எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மேலத்திருப்பூந்துருத்தி, மே 13  திக்கெட்டும் பாய்வோம். திராவிடத்தைக் காப்போம் எழுச்சி மாநாடு விளக்க தெருமுனைக் கூட்டம் மேலத் திருப்பூந்துருத்தி நூர்கான் கடைவீதியில் நடைபெற்றது. தொடக்கமாக அ.மோகன்ராஜ் தந்தை பெரியார், தமிழர் தலைவர் பற்றி இனிமையாக பாடல்களைப் பாடினார். வழக்குரைஞர் துரை.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க செயலாளர் அகமதுமைதீன் முன்னிலையில்  தொடக்கவுரையாக  மாணவரணி மாவட்ட செயலாளர் மணிகண்டன், தஞ்சை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்  ப . விஜயகுமார், பெரியார் பெருந்தொண்டர்  கோ.தங்கவேல், தி.மு.க செயலாளர் அகமது மைதீன் ஆகியோரின் உரைக்குப் பின் சிறப்பு பேச்சாளர் வழக்குரைஞர்  பூவை.புலிகேசி,  பட்டுக்கோட்டை மாநாட்டின் நோக்கம் தேவை குறித்தும் நீட் தேர்வு,  பிஜேபி எச்.ராஜா,  எஸ்.வி.சேகர் போன்றோரின் அராஜக ஆணவ பேச்சு வன்மத்தைத் தூண்டி, நாட்டில் அமைதியின்மையை நிலவச் செய்யும் எனவும். பெரியார் பார்ப்பனர்களுக்கு எதிரியல்ல, பார்ப்பனீயத்திற்குத் தான் எதிரி, பார்ப்பனர்களையும் பாதுகாத்தவர் பெரியார் என எடுத்துக்காட்டுகளுடன் பேசினார். ஆன்மீகத்திலும் சமத்துவம் வளர பாடுபட்டவர் தந்தை பெரியார் எனவும் கதிராமங்கலம், காவேரி, நீட் என தமிழர்கள் வஞ்சிக்கப்படும் காலக்கட்டத்தில் மே 29இல் பட்டுக்கோட்டையில் இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. எனவே தமிழர்களின் உரிமையை மீட்கவும் விவசாயத்தையும் மாணவர் களையும் காத்திட பெருந்திரளாய் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைத்து இரவு 9 மணிக்கு தனது உரையை முடித்தார். இளைஞரணி ஒன்றிய செயலாளர்  அ.மோகன்ராஜ் நன்றி கூறிட கூட்டம் நிறைவுற்றது. கலந்து கொண்டோர் ஒன்றியத் தலைவர் ச. கண்ணன் ,மாவட்ட விவசாய அணித் தலைவர் இரா.பாலசுப்பிரமணியன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ப.சுதாகர்,  பெரியார் பெருந் தொண்டர்கள்  எம்.எஸ்.கலியபெருமாள், திருவையாறு ஆறுமுகம், திருவையாறு பேரூர் தலைவர் கவுதமன். கார்குடி கவுதமன்ஓவியர் புகழேந்தி , பூதலூர் ஒன்றிய செயலாளர் பாலு மற்றும் வெங்கடேசன் ஒன்றிய இளைஞரணி திமுக ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner