எழுத்துரு அளவு Larger Font Smaller Font


நியூயார்க், மே 9- அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த ட்ரெண்டன் மக்ன்லி என்ற 13 சிறுவனுக்கு சமீபத் தில் நடந்த விபத்தில் தலையில் பயங்கரமாக அடிப்பட்டது. இதில் அவனுடைய மூளை அதிக அளவில் பாதிக்கப்பட் டுள்ளது. அவனுக்கு 3 முறை தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அவ னுக்கு உடல்நலம் சரியாக வில்லை.

கோமா நிலைக்கு சென் றான். இதனால் சிறுவனின் பெற்றோர் அவனின் உடல் உறுப்புகளை கொடையாக அளிக்க முடிவு செய்தனர். அதற் கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. சிறுவனின் உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்வதற்கு முந்தைய நாள் அவனுக்கு நினைவு திரும்பியது. தற்போது அவன் உடல்நலம் தேறிவருகிறான் என மருத்துவர்கள் தெரிவித் தனர். இறந்து விடுவான் என மருத்துவர்களால் கூறப்பட சிறுவன் உயிர்பிழைத்த சம்ப வம் பெரும் வியப்பை ஏற் படுத்தியுள்ளது.

ட்ரெண்டன் மக்ன்லியின் தாய் அவனின் அறுவை சிகிச் சைக்காக முகநூல் மூலம் நன் கொடை கேட்டிருந்தார். அவ ருக்கு 48 நாட்களில் 6.8 லட்சம் நிதியுதவியாக கிடைத்தது. இந் நிலையில், சிறுவனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner