எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உரத்தநாடு, மே 16 உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 30.4.2018 அன்று மாலை 6 மணியளவில் உரத்தநாடு வீர ரெத்தினா திருமண மண்டபத்தில் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலைவர் சி.அமர்சிங் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துணைத் தலைவர் முத்து.இராசேந்திரன், மாவட்ட இணைச் செயலாளர் ஞானசிகாமணி, நகர செய லாளர் ரெ.ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னி லையில் நடைபெற்றது.

கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கலந்துரையாடல் கூட்ட நிகழ்ச்சியில் மாநில கலந்துரை செயலாளர் ச.சித்தார்த் தன், மாநில பகுத்தறிவார் கழக தலைவர் மா.அழகிரிசாமி, மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் கோபு.பழனிவேல், மாநில பெரியார் வீரவிளை யாட்டுக் கழக செயலாளர் நா.இராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துணைத் தலைவர் முத்து.இராசேந்திரன், மாவட்ட இணைச் செயலாளர் தி.வ.ஞானசிகா மணி, ஒன்றிய தலைவர் மா.இராசப்பன், ஒன்றிய செயலாளர் அ.உத்திராபதி, நகர செயலாளர் ரெ.ரஞ்சித்குமார், தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் இரா.வெற்றிக்குமார், ஒன்றிய துணைச் செயலாளர் நா.பிரபு, மண் டலக்கோட்டை இரா.மோகன்தாஸ், சடையார் கோயில் நாராயணசாமி, வடசேரி ராமசாமி, ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் கு.நேரு, ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.இலக்கு மணன், கழக பேச்சாளர் வழக்குரைஞர் சி.கோவிந்தராஜ், நகர துணைச் செயலாளர் வழக்குரைஞர் க.மாரிமுத்து, நகர இளைஞரணி தலைவர் பு.செந்தில்குமார், நகர இளைஞரணி செயலாளர் பேபி. ரெ.ரமேஷ், ஒன்றிய இளை ஞரணி செயலாளர் நா.அன்பரசு, மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.இராசவேல், ஒக்கநாடு மேலையூர் பொறியாளர் ப.பாலகிருஷ் ணன், மண்டலக் கோட்டை இரா.அரவிந்த், அங்குகரன், சற்குணன், அறிவு, உரத்தநாடு பெரியார் எழிலன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் மா.கவிபாரதி, ஒன்றிய இளை ஞரணி தலைவர் அ.சுப்பிரமணியன், வீதிநாடக இயக்குநர் பி.பெரியார் நேசன், தெற்கு நத்தம் கிளைக்கழக இளைஞரணி தலைவர் சு.குமர வேலு, ஒன்றிய அமைப்பாளர் மாநல்.பரமசிவம் உள்ளிட்ட பொறுப்பாளர்களும் கழக தோழர் களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

உரத்தநாடு நகர செயலாளர் ரஞ்சித் குமார் கடவுள் மறுப்பு வாசகத்தினை கூறினார்.

தீர்மானம் 1: இரங்கல் தீர்மானம்

பெரியார் பெருந்தொண்டர் வடசேரி புண் ணியகோடி பெரியார் பகுத்தறிவு கலை இலக் கியஅணி செயலாளர் கவின், துரை.சித்தார்த்தன் ஆகியோரது மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2: இளைஞரணி மண்டல மாநாடு: மே 29இல் பட்டுக்கோட்டையில் நடைபெறும் திக்கெட்டும் பாய்வோம். திராவிடத்தை காப் போம் இளைஞரணி எழுச்சி மாநாட்டிற்கு திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப் படுகிறது. இளைஞரணி சார்பில் மாநாட்டில் வழங்கப்பட உள்ள உண்மை சந்தாக்களை ஒன்றிய இளைஞரணி சார்பில் பெருமளவில் திரட்டி தருவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 3: விடுதலை சந்தா: உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் 32ஆவது முறையாக விடுதலை சந்தாக்களை திரட்டி மே 18ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறும் விடுதலை வாசகர் திருவிழா வில் வழங்குவது என தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம் 4: திருமண விழாவிற்கு...

திருவோணம் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் கோ.கலியமூர்த்தி மகள் திருமணத் திற்கு 18.5.2018 அன்று வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கும், 27.5.2018 அன்று கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கும், 10.6.2018 அன்று கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் சகோதரி மகள் திரு மணத்திற்கு வருகை தரும் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர் களுக்கும், சிறப்பான வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 5: மாநாட்டை விளக்கி பிரச் சாரம்:பட்டுக்கோட்டையில் நடைபெறும் மண்டல இளைஞரணி மாநாட்டை விளக்கி வெட்டிக்காடு, பாப்பாநாடு, வட சேரி, தெற்கு நத்தம், கா.கோவிலூர், சடை யார் கோவில், ஒக்க நாடு கீழையூர் ஆகிய இடங்களில் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது என தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம் 6: மே 30ஆம் தேதி தஞ்சை யில் நடைபெறும் நெடுவைக் கோட்டை வை.குப்பு சாமி, அவர்களின் பேரனாகிய கனிம வள இயக் குநர் கு.அய்யாதுரை அவர்களின் மகனுடைய மணவிழாவிற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம் 7: விடுதலை சந்தா வசூல் குழு: தலைவர்: நா.அன்பரசு, துணை தலை வர்கள்: கு.நேரு, பேபி ரெ.ரமேஷ், செய லாளர்: ரெ.ரஞ்சித்குமார், துணை செயலா ளர்கள்: ரெ.சுப்பிர மணியன், பு.செந்தில் குமார், பொருளாளர்: நா.பிரபு

ஒருங்கிணைப்பாளர்கள்

பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில ப.க.தலைவர் மா.அழகிரிசாமி, பெரியார் வீர விளையாட்டு மாநில செயலாளர் நா.ராமகிருஷ் ணன், மாநில ப.க. துணைத்தலைவர் கோபு.பழனிவேல், மாநில வீதிநாடக கலைக்குழு பி.பெரியார் நேசன், மாவட்ட செயலாளர் அ.அருண கிரி, ஒன்றிய தலைவர் மா.ராசப்பன், ஒன்றிய செயலாளர் அ.உத்திராபதி, த.செக நாதன், ஒன்றிய அமைப்பாளர் மாநல். பரமசிவம், நகர தலைவர் பேபி.ரவிச்சந்திரன்

உறுப்பினர்கள்

முத்து.இராசேந்திரன், தி.வ.ஞானசிகா மணி, கை.முகிலன், அல்லிராணி, பூவை.ராமசாமி, கே.எஸ்.பி.ஆனந்தன், தோ. தம்பிக்கண்ணு, சு.அறிவரசு, வீர.இளங் கோவன், கே.வி.தர்ம ராஜன், இராஜகோ பால், வடசேரி இளங்கோவன், மா.மதிய ழகன், இரா.துரைராசு, இரா.சுப்பிர மணியன், இரா.வெற்றிக்குமார், க.மாரிமுத்து, வே.ராஜ வேலு, சி.கோவிந்தராசு, அ.தன பால், அ.சுப்பிரமணியன், ஆ.இலக்குமணன், அண்ணா.மாதவன், க.லெனின், ப.பால கிருஷ்ணன், நெல்லுப்பட்டு ராம லிங்கம், வன்னிப்பட்டு தமிழ்ச்செல்வன், மா.திரா விடச் செல்வன், இரா.இளவரசன், கு.அய்யா துரை, கு.கவுதமன், வெ.விமல், துரை.தன் மானம், இரா.மோகன்தாஸ், த.பர்தீன், அஞ்சம்மாள் மாணிக்கம், கண்ணு குடி தண்டாயுதபாணி, டி.ராஜகோபால், மா.கலியபெரு மாள், கதிரவன், ராஜ்கிரன், அ.மாதவன், கே.எஸ்.பி. சக்ரவர்த்தி, கு.ராஜேஷ், சாமி.அரசிளங்கோ, தொண்டராம் பட்டு உத்திராபதி, முக்கரை செல்வராசு, கோவிலூர் சதீஸ், வெள்ளூர் சக்தி, மா.தென் னகம், அ.ராசப்பன், ஓட்டுநர் தமிழ்ச் செல்வன், ஓட்டுநர் அசோக், ந.காமராஜ், ந.சங்கர்.

பூதலூர்

பூதலூர் ஒன்றிய திராவிடர் கழக இளை ஞரணி கலந்துரையாடல் கூட்டம் திருக்காட்டுப் பள்ளி மாலதி திருமண மண்டபத்தில் 28.4.2018 அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.

மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப.விஜயக்குமார் தலைமையேற்று உரையாற்றினார். கூட்டத்தின் நோக்கம் குறித்து மண்டல இளைஞரணி செயலாளர் இரா.வெற்றிக்குமார் உரையாற்றினார்.

தொடர்ந்து திருவையாறு ஒன்றிய செயலாளர் துரை.ஸ்டாலின், பூதலூர் ஒன்றியத் தலைவர் அள்ளூர் இரா.பாலு, பூதலூர் ஒன்றிய செயலாளர் ரெ.புகழேந்தி, தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், பூதலூர் ஒன்றிய அமைப் பாளர் கூத்தூர் கவுதமன், பூதலூர் ஒன்றிய ப.க. தலைவர் முனைவர் துரைராசு, தஞ்சை மாநகர மாணவர் கழக செயலாளர் பொ.பகுத்தறிவு, விடுதலையரசி முல்லை, திருக்காட்டுப்பள்ளி நகரச் செயலாளர் குமார், அரவிந்தக்குமார், கேசவன், விக்னேஷ், புவனா, மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல் ஆகியோர் உரையை தொடர்ந்து தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள்

தீர்மானம் 1: விருத்தாசலத்தில் நடைபெற்ற மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயலாக்குவது எனவும், ஆசிரியர் அவர்களின் அறிவிப்பினை ஏற்று உண்மை இதழுக்கு பூதலூர் ஒன்றியத்தின் 100 உண்மை சந்தாக்களை வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 2: பூதலூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளை கழகங் களிலும் கலந்துரை யாடல் கூட்டங்களையும், முக்கிய பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்களையும் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3: மே 29இல் பட்டுக்கோட்டையில் “திக்கெட்டும் பாய்வோம், திராவிடத்தை காப் போம்“ என்னும் முழக்கத்துடன் நடை பெறும் தஞ்சை மண்டல இளைஞரணி மாநாட்டிற்கு பூதலூர் ஒன்றியத்தின் சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு, மாநாட்டிற்கு பூதலூர் ஒன்றியத்தில் இருந்து ஒரு வேனில் அதிக அளவிலான இளைஞர்களை பங்கேற்கச் செய்வது எனவும் தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம் 4: கும்பகோணத்தில் ஜூலை 8 அன்று நடைபெறும் திராவிட மாணவர் கழகத் தின் பவள விழா மாநாட்டிற்கு பூதலூர் ஒன்றியத்தின் சார்பில் முழு ஒத்துழைப்பு வழங் குவதோடு ஏராளமான தோழர்களை பங்கேற்க செய்வது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 5: தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினையாக காவிரி நதிநீர் பங்கீட்டிற்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பினை அமல்படுத்த வேண்டு மாய் மத்தியஅரசை இக்கூட்டம் வற்புறுத்துகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner