எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி தலைவர் சு.நாகராசு வரவேற்புரை ஆற்றினார்.

சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் ஆ.இர.சிவசாமி மாநாட்டுக்குத் தலைமை வகித்து, புரட்சிக் கவிஞரின் பாடலை எடுத்துக் காட்டி திராவிடன் என்பதில் உள்ள பெருமிதத்தை விளக்கினார்.

மாநாட்டுக்குக் கீழ்க்கண்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

சின்னக்காவனம் நடேசனார், கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி செயலாளர் - க.ச.க.இரணியன், தாம்பரம் மாவட்ட இளைஞரணி தலைவர் - கெ.விஜயகுமார், வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் - தளபதி பாண்டியன், ஆவடி மாவட்ட இளைஞரணி தலைவர் - வெ.கார்வேந்தன், தென்சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் - ச.மகேந்திரன், வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் - சோ.சுரேஷ்

கழகக் கொடியேற்றம்

கும்மிடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழக மகளிர் பாசறை செயலாளர் கு.செல்வி தந்தை பெரியார் வாழ்க! அன்னை மணியம்மையார் வாழ்க! தமிழர் தலைவர் வாழ்க! தந்தை பெரியார் பணி முடிப்போம்! கடவுள் இல்லவே இல்லை என்ற முழக்கங்களுக்கிடையே திரா விடர் கழகக் கொடியை ஏற்றினார். அவர் தன்னுரையில் சனாதனத்தின் வேரை வீழ்த்தும் போர்க்குணத்தைக் கொண்டது திராவிடர் கழகக் கொடி,. இன இழிவை ஒழிக்கப் புரட்சி செய்வோம் என்ற தத்துவத்தைக் கொண் டது கழகக் கொடி என்று விரிவாக எடுத்துரைத்தார்.

திராவிடர் இனம் தலை நிமிர்ந்திட.. என்ற தலைப்பில் நடைபெற்றக் கருத்தரங்கத்திற்கு மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமை வகித்தார்.

பார்ப்பனர் அல்லாதாரை திராவிடர் என்று ஏன் அழைக் கிறோம்  என்றால் அந்த சொல்தான் நமது இனத்திற்கு எதிரி பார்ப்பான் - ஆரியன் என்ற அடையாளத்தைக் காட்டுவதாகும் என்று குறிப்பிட்டார்.

திராவிடம் என்று சொல்லும்பொழுது தான் ஆரியமும், காவிக் கூட்டமும் அலருகின்றன என்பதிலிருந்தே திராவிடத்தின் அருமையை உணரலாம் என்று எடுத்துக் கூறினார்.

மே 12 என்பது - திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் முதன்முதலில் மேடையேறி உரையாற்றிய நாள் - இன்றோடு அது பவள விழாவை - (75 ஆண்டுகள்) காணுகிறது என்று அவர் சுட்டிக் காட்டியபோது பெரும் ஆரவாரம்!

பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம் எனும் தலைப்பில் உரையாற்றிய அமுதரசன் - பண்டைத் திராவிடத்தில் ஜாதி கிடையாது, அது ஒரு தாய், வழிச் சமுதாய அமைப்பு என்ற வரலாற்றை நினைவூட்டினார்.

உலகில் நாடே இல்லாத இனங்கள் இரண்டு உண்டு. ஒன்று ஆரியர், இன்னொருவர் யூதர் என்றும் குறிப்புக் காட்டினார்.

வரலாற்றில் முதன்மையான சமூக எழுச்சி போராட்டம் தந்தை பெரியார் தலைமை வகித்து நடத்தி வெற்றி கண்ட வைக்கம் போராட்டம். அந்த வைக்கத்திலிருந்து வந்த கே.ஆர்.நாராயணன்தான் இந்தியாவில் முதல் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் என்றும் குறிப்பிட்டார்.

பகுத்தறிவுச் சுடர் ஏந்துவோம் என்ற தலைப்பில் உரையாற்றிய வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி புத்தருக் குப் பிறகு பகுத்தறிவுக்கு முன்னுரிமை கொடுத்தவர் தந்தை பெரியார் என்றார்.

படித்த மனிதன் கூட இன்னும் சாணியைப் பிடித்து வைத்து சாமி என்று கும்பிடுகிறானே என்று எள்ளி நகையாடினார். பஞ்சகவ்யம் என்று மாட்டு மூத்திரத்தை தட்சணை கொடுத்துக் குடிப்பதையும் சாடினார்.

ஆண்டு என்பது கருப்பையில் பிறக்கக் கூடியதா என்று கேட்ட இந்த இளம் வழக்குரைஞர் தமிழ் ஆண்டு என்று கூறி 60 வருடங்களைச் சொல்லுகிறார்களே அதில் ஒரே ஒரு ஆண்டுக்காவது தமிழில் பெயருண்டா? என்ற அறிவார்ந்த வினாவையும் எழுப்பினார்.

தமிழக உரிமைகளை மீட்டெடுப்போம் எனும் தலைப்பில் வழக்குரைஞர் பா.மணியம்மை தன் உரையில் காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதை சுட்டிக் காட்டினார். இப்பிரச்சினையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பிரதமரைச் சந்திக்க முதல் அமைச்சர் தேதி கேட்டும், பிரதமர் தேதி கொடுக்காத - இந்தியா ஜனநாயக நாடுதானா?

மாநிலங்களைப் பிரதமர் மதிக்கும் இலட்சணம் - இதுதானா என்ற அர்த்தமுள்ள கேள்வியை எழுப்பினார்.

மாநாட்டு மேடையில் வெளியிடப்பட்ட மூன்று நூல்கள் குறித்து வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் சிறிது நேரம் விளக்கிப் பேசினார். தனக்கு மொழிப் பற்றோ, தேசப் பற்றோ கிடையாது; எனது பற்று எல்லாம் மானுடப் பற்றுதான் என்று சொன்ன தலைவர் தந்தை பெரியார் தான் என்றார் வழக்குரைஞர் குமாரதேவன்.

திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி தனது உரையில் முக்கியமாகக் குறிப்பிட்ட தாவது.

தமிழ்நாட்டில் காவி ஊடுருவ முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் இங்குதான் பெரியார் பிறந்தார்.

திராவிட இயக்கத்தால் தமிழ்நாட்டு மக்கள் சமூக நீதி பெற்றனர். ஏராளமான அளவில் மருத்துவர்கள் தோன்றினார்கள். 'நீட்' என்ற பெயராலே இதனை ஒழித்துக்கட்டத் திட்டம் தீட்டிவிட்டனர். நம் வீட்டுக்குள் புகுந்து நம் பிள்ளைகளின் கண்களைப் பிடுங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

நீட் தேர்வு எழுதிட 1 லட்சத்து 2000 பேர் விண்ணப் பித்தனர் அதில் 30 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதிட வில்லை என்றால் காரணம் என்ன?

தமிழ்நாட்டில் 'நீட்' தேர்வு எழுதிட வசதி செய்து கொடுக்க முடியாதா? வெளிமாநிலங்களுக்குச் சென்று எழுதிட எத்தனைப் பேருக்கு வாய்ப்பு இருக்கிறது - வசதியிருக்கிறது?

ஒருவர் எழுதுகிறார் - செம்மரம் வெட்ட வெளிமாநிலங் களுக்குப் போகும் போது 'நீட்' எழுதிட வெளி மாநிலத் துக்குப் போக முடியாதா என்று கேட்கிறார் என்றால் - இவர்களின் மனம் என்பது வெறும் மரக்கட்டைதானா? என்ற வினாவை எழுப்பினார் பிரச்சார செயலாளர்.

கடந்த ஆண்டு இந்த நீட்டுக்காக ஓர் அனிதாவை பறி கொடுத்தோம் என்றால் இவ்வாண்டு மூன்று தந்தை யர்களை இழந்தோம் என்ற வேதனையை வெளிப்படுத் தினார்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தனது உரையில் இம்மாநாட்டிலே நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்களும் சம்பிரதாயமானவையல்ல, வருங்காலத் தில் அரசின் சட்டங்களாகக் கூடியவை. திராவிடர் கழகத்தின் கடந்த கால வரலாற்றை எடுத்துக் கொண்டால் இதன் உண்மை புரியும்.

பெண்களுக்குக் கல்வி உரிமை, சொத்துரிமை என்பவை எல்லாம் நமது இயக்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தொடர்ச்சிதான் என்று குறிப்பிட்டார்.

ஒரு வெளிநாட்டுத் தோழர் இன்று என்னை சந்தித்த போது கணியூரில் நடைபெற்ற திராவிடர் கழக மகளிர் அணி மாநாட்டின் சிறப்பைப் பற்றிப் பெருமையாகக் குறிப்பிட்டார்.

மாற்றங்கள், வளர்ச்சிகள் என்பது பற்றி மோடி பேசி யதை நம்பி ஏமாந்தவர்களுள் நானும் ஒருவன். அதற்காக நானும் கொஞ்சம் பாடுபட்டிருக்கிறேன்; ஆதரவும் தெரி வித்திருக்கிறேன்.

நான் நம்பியது நினைத்தது தவறு என்று இப்பொழுது உணர்கிறேன். திராவிடர் கழகத்துக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்வேன் என்று குறிப்பிட்டதைக் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் எடுத்துக் கூறியதுதான் எத்தகைய உண்மை!

12 தீர்மானங்கள்

மாநாட்டுத் தீர்மானங்களை கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் முன்மொழிய மக்கள் கடல் பலத்த கர ஒலிக்கிடையே ஆதரித்தது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தனது உரையில், இந்தியா சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்பட்டு 71 ஆண்டுகள் ஆனநிலையிலும், இன்றைய மாநாட்டில் கூட தீண்டாமை ஒழிப்பைப் பற்றியும், ஜாதி ஒழிப்புக் குறித்தும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டதாக நாம்கூற முடியுமா?

தந்தை பெரியார் கேட்டாரே ஜாதி இருக்கும் இடத்தில் உண்மையான சுதந்திரம் இருக்க முடியுமா? சுதந்திரம் இருக்கும் நாட்டில் ஜாதிதான் இருக்கலாமா என்ற தந்தை பெரியார் கூற்றை நினைவூட்டினார்.

இந்திய அளவில் நிருவாகம், நீதித்துறைகளில் எல்லாம் பார்ப்பனர்கள் இன்னும் ஆதிக்கக் கொடிக்கட்டி பறந்து கொண்டு இருப்பதைப் புள்ளி விவரங்களுடன் எடுத்துக் கூறினார். இறுதியாகக் கழகத் தலைவர் நிறைவுரையாற் றினார். மாநாடு இரவு 10 மணிக்கு முடிந்தது. கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கா.கார்த்தி நன்றி கூறினார்.

மாநாட்டின் சிறப்பம்சம் எங்கு நோக்கினும் கருமேகமாக உலாவந்த கழக இளைஞர் பட்டாளம்தான்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner