எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புளியங்குடி, மே 17  தென்காசி மாவட்ட திராவிடர் மாணவர் கழக கலந்துரையாடலில் கூட்டம் 5.5.2018 அன்று மாலை 6.30 மணிக்கு புளியங்குடியில் உற்சாகமாக நடைபெற்றது.

மண்டல திராவிட மாணவர் கழக செயலாளர் அ.வ.சவுந்திரபாண்டியன் தலைமை வகித்தார். திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பங்கேற்று அறிவாசான் தந்தை பெரியாரின் கொள்கைகள் மாணவர்களிடம் முழுமையாக பரவியுள்ள தையும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஓய்வறியா உழைப்பால் விளைந்த பயன் களையும் எடுத்துக்காட்டி சிறப்புரையாற்றினார்.

மாநில ப.க.துணைத் தலைவர் கே.டி.சி. குருசாமி, மாவட்டத் தலைவர் த.வீரன், மாவட்ட செயலாளர் பி.பொன்ராசு, பெரியார் பெருந் தொண்டர்கள் செயராசு, இராச காந்தி, எஸ்.முப் பிடாதி, பேரா. நீலவேகம், ச.பாலகிருட்டிணன், எஸ்.ஆறுமுகசாமி, கொக்கம்பட்டி ப.குமார், கி.சுரேசு, இரா.செழியரசு, வ.முகமதுசஜின், இராஜ்குமார், இளைஞரணி மாவட்ட செயலாளர் கை.சண்முகம், மாவட்ட மாணவர் கழக தலைவர் நே.மனோஜ்குமார் உள்ளிட்ட தோழர்கள் கருத்துரை வழங்கினார்கள். குடந்தை மாநில மாநாட்டிற்கு 150 மாணவர் களுடன் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில மாணவர் கழக பவள விழா மாநாட்டிற்கு நன்கொடை வழங்கியோர்

கே.டி.சி.குருசாமி (மாநில ப.க.துணைத் தலைவர்) - ரூ. 500, த.வீரன் (மாவட்ட தலைவர்) - ரூ. 500, இரா.திரவியராஜ் (புளியங்குடி நகர தலைவர்) - ரூ. 1000, நோ.மனோஜ்குமார் (மாவட்ட மாணவர் கழக தலைவர்) - ரூ. 500,

தென்காசி மாவட்ட மாணவர் கழக புதிய பொறுப்பாளர்கள்

தலைவர்: நோ.மனோஜ்குமார், துணைத் தலைவர்: இராஜ்குமார், செயலாளர்: திராவிடமணி, துணைச் செயலாளர்: சுரேசு, அமைப்பாளர்: ஆமோஸ்

மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்

துணைத் தலைவர்: கோமதி சங்கர், துணைச் செயலாளர்: குமார்

மாவட்ட ப.க. அமைப்பாளர்

செயராசு

தூத்துக்குடி

6.5.2018 அன்று மாலை 5 மணிக்கு தூத்துக்குடி பெரியார் மய்யம் அரங்கில் நெல்லை மண்டல மாணவரணிச் செயலாளர்  சவுந்தரபாண்டியன் தலைமையில் மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பங்கேற்று அறிவாசான் தந்தை பெரியார் இலட்சியத்தை ஏற்றுக்கொண்டு தமிழினப் பெருமக்கள் படிப்பிலும் பதவியிலும் உயர்வடைந்து மான வாழ்வு வாழ்ந்து வருவதையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஓய்வறியா உழைப்பால் தமிழினம் பெற்று வரும் பயன்களையும் எடுத்துக்காட்டி தொடக்கவுரையாற்றினார்.

இக் கூட்டத்தில் 2018 சூலை 8ஆம் தேதி கும்பகோணத்தில் ‘பெரியாரை சுவாசிப்போம் பெருவாழ்வு பெறுவோம்’ என்ற தலைப்பில் நடைபெறவுள்ள திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு வெற்றிபெறும் வகையில் 150 மாணவர்களைப் பங்கேற்கச் செய்வது எனவும்

மாநாட்டை விளக்கி சுவரெழுத்து விளம்பரத்தையும் உள்ளுர் தொலைக்காட்சியில் பணிக்கப்பட்டுள்ள நன்கொடைத் தொகையினைத் திரட்டித் தருவதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தூத்துக்குடி திராவிடர் கழக மாநகரத் தலைவராக ஆ.மாரிமுத்து நியமிக்கப்படுவதாக மாநில திராவிடர் கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் அவர்களால் அறிவிக்கப் பெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக தலைவர் தி.ப.பெரியாரடியான், நெல்லை மண்டலத் தலைவர் மா.பால்ராசேந்திரம், மாவட்ட இளைஞரணி தலைவர் ஆ.கந்தசாமி, மாவட்ட கழக. துணைதலைவர் பொ.செல்வராசு, மாவட்ட கழக செயலாளர் மு.முனியசாமி, நெல்லை மண்டல செயலாளர் கோ.வெற்றி வேந்தன், வழக்குரைஞர் செல்வம், இரா.ஆழ்வார், செ.செல்வகுமார், ப.க.செயலாளர் சு.சுப்புராஜ், மு.முரளிதரன், கோ.அறிவு, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் உரத்தராடு பா.கவிபாரதி, மா.ரெங்கசாமி, பேரூரணி விக்டர், மகளிரணி சாந்தி, சி.கிருஷ்ணேஸ்வரி, மாநகர தலைவர் ஆ.மாரிமுத்து மற்றும் பெரியார் பிஞ்சுகள் கழக தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தருமபுரி

தருமபுரி மண்டல திராவிடர் கழக இளைஞரணி - மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் 8.5.2018 அன்று 12 மணியளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட திராவிடர் கழக தலைவர் இளைய.மாதன் தலைமை வகித்தார். மண்டல இளைஞரணி செயலாளர் வண்டி ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார்.

மாநில மகளிரணி, மகளிர் பாசறையின் அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்ட செயலாளர் சி.காமராஜ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கதிர் செந்தில், மாவட்ட ப.க. செயலாளர் மாரி.கருணாநிதி, மாவட்ட விடுதலை வாசகர் வட்ட செயலாளர் மா.சுதா, கிருட்டிணகிரி மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.புக ழேந்தி, மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் செல்லதுரை ஆகியோர் முன்னிலையேற்றனர்.

கலந்துரையாடல் கூட்டத்தில் மே 15ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் தருமபுரியில் புத்தக வெளியீட்டு விழாவிலும், மாலை பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெறும் பெரியார் படிப்பகம் திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள் அதில் இளைஞரணி, மாணவர் கழக தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொள்வது.

மே 19, 20ஆம் தேதிகளில் ஆத்தூரில் நடை பெறும் ஆசிரியர் பயிற்சி முகாமில் தருமபுரி, கிருட்டிணகிரி திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்து பெருமளவில் ஆசிரியர்களை பங்கேற்க செய்வது.

மத்தூரில் நடைபெறும் மண்டல இளை ஞரணி மாநாட்டை சிறப்பாக நடத்துவதெனவும், ஜூலை மாதம் குடந்தையில் நடைபெறும் மாநில மாணவர் கழக மாநாட்டில் பெருந்திரள் மாணவர்கள் பங்கேற்பது. கழகத்தின் அனைத்து அணிகளுக்குமான அளவில் உறுப்பினர்களை சேர்ப்பது போன்ற முடிவுகள் குறித்து திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழக மண்டல தலைவர் பெ.மதிமணியன், கிருட்டிணகிரி மாவட்ட செயலாளர் கோ.திராவிடமணி, மாவட்ட அமைப்பாளர் பெ.கோவிந்தராஜ், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் அண்ணா சரவணன், அரூர் ஒன்றிய தலைவர் ச.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்

அ.தமிழ்ச்செல்வன் ஆகியோர் கருத்துரை யாற்றினர்.

நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் இராமச் சந்திரன், செ.கனகராஜ், மு.அர்சுணன், ரா.கிருட்டிணன், நா.சதீஷ்குமார், சே.ராமஜெயம், ஆசிரியர் தனபால், இளைஞரணி செயலாளர் சத்தியராஜ், சந்திரபோஸ், ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருங்கல் பாலூரில் கழக கொடி ஏற்றல்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பாலூர் முந்திரி ஆலை சந்திப்பில் திராவிடர் கழக கொடியேற்றுவிழா நடைபெற்றது. கழக ஒன்றிய தலைவர் தெ. சாம்ராஜ்  தலைமை தாங்கினார்.  கழக நெல்லை மண்டல செயலாளர் கோ.வெற்றிவேந்தன், மாவட்ட செயலாளர் சி.கிருஷ் ணேஸ்வரி, பொதுக் குழு உறுப்பினர் ம.தயாளன், பகுத்தறிவாளர் கழக செயலாளர் பெரியார் தாஸ், நகர துணைத் தலைவர் கவிஞர் எச். செய்க்முகமது கழக தோழர்கள் ஆனந்த், சந்தோஷ், ராமசுப்பிரமணியன் கலந்து கொண்டனர். திராவிடர் கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா பெரியார் செல்வன் கழக கொடியினை ஏற்றி வைத்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner