எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோரிக்கடவு, மே 13 பழனி கழக மாவட்டம், கோரிக்கடவில், திராவிடர் கழகத்தின் சார்பில் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பெரி யார் திடலில் 24.4.2018 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் ச.பாலசுப்பிரமணியன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். கூட்டத்துவக்கத்தில் பழனி சு.அழகிரிசாமி அவர்கள் மந்திரமா? தந்திரமா? நிகழ்வை நடத்தினார். மாவட்ட இளை ஞரணி தலைவர் பி.கொடியரசு அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழக தலைவர் ச.திராவிடச்செல்வன், மண்டல இளைஞரணி செய லாளர் குண.அறிவழகன், மாவட் டத் தலைவர் பெ.இரணியன் ஆகியோர் உரையாற்றினர். தொடக்கவுரையாக பொன்.அருண்குமார் (மண்டல மாண வரணி செயலாளர்) மிகச்சிறப் பான உரை நிகழ்த்தினார்.

மறைந்த கழகத் தொண்டர் ஒட்டன்சத்திரம் கா. சக்திவேல் அவர்களின் உருவப்படத்தை திறந்து வைத்து, தலைமை கழக சொற்பொழிவாளர் என்னாரெசு பிராட்லா சிறப்புரையாற்றினார். இன்னும் பெரியார் ஏன் தேவைப் படுகிறார், தமிழர் தலைவரின் அரிய பணிகள், அம்பேத்கரும், பெரியாரும் எப்படிப்பட்ட தலைவர்கள் என்பதையெல்லாம் சிறப்பாக எடுத்துரைத்தார்.

இறுதியாக கன்னிமுத்து நன்றி கூறினார். பல்வேறு கட்சி தோழர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பு செய் தார்கள். கூட்டத்தில் தாராபுரம் மாவட்டத் தலைவர் கிருட்டி ணன், மாவட்ட அமைப்பாளர் மயில்சாமி, கணியூர் ராமசாமி, தாராபுரம் காந்தி, கணியூர் நாகராஜன், கணியூர் ஆறுமுகம், தாராபுரம் சண்முகம் மற்றும் பழனி மாவட்ட துணைச் செயலாளர் ஜே.ஜோசப் மாவட்ட துணைத்தலைவர் அங்கப்பன், சமூகநீதி பாதுகாப்பு பேரவை இரா. சசிக்குமார், விக்ரம் தமிழ்ச்செல்வன், ஆ.கருப்புச்சாமி, ஆயக்குடி நாகராசு, பழனி தனசேகர், ப.க. மாவட்ட துணைச் செயலாளர் வீரக்குமார், ஆசிரி யர்கள் அருண், குலோத்துங்கன், காட்டுத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner