்னென்ன தவறுகளைச் செய் கின்றனர். எப்படி அவரை ஒரு ஜாதிச்சிமிழுக்குள் அடைக்கின்றனர் என்றும் பல்வேறு கருத்துகளை எடுத்துக்கூறி அம்பேத்கரும், பெரியாரும் தனிமனிதர்கள் அல்லர் தத்துவங்கள்! என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உரையாற்றினார். இறுதியில் உண்மை வாசகர் வட்டத்தின் பொருளாளர் கோ.முருகன் அவர்கள் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவுசெய்தார்.

முன்னதாக காலஞ்சென்ற இனமான நடிகர் மு.அ. கிரிதரன், சென்னையின் மேனாள் மேயர் சா.கணேசன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. ஒரு நிமிடம் அனைவரும் அமைதியாக எழுந்து நின்று இருவரின் தொண்டைப்போற்றும் வகை யில் மரியாதை செய்தனர். தொடர்ந்து இனமான நடிக ரின் உருவப்படத்தை ஆவடி மாவட்டத் தலைவர் பா. தென்னரசு அவர்கள் திறந்துவைத்து,. தனது இரங்கலு ரையில் மு.அ.கிரிதரன், சா.கணேசன் இருவரது பண்புக ளையும், பணிகளையும் பாராட்டிப் பேசினார். இனமான நடிகரின் படத்திறப்பையொட்டி கோவையிலிருந்து அவரது வளர்ப்பு மகள் சித்ரா வருகை தந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

உண்மை வாசகர் வட்டத்தின் நிகழ்ச்சிக்கு முன்னதாக மாவட்டத்தலைவர் பா.தென்னரசு அவர்களின் தாய் பவுனம்மாள் பாலகிருஷ்ணன் அவர்களின் 104 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதற்காக அவரது தாயார் பவுனம்மாள் பாலகிருஷ்ணன் மற்றும் பேத்தியும், மாவட்டத்தலைவர் பா.தென்னரசு அவர்களின் மகளு மான பொறியாளர் மீனா கார்த்திக் ஆகியோர் வருகை தந்திருந்தனர். 69 பேரன் பேத்திகளுடன் பெருவாழ்வு வாழ்ந்த அவரது பிறந்தநாளையொட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. 103 வயது முடிந்து 104 ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருந்த போதிலும், தானாக படியேறி முதல் மாடிக்கு வருகை தந்து தனது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பவுனம்மாள் பாலகிருஷ் ணன் அவர்களுக்கு அனைவரும் மிகுந்த வியப்புடனும், உற்சாகத்துடனும் வாழ்த்துத் தெரிவித்து மகிழ்ந்தனர். பவுனம்மாளுக்கு உண்மை வாசகர் வட்டத்தின் புரவலர் பூவை செல்வியும், பொறியாளர் மீனா கார்த்திக் அவர்க ளுக்கு உண்மை வாசகர் வட்டத்தின் தலைவர் க.வனிதா  அவர்களும் பயனாடையணிவித்து மரியாதை செய்தனர்.

நிகழ்ச்சியில் ஆவடி பகுதித்தலைவர் அருள்தாஸ் (எ) இரணியன், அம்பத்தூர் பகுதித்தலைவர் பூ.இராம லிங்கம், மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட துணைச்செயலாளர் இளவரசன், மாவட்ட இளைஞரணித் தலைவர் வெ.கார்வேந்தன், மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், கி. மணிமேகலை, பூவை பகுதித் தலைவர் பெரியார் மாணாக்கன், பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவு பாசறையின் ஒருங்கிணைப்பாளர் கொரட்டூர் கோபால், ஆவடி கோபாலகிருஷ்ணன், கலைவேந்தன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இராமதுரை, கொரட்டூர் பகுதிச் செயலாளர் தங்கரவி, திராவிட மாணவர் கழகத்தின் மாநில துணைச்செயலாளர் பார்த்திபன், பெரம்பூர் அமுதவல்லி தணிகாசலம், மாணவரணித் தோழர்கள் வ.ம.வேலவன், விஜய், தொண்டறம், பெரியார் பிஞ்சு கா.சமத்துவமணி, இனியன் மற்றும் ஆவடி நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner