எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார் படிப்பக கட்டடத்தையும், சுயமரியாதை சுடரொளிகள் படத்தினையும் பொதுமக்கள் வெள்ளத்திடையே கழகக் கொள்கை முழக்கத்திற்கிடையே தமிழர் தலைவர் திறந்து வைத்தார்.

தருமபுரி, மே 17- தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டியில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், - அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் பெரியார் படிப் பகம், தமிழர் தலைவர் வீரமணி நூலகம் மற்றும் சுய மரியாதை சுடரொளிகள் படத்திறப்பு ஆகியவை இணைந்த பொதுக்கூட்டம் 15.5.2018 அன்று மாலை 6 மணியளவில் பாப்பிரெட்டிப்பட்டி ஜீவா திடலில் சுய மரியாதைச் சுடரொளி இராமியம்பட்டி ஆர்.வி.சாமிக் கண்ணு நினைவரங்கத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மாரி.கருணாநிதி தலைமை தாங்கினார். ஒன்றிய ப.க. தலைவர் கு.தங்கராசு வரவேற்புரையாற்றினார். மாவட்ட ப.க. தலைவர் கதிர் செந்தில் தொகுத்து வழங்கினார்.

மாவட்ட திராவிடர் கழக தலைவர் இளைய.மாதன், மாவட்ட செயலாளர் சி.காமராஜ், நகர தலைவர் க.திரா விட முத்து, நகர செயலாளர் கே.பாரதி, நகர அமைப்பா ளர் ராமசாமி, மாவட்ட ப.க.துணைத் தலைவர் பெரு.முல்லையரசு, மாவட்ட துணை செயலாளர் சேட்டு, பொதுக்குழு உறுப்பினர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட துணைத் தலைவர் தமிழ்பிரபாகரன், மாவட்ட ப.க. ஆசிரியரணி தலைவர் இர.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ப.க. ஆசிரியரணி செயலாளர் தீ.சிவாஜி ஆகியோர் முன்னிலையேற்றனர்.

திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெய ராமன் தொகுத்து வழங்கி தொடக்கவுரையாற்றினார். காரிமங்கலம் கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.சி. ஆர்.மனோகரன், தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் சுபேதார், தேசிய மக்கள் கட்சி நிறுவனர் இனமுரசு கோபால், மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் மா.அழகிரிசாமி, அரூர் ஒன்றிய பகுத்தறி வாளர் கழக தலைவர் ச.இராஜேந்திரன், மாவட்ட பகுத் தறிவாளர் கழக துணைத்தலைவர் பெரு.முல்லையரசு, மாவட்ட காங்கிஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பாளர் கோவேந்தன், மார்க்சிய கம்யூனிஸ்ட் (எம்) கட்சியின் ஒன்றிய செயலாளர் வாஞ்சி ஆகியோர் கருத்துரையாற்றினர். அதைத் தொடர்ந்து, பாப்பி ரெட் டிப்பட்டி வட்டம், கொக்கராப்பட்டியைச் சேர்ந்த பட்ட தாரி ஆசிரியர், தெருக்கூத்து கலைஞர் அசுர வேடமணிந்து மேடைகளில் பகுத்தறிவு கருத்துகளை பட்டிதொட்டி எங்கும் பரப்பி வரும் இராஜவேலு, இராவண வேடம் அணிந்து வந்த அவருக்கு தமிழர் தலைவர் சிறப்பு செய்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

பாப்பிரெட்டிப்பட்டியில் பகுத்தறிவார் கழகம் சார்பில் கட்டப்பட்டுள்ள படிப்பக கட்டடத்தை கட்டி முடித்த கழக நிர்வாகிகள் மாரி.கருணாநிதி, கு.தங்கராஜ் ஆகியோருக்கு கைத்தறி ஆடை அணிவித்து நூலகத்திற்கு தலைமை கழகத்தின் சார்பில் புத்தகங்களை வழங்கினார். ஆசிரியருக்கு அரசியல் கட்சி பிரமுகர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் சால்வை அணிவித்தும் மாலைக்கு பதில் பணம் விடுதலை சந்தாக்கள், விடுதலை வளர்ச்சி நிதிக்கென பணமும் அளித்தனர்.

தமிழர் தலைவர் உரை

அதைத்தொடர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் பேசிய போது சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து பணியாற்றி மறைந்த பழைய தோழர்களின் படங்களை எல்லாம் திறந்து வைத்து தந்தை பெரியாருக்குஅத்தோழர்களால் அளிக்கப்பட்ட இடத்தில் ஒரு கட்டடத்தை கழக தோழர் கள் கட்டி அதில் படிப்பகம், நூலகம் அமைத்துள்ளதை பாராட்டுகிறேன். அதற்காக உழைத்த மாரிகருணாநிதி, தங்கராஜ், திராவிடமுத்து மற்றும் அதற்காக உழைத்த மற்ற தோழர்களையும் பாராட்டுகிறேன்.

பாப்பிரெட்டிப்பட்டிக்கு நான் வந்து 30 ஆண்டுகளாகி விட்டது என குறிப்பிட்டார்கள். நான் இவ்வூருக்கு புதியவனல்லன். ஒலிபெருக்கி இல்லாத காலத்தில் பெட் ரோமாக்ஸ் விளக்கு கூட இல்லாத அக்காலகட்டத்தில் சிறுவனாக இருந்தபோதே பேசி இருக்கிறேன்.

பாப்பிரெட்டிப்பட்டியிலிருந்து பொம்மிடிக்கு இரயிலுக்கு செல்வதற்காக இருசக்கர வண்டி (சைக்கிள்)யில் சென்று பொம்மிடியில் பெரியார் பெருந்தொண்டர் வெங்கடாசலம் என்பவர் துணிக்கடை வைத்திருந்தார் அவரின் கடையில் தங்கி இருந்துவிட்டு இரயிலுக்கு சென்றதுண்டு - பாப்பிரெட்டிப்பட்டி, தமிழகத்தை வழி நடத்தும் ஊர், மாரி.கருணாநிதி வழிகாட்டி இருக்கிறார். திராவிடர் கழகம் இன்று உலகளாவிய அமைப்பாக வளர்ந்திருக்கிறது. இது மக்களுக்கான இயக்கம் 82 வய திலும் முத்து அவர்கள் இயக்கத்தில் சிறப்பாக இருக் கிறார் எனவே அவரை பாராட்டுகிறேன் என அவருக்கு சிறப்பு செய்து பாராட்டினார். வந்த சுதந்திரம் வடநாட்டு கொள்ளையனுக்கே என்று பெரியார் கூறினார் அந்த நாளை துக்க நாளாக அறிவித்தார் பெரியார்.

கொண்ட கொள்கைக்காக, தான் வகித்த பதவிகளிலி ருந்து வெளியேறியவர்கள் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் இருவர் மட்டுமே என குறிப்பிட்டார்.

பெண்களுக்கு சொத்துரிமை சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனதால் அமைச்சர் பதவியை தூக்கி எறிந்தவர் அம்பேத்கர் என்றால், சாமியார்கள் நிறைந்த நாடு இந்தியா, அதை ஒழிப்பதுதான் நம் பணி, ஜாதி இல்லாத, சாமியார்கள் இல்லாத நாடாக உருவாக்க வேண்டும். தினம் தினம் வடநாட்டில் சாமியார்கள் ஜெயிலுக்கு போய்க்கொண்டே இருக்கிறார்கள். இரண்டு விசயத்தில் ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும் ஒன்று 69 சதவிகித இடஒதுக்கீட்டை சட்ட வடிவமாக்கியது. இரண்டு சங்கராச்சாரியை கைது செய்தது. தமிழ்நாடு பெரியார் பூமி, இன்றைக்கும் கருப்பு சட்டை தேவை படுகிறது. அனைத்து கட்சியினரும் கருப்பு சட்டை தைத்து வைத்துள்ளார்கள். ஏன் ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் கூட கருப்புச் சட்டை தைத்து வைத்திருக்கிறார்கள். எங் களுடன் வந்தால் மானத்தை மீட்கவும், உரிமையை மீட்கவும் ஜெயிலுக்கு போகலாம். நாம் திராவிடத்தால் வாழ்ந்திருக்கிறோமே தவிர திராவிடத்தால் ஒருபோதும் வீழவில்லை என்று தனது உரையில் தமிழர் தலைவர் குறிப்பிட்டார்.

பொதுக்கூட்டத்தின் சிறப்புகள்

பாப்பிரெட்டிபட்டியில் நடைபெறும் நிகழ்ச்சி குறித்து நூறு இடங்களில் குறிப்பாக தருமபுரி, கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிபட்டி, அரூர் பகுதிகளில் 100 இடங்களில் தமிழர் தலைவர் வருகை குறித்து சுவரெழுத்து பிரச்சாரம் செய்தது. மேடையில் பேசிய அரசியல் பிரமுகர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர், தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கர் அவர்களையும் நேரில் பார்க்கவில்லை அவர்கள் இருவருமாக தமிழர் தலைவரை பார்க்கிறேன் என குறிப்பிட்டார். மத்தூர் கலைமகள் கல்வி நிறுவன தாளாளர் முன்னாள் தமிழ் வளர்ச்சித் துறை இணை இயக்குநர் சிந்தை மு.இராஜேந்திரன் குறிப்பிடும்போது, மத்தூர் பள்ளியில் தந்தை பெரியாரின் சிலையை வைக்க இருக்கிறேன். அதை தமிழர் தலைவர் அவர்கள்தான் திறந்து வைக்க வேண்டும். அது 2 மாதங்கள் ஆனாலும் சரி 2 வருடங்கள் ஆனாலும் சரியே அவர்தான் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

நான் முதல் மேடை ஏறி பேசினேன் என்றால் அது அம்பேத்கர்அவர்களைப் பற்றியது அதன் பின்னரே எனக்கு இதுபோன்ற மேடைகள் கிடைத்தன. எனவே காரிமங்கலத்தில் அம்பேத்கர் அவர்களுக்கு சிலை வைக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். அந்த சிலையை தமிழர் தலைவர் திறந்து வைப்பார் என்று நம்பிக்கை யோடு தெரிவிப்பதாக பி.சி.ஆர். மனோகரன் தெரிவித்தார்.

காங்கிரசு கட்சியின் மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு குறிப்பிடுகையில், தமிழகத்தின் ஆட்சி மாற்றத் திற்கான தலைவர் ஆசிரியர் அவர்கள்தான் என குறிப் பிட்டார்.

படிப்பக திறப்பு விழாவில் ஒரு பெண் குழந்தைக்கு அறிவுச் செல்வி என்றும், பொதுக்கூட்ட மேடையில் ஜங்காலப்பட்டி சேட்டு இணையரின் மகனுக்கு அன்புச் செல்வன் என்றும் பெயர் சூட்டினார்.

படிப்பக திறப்பு விழாவில் 75 வயதுடைய பெண், ஆசிரியரைக் காண கூட்டத்தினரை விலக்கி வந்து ஆசிரி யரின் கையைப் பிடித்துக் கொண்டு எனக்கு அய்யா தந்தை பெரியார், திராவிடமணி என்று பெயர் சூட்டினார் என்று பெருமையாக சொன்னார். ஆசிரியர் அவரை பக்கத்தில் அழைத்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார்.

படிப்பக கட்டடத்தில் 12 பெரியார் பெருந்தொண்டர் களின் படங்களை ஆசிரியர் பார்வையிட்டு மகிழ்ந்தார்.

பாப்பிரெட்டிப்பட்டி அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் குறிப்பாக பெண்களும், பள்ளி மாணவ மாணவிகளும் ஆசிரியரைக் காண திரண்டிருந்து அவருக்கு கைகொடுத்து நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

கலந்துகொண்டோர்

நிகழ்ச்சியில் மாநில மகளிரணி மகளிர் பாசறை அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, இரா.தமிழ்ச்செல்வன் (திமுக), இரா.சித் தார்த்தன் (திமுக), ஜெயசந்திரன் (திமுக), வீ.சிவாஜி, மண்டல தலைவர் பெ.மதிமணியன், மண்டல செயலாளர் கருபாலன், பொதுக்குழு உறுப்பினர் இரா.வேட் ராயன், மாவட்ட அமைப்பாளர் பெ.கோவிந்தராஜ், பொன் தங்கராசு (திமுக), கோ.தீத்து, கோ.பழனி, மாவட்ட துணைத் தலைவர் கதிர், எம்ஆர்சி மாவட்ட தலைவர் க.சின்னராஜ், மகளிரணி தலைவர் சங்கீதா, செயலாளர் முருகம்மாள், மகளிரணி பாசறை கவிதா, விவசாய அணி தலைவர் மு.சிசுபாலன், கட்டரசம்பட்டி தீர்த்தகிரி, இராமச்சந்திரன், கழக நிர்வாகிகள் கிருஷ்ண கிரி மாவட்ட செயலாளர் கோ.திராவிடமணி, இணை செயலாளர் வனவேந்தன், துணை செயலாளர் அறிவரசன், மா.சுதா, மணிவேல், பகத்சிங், தே.சத்யராஜ், மா.முனி யப்பன், மா.செல்லதுரை, அரங்க திராவிடன், நளினி, சோபியா, மா.சிலம்பரன், பழ.சின்னதுரை, காணன், செங்கல்மாரி, ஆசிரியை ஜீவிதா, பூங்குன்றன், கல்பனா, கலா, அறிவுமதி, சுசிலா, ஆ.கருணாநிதி, மா.பூபேஸ், அரூர் தோழர்கள் இளையராஜா, பிலங்கன், தனசேகரன், செந்தாமரைக் கண்ணன், ஆதி, அலெக்சாண்டர், சங்கர், அண்ணாநகர் சிவானந்தன், அரவிந்தன், வேப்பிலைப் பட்டி சத்தரபதி, ராம்குமார், சூர்யா மற்றும் பல நூறு பேர் கலந்து கொண்டனர். ஞா.அருள் நன்றி கூறினார்.

கட்டடத்தை சிறப்பாக அமைக்க உழைத்த தோழர்கள் மாரி கருணாநிதி, து.தங்கராசு ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். நூலகத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட இயக்க நூல்களை ஆசிரியர் வழங்கினார்.

பெரியார் பெருந்தொண்டர் திராவிட முத்து அவர்களின் தொண்டைப் பாராட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார்.

தந்தை பெரியாரால் பெயர் வைக்கப்பட்ட தோழியர் திராவிடமணி தமது 75ஆவது வயதில் தமிழர் தலைவரைச் சந்தித்தார். அவரது உறவினரின் குழந்தைக்கு தமிழர் தலைவர் அறிவுச் செல்வி என பெயர் சூட்டினார்.

கழகத் தோழரின் குழந்தைக்கு அன்புச் செல்வன் என தமிழர் தலைவர் பெயர் சூட்டினார். அதன் மகிழ்வாக ரூ.1000 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கினார்.

இராவணன் வேடமிட்டு பகுத்தறிவு பணி செய்து வரும் ராஜவேலுவுக்கு பயனாடை அணிவித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார் தமிழர் தலைவர்.

தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை. தமிழர் தலைவருக்கு ஏராளமானோர் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

 

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner