எழுத்துரு அளவு Larger Font Smaller Font


அம்மையாண்டி

பட்டுக்கோட்டையில் மே-29 இல் திக்கெட் டும் பாய்வோம் திராவிடத்தைக் காப்போம்!- இளைஞர் எழுச்சி மாநாட்டை விளக்கி தஞ்சை மண்டல இளை ஞரணி சார்பாக அறிவிக்கப்பட்ட தொடர் தெருமுனைக் கூட்டங்களில் 16.05.2018 அன்று மாலை 6 மணியளவில் பட்டுக்கோட்டை மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் அம்மை யாண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார்.

கோவிலூர்பாலம்

பட்டுக்கோட்டை மே-29 இளைஞர் எழுச்சி மாநாடு விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் 16. 05. 2018 அன்று மாலை 7 மணியளவில், நெல்லுப்பட்டு அருகில் கோவிலூர் பாலத்தில் கிளை கழக செயலாளர் ம.இராவணன்  தலை மையில் நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல் வரவேற்று உரையாற்றினார். தி.மு.க ஊராட்சி பிரதிநிதி கோ.இரவி,  தி.மு.க ஊராட்சி செயலாளர் த.குணசேகரன் காங்கிரஸ் வட்டார பொருளாளர் இரா.சிவகுரு ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர். மாநில வீதி நாடக கலைக்குழு அமைப்பாளர் பி.பெரியார் நேசன், மாவட்ட கலை இலக்கியணி செயலாளர் வெ.நாராயணசாமி, தெற்கு நத்தம் குமரவேல், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், தலைமை கழக பேச்சாளர் சி.கோவிந்தராசு, தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

திராவிடர் கழக தலைமை கழக பேச்சாளர் முத்து.கதிரவன்  கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.

இறுதியில் பஞ்சநதிக்கோட்டை திராவிடர் கழக தோழர் பாரதிதாசன் நன்றி கூறினார்.

செங்கிப்பட்டி

பட்டுக்கோட்டையில் மே-29 திக்கெட்டும் பாய்வோம் திராவிடத்தைக் காப்போம் இளைஞர் எழுச்சி மாநாட்டை விளக்கி தஞ்சை மண்டல இளைஞரணி சார்பாக அறிவிக்கப்பட்ட தொடர் தெருமுனைக் கூட்டங்களில் 16.05.2018 அன்று மாலை 6 மணியவில்  தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம்  செங்கிப்பட்டியில் நடை பெற்ற கூட்டத்தில் இராம.அன்பழகன் சிறப் புரையாற்றினார்.

குடந்தை

பட்டுக்கோட்டையில் மே-29 திக்கெட்டும் பாய்வோம் திராவிடத்தைக் காப்போம் இளைஞர் எழுச்சி மாநாட்டை விளக்கி தஞ்சை மண்டல இளைஞரணி சார்பாக அறிவிக்கப்பட்ட தொடர் தெருமுனைக் கூட்டங்களில் 15.05.2018 அன்று மாலை 6 மணியளவில் குடந்தை காந்தி பூங்காவில் நடைபெற்ற கூட்டத்தில் அதிரடி க.அன்பழகன் சிறப்புரையாற்றினார்.

கரந்தை

பட்டுக்கோட்டையில் மே-29 திக்கெட்டும் பாய்வோம் திராவிடத்தைக் காப்போம்  இளைஞர் எழுச்சி மாநாட்டை விளக்கி தஞ்சை மண்டல இளைஞரணி சார்பாக அறிவிக்கப்பட்ட தொடர் தெருமுனைக் கூட்டங்களில் 15.05.2018 அன்று மாலை 6 மணியளவில் தஞ்சை மாவட் டம் தஞ்சை மாநகரம் கரந்தையில்   நடைபெற்ற கூட்டத்தில் முத்து .கதிரவன் சிறப்புரையாற்றினார்.

பெரும்புலியூர்

14.5. 2018 திங்கள் மாலை 6.30 மணியளவில்  திருவையாறு ஒன்றியம்  பெரும் புலியூர் கிராமத் தில் திக்கெட்டும், பாய் வோம், திராவிடத்தை காப்போம். என்ற தத்துவ முழக்கத்தை முன் வைத்து வரும் 29ஆம் தேதி பட்டுக்கோட்டையில் நடைபெறும் தஞ்சை மண்டல கழக இளை ஞரணி மாநாட்டை விளக்கி தெரு முனைக் கூட்டம் நடைபெற்றது.

ஒன்றிய ப.க.செயலாளர் இடும்பை தமிழரசன் தலைமை வகித்து உரையாற்றினார்.

மாநில ப.க.துணைத் தலைவர் கோபு பழனிவேல். ஒன்றிய கழக தலைவர் ச.கண்ணன், ஒன்றிய தி.க.செயலாளர் வழக்குரைஞர் துரை.ஸ்டாலின் பெரியார் பெருந்தொண்டர்

சி.இடும்பையன், லெ.சுயம் பிரகாசம், முனி யப்பன் , கணேசன், பாலையன், முன்னிலை வகித்தனர்.

தி.மு.க. ஒன்றிய செயலாளர் வை.சிவசங்கரன், தி.மு.க. ஒன்றியக் குழு உறுப்பினர், மதியழகன், ஒன்றிய கழக அமைப்பாளர் விவேகவிரும்பி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் மோகன்ராஜ், மாநகர இளைஞரணி து.தலைவர் அ.பெரியார் செல்வன், கலியபெருமாள், மாவட்ட ப.க.அமைப் பாளர்  இராஜீ, மாவட்ட ப.க.செயலாளர்

ச.அழகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அடுத்து, பல வரலாற்றுச் சம்பவங்களைக் கூறி மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தொடக்க உரையாற்றினார்.

தொடர்ந்து கழக தலைமைக் கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் அவர்கள் தமது உரையில், மக்களின் அறிவு வளர்ச்சியை பாதிக்கக்கூடிய கடவுள், மதம், ஜாதிய உணர்வு, பல வகையான மூட நம்பிக்கைகளின் ஆபாசத் தையும் , அறியாமையை விளக்கி பகுத்தறிவு முழக்கமிட்டார்.

இறுதியில் தி.மு.க. செயலாளர் ப.இராச மாணிக்கம் நன்றியுரையாற்றினார்,

ஒட்டங்காடு

பட்டுக்கோட்டையில் மே-29 திக்கெட்டும் பாய்வோம் திராவிடத்தைக் காப்போம் இளை ஞர் எழுச்சி மாநாட்டை விளக்கி தஞ்சை மண்டல இளைஞரணி சார்பாக அறிவிக்கப்பட்ட தொடர் தெருமுனைக் கூட்டங்களில் 14.05.2018 அன்று மாலை 6 மணியளவில் பட்டுக்கோட்டை மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் ஒட்டங் காட்டில் நடைபெற்ற கூட்டத்தில் தி.என்னாரசு பிராட்லா சிறப்புரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner