எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி மே 15- கரூர் மாவட்டம், தோன்தோணிமலையைச் சேர்ந்த தமிழ்வாணன், ராஜேஸ் வரி ஆகியோரின் மகன் பொன் முடி, திருச்சி மாவட்டம், மணப்பாறையை கன்னிவடுகப் பட்டியை சேர்ந்த பழனிச்சாமி, மரகதம் ஆகியோரின் மகள் சுதா ஆகியோர் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா திருச்சி மத் திய பேருந்து நிலையத்திலுள்ள ரோசன் மகாலில் 7.5.2018 அன்று காலை 9 மணியளவில் திராவிடர் கழக மாவட்ட தலை வர்  ஞா.ஆரோக்கிராஜ் தலை மையில் தலைமையில் நடை பெற்றது.  மண்டல செயலாளர் ஆல்பர்ட், மாநகர தலைவர் மருதை, மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழகச் செயலவை தலைவர் சு.அறிவுக்கரசு அவர் கள் வாழ்க்கை இணை ஒப்பந்த விழாவினை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கி பேசும் போது,

மணமகன் பொன்முடியின் தாத்தா கரூர் மாவட்டம், தான் தோணி மலையில் திராவிடர்  கழகத்தில் பணியாற்றியவர். அவரது மகன் தமிழ்வாணன், இராஜேஸ்வரி இவர்களுக்கு சுயமரியாதை திருமணத்தை அன்றைய திராவிடர் கழக பொதுச் செயலாளர் இருந்த கோவை. கு.வெ.கி.ஆசான் அவர்கள் நடத்தி வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் வாழையடி வாழையாக அவரது மகனுக் கும் சுயமரியாதை திருமணம் நடத்தி வைப்பது பாராட்டுக் குரியது.

இத்திருமணம் எவ்வித சடங்கும் இல்லாமல் எளிமை யாக நடந்ததை பார்த்தீர்கள். இதே போன்றுதான் சுயமரி யாதை திருமணங்கள் எளிமை யாகவே நடைபெறும். ஆனால் பார்ப்பனர்களை வைத்து நடத் துகிற திருமணங்கள் எவ்வளவு கேவலமாக நடத்தப்படுகிறது என்பதை உணர்ந்திருப்பீர்கள். எனவே தமிழர்கள் பார்ப்பனர் களை அழைத்து திருமணத்தை நடத்தாதீர்கள்.

சுயமரியாதை திருமணத்தை நடத்திக் கொண்டவர்கள் சமூ கத்தில் முற்போக்கோடும், சமு தாயத்திற்கு பயன்படும் வாழ் வாக வாழ வேண்டும் என்று வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் முன்னதாக மா.செந்தமிழினியன் வரவேற் புரையாற்றி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிறை வாக முனைவர் வீ.மணிகண் டன் நன்றி கூறினார்.

இதில் பெல்.ம.ஆறுமுகம், அமைப்புச்சார தொழிற்சங்க செயலாளர் திராவிடன் கார்த் திக், காட்டூர் சங்கிலிமுத்து, கனகராஜ் உள்ளிட்ட கழகத் தோழர்கள், இருவீட்டை சேர்ந்த மணமக்கள் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner