எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அறியாமை இருளை அகற்ற அகல்விளக்குப் போதுமானதல்ல

தீப்பந்தமே தேவை என்று தீப்பந்தம் ஏந்தி வந்த வீராங்கனைகளே!

சனாதனத்தைச் சாடி சமதர்மத்தை நாடுங்கள்-

பெண்களின் உண்மை விடுதலை இங்கேதானிருக்கிறது

கணியூர், மே 10  பெண்களின் உண்மையான விடுதலை சனாதனத்தைச் சாடி - சமதர்மத்தை நாடுவதில்தான் இருக் கிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

6.5.2018 அன்று கணியூரில் நடைபெற்ற திராவிட மகளிர் எழுச்சி மாநாட்டில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

சமூகநீதிப் போராளி அன்பிற்குரிய அருமைத் தோழர் சுப்புலட்சுமி ஜெகதீசன்

எழுச்சியோடு காலை முதல் இந்தக் கணியூரில் நடை பெறக்கூடிய எழுச்சி மிகுந்த மகளிர் எழுச்சி மாநாட்டிற்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களே,

இச்சிறப்பான மாநாட்டில் கொடியேற்றிய திராவிடர் கழக மகளிரணி அமைப்பாளர் அன்பிற்குரிய அருமைத் தோழர் தமிழ்ச்செல்வி அவர்களே,

இந்த சிறப்பு மிகுந்த மாநாட்டினைத் திறந்து வைத்த திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளரும், பெரியார்  தத்துவத்தில் ஊறித் திளைத்தவரும், சமூகநீதிப் போராளியுமான அன்பிற்குரிய அருமைத் தோழர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு நேரம் கருதி உரை யாற்றுவதைத் தவிர்த்த கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

இம்மாநாட்டில் சிறப்பாக உரையாற்றிய திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி மாநில செயலாளரும், மேனாள் அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் அவர்களே,

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் இள.பத்மநாபன் அவர்களே,

மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் அருமைத் தோழர் இரா.ஜெயராமகிருஷ்ணன் அவர்களே, கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு சண்முகம் அவர்களே,

மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக வழக்குரைஞரணி செயலாளர் செல்வராஜ் அவர்களே,

மண்டலத் தலைவர் கருணாகரன் அவர்களே, மண் டல செயலாளர் சந்திரசேகரன் அவர்களே, தாராபுரம் மாவட்டக் கழகத் தலைவரும், இந்த மாநாட்டினுடைய வெற்றிக்கு முழுமையாக உழைத்த அருமைத் தோழரும், செயல்வீரருமான கிருஷ்ணன் அவர்களே,

தாராபுரம் மாவட்டக் கழக செயலாளர் சக்திவேல் அவர்களே, இளைஞர் காங்கிரசு தலைவர் கார்த்திக்குமார் அவர்களே,

இம்மாநாட்டின் தொடக்கத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியைத் தொடங்கி வைத்த பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி அவர்களே,

பேரணிக்குத் தலைமை தாங்கிய கோவை மண்டல மகளிரணி செயலாளர் கலைச்செல்வி அவர்களே,

வாழ்விணையர்களைவிட, கொள்கையை அதிகமாக மணம் செய்துகொண்டவர்கள்!

இம்மாநாட்டினை ஒரு அய்ம்பெரும் செல்விகள் சிறப்பாக நடத்தினார்கள். எல்லாம் செல்விகளாக இருக்கிறார்கள். திருமணமான செல்விகள். அந்தத் திருமணம் என்பது இருக்கிறதே, அவர்களுடைய வாழ்விணையர்களைவிட, கொள்கையை அதிகமாக மணம் செய்துகொண்டவர்கள் என்பதுதான் மிக முக்கியமானது.

பிறைநுதல் செல்வி, தமிழ்ச்செல்வி, செந்தமிழ்ச்செல்வி, கலைச்செல்வியில் இரண்டு செல்விகள் என்று கணக்குப் போட்டுச் சொல்லலாம். இந்த செல்விகளோடு ஒரு கனியும் இருக்கிறது. அதுதான் இன்பக்கனி.

ஒரு வரலாற்றுச் சிறப்புமிகுந்த மாநாடாக...

இவர்களோடு சேர்ந்து கிருஷ்ணன் அவர்களுடைய உழைப்பு; தாராபுரம் கழகத் தோழர்களின் உழைப்பு. உங்களைப் போன்ற அத்துணைத் தோழர்களின் ஒத்துழைப்பு, வணிகர்கள் மற்றவர்களின் ஒத்துழைப்பு என்று அனைத்தும் சேர்ந்து இந்த மாநாட்டை ஒரு வரலாற்றுச் சிறப்புமிகுந்த மாநாடாக ஆக்கியிருக்கிறது.

கணியூர் என்பது கழக வரலாற்றில் நீண்ட காலத்திற்கு முன்பே பதிவான ஒரு ஊர். இங்கே வரும்பொழுதெல்லாம் நம்முடைய அருமைத் தோழர் மதியழகன் அவர்கள், அதேபோல, அவருடைய மூத்த சகோதரர் அய்யா முருகேசன் அவர்கள், இளைய சகோதரர் கிட்டு என்று அழைக்கப்படக்கூடிய கிருஷ்ணசாமி போன்றவர்கள் எல்லாம் எங்களுடைய குடும்ப சகோதரர்கள்.

அத்துணை பேருக்கும் தலைவணங்கி நன்றி செலுத்துகிறேன்!

இன்றைக்கு மதியம்கூட அவருடைய பேரன் எங் களை அவருடைய வீட்டிற்கு அழைத்து, இன்னமும் அந்தப் பாரம்பரியம் விட்டுப் போகவில்லை என்பதற்கு அடையாளமாக, விருந்து சாப்பிட்டுவிட்டு நாங்கள் வந்தோம். திராவிட இயக்கம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்; எந்தக் கொம்பனாலும் இதை அசைத்துவிட முடியாது. இதற்குப் பெரிய பெரிய வரலாறு உண்டு. அத்துணை வரலாறுகளையும் சொல்ல முடியாத அளவிற்கு இன்றைக்கு நேர நெருக்கடி.

வைதீகர்கள் சொல்வார்கள் போதாத காலம், போதா காலம் என்று. இன்றைக்கு எனக்குத்தான் போதாத காலம் - காலம் போதவில்லை. பேசுவதற்கு நேரம் போதவில்லை. எடைக்கு எடைப் பொருள்கள் எல்லாம் கொடுக்காமல் இருந்தால், நிறைய நேரம் கிடைத்திருக்கும் உரையாற்றுவதற்கு. இருந் தாலும், கொடுத்ததற்கு மிக்க மகிழ்ச்சி. அதற்காக அத்துணை பேருக்கும் தலைவணங்கி நன்றி செலுத்துகிறேன்.

கணியூர் மாநாடு மறக்க முடியாத வரலாற்று மாநாடாகும்

என்னுடைய நாணயத்தை எடை போட்டீர்கள் - நாண யத்தால். பெரியாருடைய தொண்டர்களின் நாணயம் இருக் கிறதே, அது எப்பொழுதும் பழுதுபடாத நாணயம். நான் பெரியாருடைய தொண்டர்களுக்குத் தொண்டன் - தோழன் - பணியாளன். அப்படிப்பட்ட என்னை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக கொடுத்திருக்கிறீர்கள். தோழர் கிருஷ்ணன் போன்றவர்களுடைய கடைத் திறப்பு விழா விற்கு வரவில்லையானாலும், மடைதிறந்ததைப்போல, இன்றைக்கு மக்கள் திரண்டிருக்கக் கூடிய வகையில் நீங்கள் இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தியிருக்கிறீர்கள். அத்துணை மக்களுக்கும் என்னுடைய தலைதாழ்ந்த வணக்கத்தையும், நன்றியையும், கணியூர் மாநாடு மறக்க முடியாத வரலாற்று மாநாடாகும் என்பதைப் பதிய வைத்து என்னுடைய உரையைத் தொடங்குகிறேன்.

இங்கே நீங்கள் கொடுத்த பொருள்கள் எல்லாம் எங்களு டைய வீட்டிற்குப் போகாது. இது என்னுடைய சொந்த சொத் தல்ல. இவை அத்தனையும் இயக்கத்தின் சொத்து. தந்தை பெரியார் அவர்கள், அவரிடம் கையெழுத்துப் போடுவதற்குக் கொடுத்த நாலணாவைக்கூட முடிச்சுப் போட்டு வைத்து, அதைப் பெரிதாக்கித்தான், இன்றைக்குப் பல்கலைக் கழகங் களாக அவை மிளிர்கின்றன; குழந்தைகள் இல்லமாக நடந்துகொண்டிருக்கின்றன; முதியோர் இல்லங்களாக நடந்துகொண்டிருக்கின்றன; மகளிர் விடுதலைக்கான வாழ்வாக நடந்துகொண்டிருக்கின்றன; ஏடுகளாக நடந்து கொண்டிருக்கின்றன. உலகம் முழுவதும் பெரியார், பெரியார், பெரியார்! என்று உணர்ந்து இருக்கிறார்கள்.

சில சிறியார்கள், பெரியார் யார் என்று தெரியாத சிறியார்கள்; அவர்களோடு சேர்ந்த சில நரியார்கள் - எல்லோரும் சேர்ந்து வைக்கக் கூடாத இடத்திலே கை வைத்துவிட்டு, இன்றைக்கு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், மின்சாரத்திலே சிக்கிக் கொண்டவர்களைப் போல.

மகளிர் தீப்பந்தத்தை ஏந்தி வரவேற்றார்கள்

அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், இந்த மாநாடு என்பது மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த மாநாடு மகளிர் மாநாடு - மகளிரே முன்னின்று நடத்திய மாநாடு. எல்லாத் துறைகளிலும் பார்த்தீர்கள் - எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. மகளிர் இன்று தீப்பந்தத்தை ஏந்தி வரவேற்றார்கள் - அதுதான் மிக முக்கியம்.

சனாதனத்தைச் சாடு -  சமதர்மத்தை நாடு!

நீண்டப் பேரணியைவிட, அந்த உற்சாகம் மிக அதிகமாக இருக்கிறது. ஏனென்று சொன்னால், இருட்டு அறியாமை வந்து நம்மை கவ்வ இருக்கின்ற காலகட்டத்தில், வெறும் அகல் விளக்குகளை ஏந்தமாட்டோம் - எங்கள் கைகளில் தீப்பந்தத்தைத் தான் ஏந்துவோம் - இந்த சமுதாயத்திலுள்ள மூடநம்பிக்கைகளை சுட்டெரிக்க - சனாதனத்தைச் சாடு -  சமதர்மத்தை நாடு

என்ற உணர்வை இங்கே சொன்னார்கள் என்று சொன் னால், அதனுடைய அடிப்படை என்ன என்பதைத்தான்  இந்தக் குறுகிய நேரத்தில் விளக்க இருக்கிறேன்.

இதில்தான் பெண்களின் உண்மையான விடுதலை இருக்கிறது.

ஏராளமானபுத்தகங்கள்இங்கேஇருக்கின்றனஅருள் கூர்ந்து ஒவ்வொருவரும் அந்தப் புத்தகங்களை வாங்கிப் படிக்கவேண்டும்; மற்றவர்களுக்கும் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பெரியார் தொண்டர்களுக்கும் அதே மரியாதை!

இங்கே அவர்கள் எனக்குக் கொடுத்த பொருள்களுக்காக நான் முதலில் நன்றி செலுத்தவேண்டும். இதுவரையில் அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு, எல்லா பொருள்களையும் எடைக்கு எடை கொடுத்திருக்கிறார்கள். அதேபோல, பெரியார் தொண்டர்களுக்கும் அதே மரியாதை. தந்தை பெரியார் இருந்தால், நாங்கள் எதைச் செய்வோமோ - பெரியார் பணியைச் செய்கிறவர்களுக்கும் அதே மரியா தையை நாங்கள் காட்டுகிறோம் என்ற உணர்வோடு செய்தி ருக்கிறீர்கள் - அதற்காக தலைவணங்கி நன்றியை செலுத்திக் கொள்கிறேன்.

இன்னும் அதிகமாகப் பணியாற்றுங்கள்; உங்களைத் தட்டிக் கொடுக்கிறோம் என்கிறீர்கள்!

இங்கே அவர்கள் கொடுத்த பொருள்களின் பட்டியல் இருக்கிறது. இந்தப் பொருள்களின் மதிப்பு ரூ.76 ஆயிரம். கிருஷ்ணன் அவர்களும் சரி, எங்கள் தோழர்களும் சரி, யாரும் ஒரு இம்மியளவுகூட, எள் மூக்கு அளவுகூட வாக்கு தவறாதவர்கள் - நாணயம் தவறாதவர்கள். எனவே, இந்தப் பொருள்கள் அத்துணையும் பணமாக ஆக்கப்பட்டு, கழகத் தலைமைக்கு காசோலையாக அனுப்பப்படும் என்பதை மகிழ்ச்சியோடு அவர்களிடம் அந்தப் பொறுப்பினை ஒப்படைக்கிறேன். ஆகவே, எந்தப் பொருளும் எங்களோடு வராது. அந்த அடிப்படையில், மீண்டும் அந்தப் பொருள்கள் உங்களுக்குக் கிடைக்கும்; மக்களுக்குக் கிடைக்கும். மீண்டும் தொண்டாக, கல்வியாக, அறச்சாலையாக மறுபடியும் கிடைக்கக்கூடிய வாய்ப்பை நீங்கள் உருவாக்கி இருக்கிறீர்கள். இன்னும் அதிகமாகப் பணியாற்றுங்கள்; உங்களைத் தட்டிக் கொடுக்கிறோம்; தட்டிக் கொடுத்து வேலை வாங்குகிறோம் என்பதற்காக இதனை நீங்கள் செய்திருக்கிறீர்கள்.

இந்த மேடையில் தாலி அகற்றும் நிகழ்ச்சிகள் நடந்தன. இது எப்படி கொள்கைபூர்வமான ஒரு மகத்தான மாநாடு இந்த மாநாடு என்பதை மிகத் தெளிவாகக் காட்டியிருக்கிறீர்கள்.

தமிழர் திருமணத்தில் தாலி!

சனாதனத்தை சாடு என்பதே தாலி அகற்றுதல் அடிப் படையில் மிக முக்கியமான ஒரு அம்சம். சனாதனத்தினுடைய அடிப்படையிலேதானே தாலியைக் கட்டிக் கொண்டார்கள். இதற்கு முன் இது உண்டா? ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு. தமிழர் திருமணத்தில் தாலி என்கிற தலைப்பில் மா.ராச மாணிக்கனார் அவர்கள் ஆய்வு செய்திருக்கிறார்.

தாலி கட்டுதல் என்பது இடையிலே புகுந்தது. எப்படி சதி என்பது சாதி ஆகியதோ - இடையிலே புகுந்ததோ, பிறவி பேதம் எப்படி இடையிலே புகுந்த ஒரு தத்துவமோ, அதைப்பற்றி அம்மா சுப்புலட்சுமி அம்மையார் மாநாட்டி னைத் திறந்து வைத்து உரையாற்றும்பொழுது தெளிவாகச் சொன்னார்கள்.

சங்ககாலப் புலவர்கள் எல்லாம் பெண்களைப்பற்றி பாடியிருக்கிறார்களே, அப்படிப்பட்ட தமிழகத்திலே ஏன் பெண்கள் படிக்கக் கூடாது என்று ஆக்கினார்கள்? காரணம் என்ன நண்பர்களே, சனாதனம் என்ன சொல்லிற்று? அந்த சனாதன ஆரியம் இங்கே வந்து படையெடுத்த நேரத்தில், சனாதனத்தினுடைய நிலை என்ன? என்பதை நாம் சொல்வதைவிட, ஒரு சனாதனியை விட்டே சொல்கிறோம். இதுதான் பெரியார் இயக்கத்தின் சிறப்பு - இதுதான் திராவிடர் இயக்கத்தினுடைய வலிமை என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

அந்த வகையிலே இதோ என்னுடைய கைகளில் உள்ள புத்தகம் அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் என்பவர் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது? என்கிற புத்தகமாகும். இவர், வைஷ்ணவ சம்பிரதாயத்திற்குத் தலைவர். சங்கராச்சாரியார்களுக்கெல்லாம் ஆலோசகராக இருந்தவர் அவர்.

புதிதாகத் தமிழகத்தில் இருக்கக்கூடிய காவிகள் இருக்கிறார்களே, இவர்கள் இந்து மதத்தைப்பற்றித்தான் பேசுவார்கள் என்று சொல்வார்கள்.

எது எங்களைப் புண்படுத்தியிருக்கிறதோ, அந்தப் புண் ணுக்குத்தான் நாங்கள் மருந்து போடவேண்டுமே தவிர, புண்படுத்தாதவர்களைப்பற்றி நாங்கள் ஏன் கவலைப் படவேண்டும். எந்த இடத்தில் எங்களுக்குப் பிளவு இருக் கிறதோ, அந்த இடத்தில்தான் நாங்கள் அறுவை சிகிச்சை செய்தாகவேண்டும். அதுதானே மிக முக்கியம்.

இந்து மதம் எங்கே போகிறது?

அந்த அடிப்படையில் வரும்பொழுது நண்பர்களே, இந்து மதம் எங்கே போகிறது? என்கிற தலைப்பில், அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதி, அது நக்கீரன் பதிப்பகத்தில் புத்தகமாக வெளியிடப்பட்டு, பல்லாயிரக்கணக்கில் பரப்பப்பட்டு இருக்கிறது. இந்து மதத்திற்காக வாதாடக்கூடியவர்கள், இந்துத்துவத்திற்காக வாதாடக் கூடியவர்கள் இதற்கு மறுப்பு எழுதியிருக்கிறார்களா? என்பதை தயவு செய்து நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

இந்தப் புத்தகத்தில் எத்தனையோ செய்திகள் இருக்கின் றன. இரண்டு செய்திகளை மட்டும் உங்களுக்குச் சொல் கிறேன்.

சனாதனத்தை ஏன் சாடவேண்டும்?

சமதர்மத்தை ஏன் நாடவேண்டும்? என்பதைப்பற்றி இங்கே உரையாற்றினார்கள்.

இதோ சொல்கிறார் அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள்.

நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றையெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது.

வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்.

ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்தபோது, கூட வந்த பெண்கள் கம்மி. வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத்தக்கதுதான். ஆரியர்கள் பெண்களைத் தான் விட்டுவிட்டு வந்தார்கள்.

ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.

அந்த மனுதர்மம்தான் சனாதனம். அந்த சனாதனத்தினால், ஏதோ சடங்குகள், சம்பிரதாயம், நம்பிக்கை என்று சில பேர் சொல்வார்கள். பெரியாரினால்  படித்திருக்கிறார்கள் பாருங்கள்; திராவிட இயக்கத்தினால் படித்திருக்கிறார்கள் பாருங்கள் - அன்றைக்கு வேட்டிக் கட்டியவர்கள் எல்லாம் இன்றைக்கு குழாய் மாட்டியிருக்கிறார்கள் பாருங்கள் - இன்றைக்கு வாட்ஸ் அப், டுவிட்டர், பேஸ் புக் என்று சொல்கிறார்கள் பாருங்கள் - இப்படிப்பட்ட அத்துணை பேரும், என்னங்க, இதைப் போய் பெரிதாகச் சொல்கிறீர்களே? என்று நினைக்கலாம். பிறவி பேதத்தை அகற்றுவதுதான்!

ஆனால், நண்பர்களே, சரி பகுதியாக இருக்கிற பெண்களே! என்று பெரியார் கேட்டார். பெரியாருடைய இலக்கு, பெரியாருடைய இலட்சியம், பெரியாருடைய வாழ் நாள் போராட்டம் - திராவிட இயக்கத்தினுடைய போராட்டம் ஒன்றே ஒன்றைத்தான் மய்யமாகக் கொண்டது.

ஒரு வரியில் சொல்லவேண்டுமானால், பிறவி பேதத்தை அகற்றுவதுதான். ஜாதி ஒழிப்பு என்றால், பிறவி பேதம். உலகத்தில் வேறு எங்கும் கிடையாது ஜாதி. பிறக்கும்போதே சூத்திரன், பிறக்கும் போதே பார்ப்பான், பிறக்கும்போதே பள்ளன், பிறக்கும்போதே பறையன், பிறக்கும்போதே சக்கிலி - இந்த நாட்டைத் தவிர - சுதந்திரம் வந்து 70 ஆண்டுகாலத்திற்குப் பிறகும் - இது வெட்கமில்லையா? உலகத்தில் வேறு எந்த நாட்டிலாவது, சுதந்திரம் அடைந்த நாட்டில், சூத்திரன் இருக்கிறானா? பிராமணன் இருக்கிறானா? தொடக்கூடியவன்? தொடக்கூடாதவன்? என்று இருக்கிறானா? எட்டி நில்! தள்ளி நில்! என்று சொல்லக்கூடியவன் இருப்பானா? இரட்டைக் குவளை முறை வைத்திருந்தார்களே, இதுதான் சுதந்திர நாடா? சுயராஜ்ஜியமா? கேட்டார் பெரியார், வந்தது திராவிடர் இயக்கம் - உழைத்தது அதனுடைய ஆட்சி - திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி - இன்றைக்கு மீண்டும் அமையப் போகிற ஆட்சி இருக்கிறதே - அந்த ஆட்சி அமைந்தால்தான் நண்பர்களே, இந்த வெற்றிகள் எல்லாம் நிலைக்கும்.

இல்லையானால், பொய்யாய், பழங்கதையாய், கனவாகப் போகக்கூடிய ஆபத்து வந்துவிடும்.

அவன் வெற்றி பெறுவதற்கு, நம்முடைய உரிமையை அடமானம் வைக்கிறான்!

மீண்டும் இந்துராஷ்டிரம் - மீண்டும் இந்து ராஜ் ஜியம் என்றெல்லாம் இன்றைக்கு முயற்சி எடுத்துக் கொண் டிருக்கிறார்களே - மோடி வித்தைகளைக் காட்டுகிறார்கள் இன்றைக்கு - மோடி வித்தைகள் வேறு இடங்களில்கூட பலிப்பதாக இருந்தது - இப்பொழுது இந்தியாவில் எந்த பாகத்திலும் மோடி வித்தை பலிக்கவில்லை. அடுத்த அடிவாங்கப் போகிற இடம் கருநாடகம். அதற்காகத்தான், காவிரி மேலாண்மை வாரியத்தை வைத்தாவது பயனடை யலாம் என்று நினைத்து, தமிழர்களுடைய உரிமையை நீ சூதாடுகிறாய். சூதாட்டத்தில் எல்லாவற்றையும் இழந்தவன், கடைசியாக எதை வேண்டுமானாலும் அடமானம் வைப்பான். அதுபோன்று, அவன் வெற்றி பெறுவதற்கு, நம்முடைய உரிமையை அடமானம் வைக்கிறான்.

நீட்' பிரச்சினையில் அவ்வளவு அவசரம் காட்டினீர்களே!

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், ஏன் அதனை அவர்கள் செய்யவில்லை.

உச்சநீதிமன்றம் சொன்னால் செய்யவேண்டும் என்று சொல்கிறீர்களே, நீட் பிரச்சினையில் அவ்வளவு அவசரம் காட்டினீர்களே - உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது என்று. ஆறு வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று சொல்லியும், அமைக்காமல், ஸ்கீம் என்பதற்கு அர்த்தம் கேட்கிறார்கள். ஸ்கீம் என்பதற்கு என்ன அர்த்தம் என்று அகராதியைப் பார்க்கவேண்டாமா? அகராதியில் தேடினால்கூட நேரமாகும், அதனால்தான் இன் றைக்கு கைகளிலேயே செல்போன் இருக்கிறது - அதில் ஒரு தட்டுத் தட்டினால், கூகுளை'க் கேட்டால், ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்துவிடுமே! யாரை ஏமாற்றுவதற்கு!

குலக்கல்வித் திட்டத்திலிருந்து, நீட் வரையில்...

நீட் தேர்வில் எவ்வளவு அக்கறை காட்டினார்கள். இன்றைக்கு நம்முடைய பிள்ளைகளின் நிலையை நினைத் தால், நம்முடைய ரத்தம் கொதிக்கிறது. திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் நீட் தேர்வு வந்தவுடனேயே அதனை எதிர்த்துக் குரல் கொடுத்தோம்.

எந்த ஆபத்து வந்தாலும், குலக்கல்வித் திட்டத்திலிருந்து, நீட் வரையில் அதனுடைய ஆபத்துகளைப்பற்றியும், அவை களை எதிர்த்தும் குரல் கொடுப்பது இந்த இயக்கம்தான்.

ஆனால், அன்றைக்கு நீங்கள் அதனை அலட்சியப் படுத்தினீர்கள். இன்றைக்கு அதனுடைய விளைவு என்ன?

நாங்கள், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களையும், அத்துணைக் கட்சிக்காரர்களையும் ஒரே மேடையில் ஒன்று திரட்டிக் கேட்டோம்.

இது பெரியார் மண் -  இது சமூகநீதி மண்!

நாம் கேட்பது பிச்சையல்ல - நாம் கேட்பது சலுகையல்ல - அரசியல் சட்ட உரிமையாகும். நீட் தேர்விலிருந்து விலக்குக் கொடுக்கவேண்டும் என்பது அரசியல் சட்டத்தில், மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு இருக்கிற உரிமையாகும். அந்த உரிமையைப் பயன்படுத்திய பெருமை தமிழ்நாட்டிற்கு உண்டு. காரணம், இது பெரியார் மண் - இது சமூகநீதி மண்!

அந்த அடிப்படையில்தான் மிகத் தெளிவாக இந்தக் கருத் துகள் வந்து தமிழக சட்டமன்றத்தில் இரண்டு மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

ஒரு மசோதா சட்டமாக வேண்டும் என்றால், கடைசியாக குடியரசுத் தலைவருடைய ஒப்புதலைப் பெற்றாகவேண்டும். சில சட்டங்கள் ஆளுநரோடு முடிந்துவிடும். சில சட்டங்கள் குடியரசுத் தலைவருக்குப் போகவேண்டும்.

மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டால், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வரும்

தமிழகத்தைச் சார்ந்த எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் எல்லாம் வாக்களித்து குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெ டுத்தார்கள். கடந்த ஜனவரியில் வாக்களித்தனர். தமிழ்நாட் டிலிருந்து அனுப்பப்பட்ட இரண்டு மசோதாக்கள் ஒன்றரை ஆண்டுகாலமாக கிடப்பில் கிடக்கிறது - நாதியில்லாமல் இருக்கிறது. அனாதைப் பிணம் என்றாலும், அதனைப் புரட்டிப் பார்ப்பார்கள்; ஆனால், நாம் நிறைவேற்றி அனுப்பி வைத்த மசோதாக்களைப்பற்றி யாரும் கேட்பதற்கு நாதியில்லாமல் இருக்கிறதே! அந்த மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டால், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வரும். அப்படி அந்த சட்டம் வந்தால், எங்களுடைய மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு தேர்வு எழுதக்கூடிய நிலை வருமா? சங்கடங்களுக்கு ஆளாகக் கூடிய நிலை வருமா?

பார்த்தவர்களின் நெஞ்சம் பதைபதைத்தது

ஒரு மாணவன் திருத்துறைப்பூண்டியிலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்குச் சென்று நீட் தேர்வு எழுது கிறான். அவருடைய தந்தை கிருஷ்ணசாமி என்பவர் தேர்வு மய்யத்தின் வெளியிலேயே காத்திருக்கிறார். அவர் மாரடைப்பால் மரணமடைகிறார். ஏனென்றால், கவலை தான்.  மன உளைச்சல், பயணக் களைப்பின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு இறக்கிறார்.  தேர்வு மய்யத்தின் உள்ளே அவருடைய மகன் தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறார். தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவன், தன்னுடைய தந்தையைக் காணவில்லையே என்று தவிக்கிறான். உன்னுடைய தந்தைக்கு உடல்நிலை சரியில்லை, அவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம் என்று சொல்லி, சிலர் அந்த மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வேளையில், அவனுடைய தந்தை இறந்த செய்தியை சொல்கிறார்கள். அந்தச் செய்தியைக் கேட்டதும், அந்த மாணவன் கதறிய கதறல் இருக்கிறதே, அதைப் பார்த்தவர்களின் நெஞ்சம் பதைபதைத்தது!

இதுதான் இந்த மோடியின் ஆட்சியினுடைய சாதனை - இதற்குத்தானா வாக்களித்தீர்கள்! இந்த ஆட்சி நீடிக்கலாமா? இந்த ஆட்சிக்குத் துணை போகிறவர்கள் நீடிக்கலாமா?

கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும்

நீட் தேர்வை ஒழிக்கவேண்டும் என்றால்,  மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, நெருக்கடி காலத்தில் மத்தியப் பட்டியலுக்குச் சென்றது. அத்துணைக் கட்சிக்காரர்களும் சேர்ந்து, அதனை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும். அதனைச் செய்தால், இந்தப் பிரச்சினை தீர்ந்து விடும்.

நீட் தேர்வு எழுதுவதற்கு தமிழ்நாட்டில் இடமில்லை- வெளி மாநிலங்களுக்குச் செல்லுங்கள் என்றால், என்ன அர்த்தம்?

12 லட்சம் பேர் சர்வீஸ் கமிசன் தேர்வு எழுதுகிறார்கள் தமிழ்நாட்டில் - அரசாங்கம் நினைத்தால், ஒரு உத்தரவில், ஒரே நாளில் தயாராகும் வாய்ப்பு உண்டே! அதனை ஏன் செய்யவில்லை? யாரால் இந்தத் தொல்லை? இதில் உச்சநீதிமன்றமும் சேர்ந்து கொள்கிறது.

முதலமைச்சர் கலைஞர் கொண்டு வந்த சட்டம்!

நீட் தேர்விற்காக இதனை நீங்கள் உடனே செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். தமிழகத்தைப் பழி வாங்குகிறார்கள். ஏனென்றால், இது சமூகநீதி மண். இந்தியாவிலேயே நீட் தேர்வை எதிர்த்து போராடிய ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். காரணம் இது சமூகநீதி மண்.  நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம் என்று கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில், அவர் ஒரு தனிச் சட்டத்தையே கொண்டு வந்து நிறைவேற்றி, அதற்குக் குடியரசுத் தலைவர் கையொப்பமிட்ட வரலாறு இருக்கிறது.

இந்த நிலையில், நீட் தேர்வு என்பது  சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று - திணிக்கப்பட்ட ஒன்று.

அதனைப் போக்கவேண்டும் என்றால், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதுதான். அதுமட்டுமல்ல, நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி, மத்திய அரசுக்கு இரண்டு மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த மசோதாக்களில் கையெழுத்துப் போட் டால், இந்த நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வரும். அந்த மசோதாக்களில் கையெழுத்துப் போடாமல் யார் இருக்கிறார்? அந்த மசோதாக்கள் எங்கே இருக்கிறது தெரியவில்லை என்கிறார்கள்.

தமிழகத்தைச் சார்ந்த கம்யூனிஸ்ட் எம்.பி., ஒருவர் கேட்கிறார், நீட் மசோதா என்னாயிற்று? என்று.

அந்த மசோதாக்கள் இங்கே வரவேயில்லை; அதைப்பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என்று உள்துறை அமைச்சர் சொல்கிறார்.

இதற்கு என்ன அர்த்தம்? மக்களைப் பற்றி கவலைப்படும் அரசா இது?

இந்த நிலையில், நாங்கள் நீட் தேர்விற்கு பணம் கொடுக்கிறோம் என்றால், என்ன அர்த்தம்?

நீட் தேர்வு வந்துவிட்டது - நாங்கள் ஒப்புக்கொண்டோம் என்று நீங்கள் சமரசம் ஆகிவிட்டீர்களா? முன்னே பார்த்தால் நாயக்கர் குதிரை; பின்னே பார்த்தால் ராவுத்தர் குதிரை என்கிற இரட்டை நிலைப்பாடா?

அபாயத்திலிருந்து காக்கின்ற ஒரே இயக்கம் திராவிடர் இயக்கம்தான்

எனவேதான், எல்லாத் துறைகளிலும் திராவிடர் இயக்கம் தான் எல்லோரையும் காப்பாற்றிக் கொண்டிருக்கின்ற ஒரு இயக்கம். காவிரி மேலாண்மை வாரியம் ஆனாலும், அதேபோல, நீட் தேர்வை எதிர்க்கின்ற முயற்சியானாலும், மீத்தேன், நியூட்ரினோ திட்டங்களைக் கொண்டு வந்து தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கவேண்டும் - வறண்ட பிரதேசமாக்கவேண்டும் - ஏழை, எளிய மக்களையெல்லாம், விவசாயிகளையெல்லாம் பிச்சைக்காரர்களாக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய அந்த அபாயத்திலிருந்து காக்கின்ற ஒரே இயக்கம் திராவிடர் இயக்கம்தான். அதனை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்த இயக்கத்திற்கு என்ன பெருமை தெரியுமா? சனா தனத்தை சாடு என்று சொன்னோமே ஏன் தெரியுமா?

நண்பர்களே! இந்து மதத்தில், பெண்களுக்குச் சொத் துரிமை கிடையாது. மற்ற மதங்களில் பெண்களுக்கு ஓரள விற்குச் சொத்துரிமை உண்டு.

இரண்டு மகன், ஒரு மகள் இருந்தால், சொத்தை மூன்றாகப் பிரிக்கவேண்டும் - ஆனால், மூன்றாகப் பிரிக்க முடியாது - மகன்களுக்கு மட்டும்தான் சொத்து கொடுப்பார்கள். இது பழைய நிலை!

இதை எதிர்த்து, இந்த சனாதனத்தின் மண்டையில் ஓங்கி அடித்தார் தந்தை பெரியார். பெண்கள் அடிமைகள் என்று சொல்வது மனுதர்மம். அந்த சனாதனம்தான், பெண்களுக்கு சொத்துரிமை கூடாது, படிப்புரிமை கூடாது, அறிவுரிமை கூடாது - எந்த உரிமையும் தனியாகக் கிடையாது என்று ஆக்கி வைத்தார்கள். அடிமைகளுக்கு எந்த உரிமைகளும் கிடையாது என்பதுதான் அதனுடைய அடிப்படை.

அதனை எதிர்த்துதான், பாபா சாகேப் அண்ணல் அம் பேத்கர் அவர்கள், சமூகநீதியினுடைய சின்னமாக, அவர்கள் மத்திய சட்ட அமைச்சராக இருந்தபொழுது, பண்டித ஜவகர் லால் நேரு அவர்கள் பிரதமர்.

பெண்களுக்காக தன்னுடைய பதவியைத் தியாகம் செய்தவர் அம்பேத்கர்

அம்பேத்கர் அவர்கள், இந்து கோடு பில் - இந்து சட்டத் திருத்த மசோதா என்று சொல்லி, பெண்களுக்கும் இந்து சட்டத்தில் சொத்துரிமை இருக்கவேண்டும் என்று சொன்னார்.

ஆனால், அந்த சட்டத்தை நேரு அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை - நேரு அவர்கள் முற்போக்குச் சிந்தனையாளர்தான். ஆனால், ஏன் நேருவால்கூட அந்த சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை? உங்களுக்கு அந்தச் செய்தி தெரியவேண்டும். அதற்காக அம்பேத்கர் அவர்கள் பதவியை விட்டு விலகினார்.  நம் நாட்டில், ஒரு பதவியை விட்டு விலகுகிறார் என்றால், அதைவிட பெரிய பதவி கிடைத்தால்தான் விலகுவான். எனக்கு நல்ல இலாகா கிடைத்ததினால்தான், இந்த இலாகாவிலிருந்து விலகினேன் என்பார்கள். ஆனால், அம்பேத்கர் அவர்கள் என்ன செய்தார் தெரியுமா? தான் வகித்த சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். ஏன்? என்னுடைய மசோதாவிற்கு ஆதரவு கொடுக்கிறேன் என்று சொன்னீர்கள்; பெண்களுக்கு சொத்துரிமை மசோதாவை நீங்கள் மறுத்தீர்கள்; இனிமேல், உங்களுடைய அமைச்சரவையில் தொடருவதற்கு எனக்கு விருப்பமில்லை என்றார். பெண்களுக்காக தன்னுடைய பதவியைத் தியாகம் செய்து வெளியேறிய மாபெரும் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.

எனவே, பெண்கள் காலங்காலமாக மற்றவர்களைப் போற்றுவதைவிட, அம்பேத்கரைப் போற்றவேண்டும்.

இராஜேந்திர பிரசாத் என்று தலைவர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு பெரிய சனாதனவாதி.

பெண்களுக்கு சொத்துரிமை மசோதாவை நான் அனுமதிக்கமாட்டேன் என்றார்.

நேரு போன்றவர்களால்கூட ஒழிக்க முடியவில்லை

நேருவால், இந்த சனாதனத்தைத் தாண்ட முடியவில்லை. நேரு அவர்கள் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர். பல ஆண்டுகாலம் சிறையில் இருந்தவர்; எல்லாவற்றையும் எதிர்த்தவர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையே எதிர்த்து விரட்டினோம் என்று சொல்லி பெருமைப்பட்டவர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை நேரு அவர்களால் விரட்ட  முடிந்ததே தவிர, பார்ப்பன சனாதன ஏகாதிபத்தியத்தை, நேரு போன்றவர்களால்கூட ஒழிக்க முடியவில்லை, விரட்ட முடியவில்லை.

அதற்குப் பிறகு என்ன நடந்தது தெரியுமா? திராவிட இயக்கம் என்ன செய்தது? என்று சில கபோதிப் பயல்கள் கேட்கிறார்கள். திராவிட இயக்கம் என்ன செய்தது தெரியுமா? உங்கள் பாட்டன், அப்பன் காலத்தில் இல்லாததையெல்லாம் திராவிட இயக்கம்தான் கொண்டு வந்தது. இவர்கள் எல்லாம் மத்திய அமைச்சராகப் போனதன் காரணமாகத்தான், பெண்களுக்கு சொத்துரிமை கிடைத்தது.

அம்பேத்கரின் பெண்கள் சொத்துரிமை சட்டம் நிறை வேற்றப்பட முடியாது என்று டில்லி நாடாளுமன்றத்தில் எந்த சனாதனம் சவால் விட்டதோ, அந்தக் குகைக்குள் 2006 ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகம் நுழைந்தது. கலைஞர் சாதாரணமானவர் அல்ல- ஈரோட்டில் பெரியாரிடம் குருகுல பாடம் பயின்றவர். அதனால்தான் இன்றைக்கு இந்தியா முழுவதும் உள்ளவர்கள் அறிவாலயத்திற்கு வருகிறார்கள். அடுத்த பிரதமர் யார் என்பதை யார் முடிவு செய்வார்கள் என்றால், தமிழ்நாடு முடிவு செய்யும்.

சொத்துரிமையை வாங்கிக் கொடுத்த இயக்கத்தைப்பற்றி தெரியாது

அந்த அளவிற்கு வருகிறது என்றால், அதற்கு என்ன காரணம் என்றால், அந்த சனாதனத்தையே ஒரு பிடி பிடித்து ஆட்டினார்கள் 2006 ஆம் ஆண்டில். இந்தத் தகவல்கள் பல பெண்களுக்கே தெரியாது. பட்டுப் புடவையின் விலை தெரியும்; அட்சயத் திருதையில் நகை வாங்கத் தெரியும், அதைவிட அவர்களுக்கு மகளாகப் பிறந்த பெண்ணுக்கு, சொத்துரிமையை வாங்கிக் கொடுத்த இயக்கத்தைப்பற்றி தெரியாது.

அம்பேத்கர் அவர்களால் செய்ய முடியாமல் வெளியேறிய அதே காரியத்தை, திராவிட முன்னேற்றக் கழகம் பங்கு பெற்ற அய்க்கிய முன்னணி அரசு செய்தது. சனாதனத்தை விரட்டினோம் - சமதர்மத்தை நிலைநாட்டினோம்!

ஆகவே, இவ்வளவு பெரிய இயக்கம் இது. இதை நீங்கள் சாதாரணமாக நினைக்கவேண்டிய அவசியமில்லை.

இராஜேந்திர பிரசாத் போன்றவர்கள் பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்கக்கூடாது என்பதை ஏன் வலியுறுத்தினார்கள் தெரியுமா? அது வெறும் அரசியலுக்காக அல்ல நண்பர்களே! சனாதனம்தான்!

எவ்வளவு பெரிய சூழ்ச்சி நடந்திருக்கிறது டில்லியில் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்றால், அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் இந்து மதம் எங்கே போகிறது? என்கிற நூலில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். தெரியாத விஷயங்கள் எல்லாம் தெரியும்; புரியாத விஷயங்கள் எல்லாம் புரியும்!

முப்பத்து முக்கோடி தேவர்களில் ஒரு பயலுக்கும் தொலைக்காட்சி என்றால் என்னவென்று தெரியாது. ஒரு பயலுக்கும் செல்போன் என்னவென்று தெரியாது. அதுபோல, பெண்களுக்கான சொத்துரிமை சட்டம் எப்படி வந்தது என்று நம்மாட்களில் படித்த முட்டாள்களுக்குக்கூட தெரியாது. எத்தனையோ வழக்குரைஞர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்குக்கூட இதன் பின்னணி தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்.

பெரியார் கண்ணாடியைப் போட்டுப் பார்த்தால்தான், தெரி யாத விஷயங்கள் எல்லாம் தெரியும்; புரியாத விஷயங்கள் எல்லாம் புரியும்.

இந்நூலின் 104 ஆம் பக்கத்தில் உள்ள செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன்.

டில்லியில் நேரு ஹிந்து கோடு பில்லில் பெண் களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்கவேண்டும் என கொண்டுவந்த செய்தி பேப்பர்களில் வந்தது.

அப்போது மடம் காஞ்சிக்கு வந்துவிட்டது. கும்ப கோணத்தில் இருந்த எனக்கு ஒரு தந்தி பறந்து வந்தது. உடனே காஞ்சிபுரத்துக்குப் புறப்பட்டு வரவும்; இதுதான் தந்தி வாசகம்; கொடுத்திருந்தவர் சங்கராச்சாரியார்.

நான் புறப்பட்டு காஞ்சி போன சமயம் காஞ்சிபுரத்துக்கு அருகே உள்ள எசையனூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது குடும்பச் சொத்துகளை எல்லாம் மடத்துக்கு கொடுப்பதாகச் சொல்லியிருந்தார். அவற்றை பார்வையிட எசை யனூருக்கு சென்றிருந்தார் மகாபெரியவர்.

என்ன ஸ்வாமி என்றேன் நான்.

அன்றைய பேப்பரை எடுத்து என்னிடத்தில் காட்டிய மகா பெரியவர். லோகமே அழியப்போறது ஓய்... அழியப் போறது... என படபடப்பாகப் பேசினார்.

இதப் பார்த்தீரா... ஸ்திரீகளுக்கு சொத்துல பாத் யம் கொடுக்கப் போறாளாம். அவாளுக்கு சொத்துல பங்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா? இஷ் டப்பட்டவாகூட ஸ்த்ரீகள் ஓடிப்போயீடுவா... அபாண் டமா அபச்சாரமா போயிடும்  என அந்த பேப்பரை தட்டியபடி வியாக்யானம் தந்து கொண்டிருந்தார் மகா பெரியவர்.

நான் சிரித்தபடியே பதில் சொன்னேன். எனக்கு நல்லதுதான் ஸ்வாமி.. என் மாமனாருக்கு நிறைய சொத்துகள் இருக்கு; ஒருவேளை என் ஆத்துக்காரிக்கு பங்கு வந்தால் எனக்கும் நல்லதுதான். இந்த பதிலைக் கேட்டதும்... அசட்டுத்தனமாக பேசாதீர். இந்த சட்டத்தால் ஸ்தீரி தர்மமே பாழாயிடும்; ஸ்தீரிகளுக்கு பாத்யமோ, சம்பாத்யமோ இருக்கக்கூடாதுன்னு மநு ஸ்மிருதி சொல்லியிருக்கு. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு. என்றாராம் மகா பெரியவர்.

இது துரோபதைகள் காலமல்ல; எங்கள் செல்விகள் காலம்!

என்ன அற்புதமான பொன்மொழி பார்த்தீர்களா? ஆம்ப டையானுக்கு அடிமையாக இருக்கவேண்டும் - குடிகாரப் பயலாக இருந்தாலும்; கூத்திக் கள்ளனாக இருந்தாலும், அவன் அடமானம் வைத்தாலும், பந்தயம் கட்டினாலும். இவை எல்லாம் எந்தக் காலம் - உங்கள் துரோபதைகள் காலம். இது துரோபதைகள் காலமல்ல, எங்கள் செல்விகள் காலம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

திராவிட வீராங்கனைகளுடைய காலம் இந்தக் காலம். இது சாதாரண காலமல்ல - இது சுப்புலட்சுமியினுடைய காலம் - நன்றாக இதனை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இந்தக் காலம் பழைய காலமல்ல - சனாதன காலமல்ல!

எங்களுக்கு சொத்துரிமை வேண்டாம் - மனுஸ்மிருதியில் உள்ளபடி, ஸ்தீரி தர்மம் பாதுகாக்கப்படவேண்டும்.  சர்க்கார் இந்து கோடு பில்லை வாபஸ் வாங்கவேண்டும் என்று, பெண்களை வைத்தே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மீதி சங்கதிகளை நீங்களே இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்துக் கொள்ளுங்கள். நேரமில்லை, நான் ரயிலுக்குச் செல்லவேண்டும். எனக்கு வருத்தமாக இருக்கிறது, இவ்வ ளவு பெரிய கூட்டத்தை விட்டுவிட்டுப் போகிறேமே என்று. பரவாயில்லை, செய்யவேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன.

சனாதனத்தை சாடினாலொழிய -

இன்றைக்கு சமதர்மத்தை நாட முடியாது!

ஆகவேதான், உங்களுக்கு அன்பாக சொல்கிறேன், சனாதனத்தை சாடினாலொழிய -

இன்றைக்கு சமதர்மத்தை நாட முடியாது.

சமதர்மத்தையும் நாடவேண்டும்; சனாதனத்தையும் தேடவேண்டும் என்றால், அது பித்தலாட்டம் அல்லது ஏமாற்று வேலை. அதைப் புரிந்துகொள்ளவேண்டும் நீங்கள்.

எனவேதான்,பெண்கள்பிரச்சினைஎன்றுநினைக் காதீர்கள் நண்பர்களே, நீங்கள் நிம்மதியாக இருக்கவேண்டும் என்றால், பெண்களிடம் சொத்துகளைக் கொடுத்துப் பாருங்கள், அவர்கள் அதனை ஒழுங்காக வைத்திருப்பார்கள். ஆண்களிடம் சொத்து இருந்தால், அவன் எப்பொழுது வேண்டுமானாலும், டாஸ்மாக்கில் அடமானம் வைத்து விடுவான்.

உங்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

ஆகவேதான் நண்பர்களே, இந்த இயக்கம் செய்தி ருக்கின்ற பணிகள் எண்ணற்ற பணிகள். அத்தகைய பணி களை செய்து, இவ்வளவு சிறப்பான வாய்ப்பை உருவாக்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

மன்னித்துக் கொள்ளுங்கள், விரைந்து செல்லவேண்டிய காரணத்தினால், மனமில்லாமல் உங்களைவிட்டுப் பிரிகி றேன். மறுபடியும் கணியூருக்கு வருவேன்; கணியூர் குடும்பங்களைச் சந்திப்பேன்.

கணியூர் நம்முடைய உறவினர்கள் ஊர் என்று சொல்லக் கூடிய உணர்வோடு விடைபெறுகிறேன்.

வணக்கம். நன்றி!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner