எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* வீதி நாடகம் * கருத்தரங்கம் * முகவர்களுக்குப் பாராட்டு * வாசகர்கள் கேள்விகள் * 'விடுதலை விருது'

* தொகுப்பு: மின்சாரம்

 

தஞ்சை 'விடுதலை' வாசகர் திருவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய "தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு - ஒரு பார்வை" என்ற புதிய புத்தகத்தை நாவலர் நா.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி முதல்வர் பேராசிரியர் இளமுருகு வெளியிட மேனாள் அரசு வழக்குரைஞர் கி.குப்புசாமி, தஞ்சை மண்டல தலைவர் வெ.ஜெயராமன், மண்டல செயலாளர் மு.அய்யனார், தஞ்சை ஒன்றிய தி.மு.க. செயலாளர் தொ.அருளானந்தசாமி, பின்னையூர் கோவிந்தராஜன் (தி.மு.க.), வேலூர் மாவட்டத் தலைவர் வி.இ.சிவக்குமார், திருவாரூர் மாவட்டத் தலைவர் இரா.கோபால், ஒக்கநாடு மேலையூர் மா. துரைராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பெற்றுக்கொண்டனர். (தஞ்சை - 18.05.2018)

கழகத்தின் பாசறையான தஞ்சாவூரில் 'விடுதலை'க்கு விழா எடுக்கும் விழா வெகு நேர்த்தியாக மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக என்றைன்றைக்கும் நெஞ்சில் தவழும் சிறப்பு விழாவாக செறிவான முறையில் நேற்று (18.5.2018) பிற்பகல் தஞ்சை சுந்தர்மகாலில் சுவையும், கருத்தும் நிரம்பிக் கொழித்த விழாவாக நடைபெற்றது. பல்துறைப் பெரு மக்கள் நிறைந்த அலையாக அது ஒளி வீசியது.

கருத்தரங்கம் என்னும் கருவூலம்

மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மா. அழகிரிசாமி அவர்கள் கருத்தரங்கினைத் தொடங்கி வைத்து உரையாற் றுகையில் வடமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழை மீட்டெ டுத்து, திருக்குறளைப் பாமர மக்கள் மத்தியிலும் எடுத்துச் சென்றது 'விடுதலை'யே என்று குறிப்பிட்டார்.

பெண்ணுரிமைக் காப்பதில் 'விடுதலை' என்னும் தலைப் பில் உரையாற்றிய  ஓவியா, கற்புக்கரசி என்று கண்ணகியையும் நளாயினியையும் கூறுகிறார்களே அந்தக் கண்ணகியால் மன்னனை எதிர்க்க முடிந்தது. ஆனால் தன்னை விட்டு விட்டு மாதவியை நோக்கிச் சென்ற கணவனை எதிர்க்க முடியவில் லையே - இது எந்த வகைக் கற்பு?" அதே போல தொழு நோயால் பீடிக்கப்பட்ட கணவனைத் தாசி வீட்டுக்குத் தூக்கிச் சென்ற நளாயினிதான் கற்புக்கரசியா என்ற அர்த்தம்மிக்க வினாவைத் தொடுத்தார். 400 தாசிகளைக் கோயிலுக்கு விட்ட ராஜராஜன்தான் தலை சிறந்த அரசனா என்ற ஆத்திரமான வினாவும் அவரு டைய உரையில் அனலாகத் தகித்தது.

மானமீட்புப் பணியில் 'விடுதலை' எனும் தலைப்பில் உரையாற்றிய வழக்குரைஞர் புலிகேசி தஞ்சாவூர் சுடுகாட்டில் சூத்திரர்களுக்கான இடம் என்றிருந்ததைக் கண்ணுற்ற தந்தை பெரியார் போர்க் கொடி தூக்கினார் - விடுதலை கர்ச்சித்தது அதன் விளைவாக அந்த அறிவிப்புப் பலகை மறைந்தது அந்தப் பேதமும் ஒழிக்கப்பட்டது. "விபச்சாரி நீயே  என் மனைவி" என்ற கட்டுரை 'விடுதலை'யில் வெளி வந்தது என்பதற்காக விடு தலைக்கு ஜாமீன் தொகை கேட்கப்பட்ட வரலாற்றையும் எடுத்துக்காட்டினார்.

மூடநம்பிக்கையை ஒழிக்கும் பணியில் 'விடுதலை' என்னும் தலைப்பில் உரையாற்றிய இரா. பெரியார் செல்வம், பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று திட்டமிட்டுப் புரளியைக் கிளப்பிய நேரத்தில், தன் தோளில் தமுக்கை மாட்டிக் கொண்டு பிள்ளையார் பால் குடிப்பதாக நிரூபித்தால் ரூபாய் ஒரு லட்சம், கொழுக்கட்டை சாப்பிட்டார் என்று நிரூபித்தால் ரூபாய் 2 லட்சம் அளிக்கத் தயார் என்று சென்னை அண்ணா சாலையில் அறி வித்தாரே - சவால் விட்டாரே -  'விடுதலை' 'வெடிகுண்டு' வீசி யதே, அத்தோடு அந்த மூடநம்பிக்கைப் பிரச்சாரம் சென்றயிடம் தெரியாமல் பதுங்கியதை எடுத்துக் காட்டி பேசினார்.

கும்பகோணம் மகா மகா குளம் என்பது மூத்திரக் குட்டை என்று சொன்னது விடுதலையே! அந்தக் குளத்தில் மலக் கழிவு 28 விழுக்காடு என்றும், மூத்திரக் கழிவு 40 விழுக்காடு என்றும், பரிசோதனை அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அதிகார பூர்வமாக அறிவித்ததையும் விளக்கினார்.

கல்வி வேலை வாய்ப்பில் 'விடுதலை' என்னும் தலைப்பில் உரையாற்றிய அதிரடி அன்பழகன் 1928இல் நீதிக்கட்சி ஆட்சி யில் முதல் வகுப்புரிமை சட்டம் கொண்டு வரப்பட்டதையும், சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் அதன் கழுத்தை வெட்டிய நிலையில் பொங்கி எழுந்து மக்களைத் திரட்டித் தந்தை பெரியார் போராடியதையும், 69 சதவீத இடஒதுக்கீடு இன்று தமிழ்நாட்டில் நாட்டப்பட தமிழர் தலைவர் ஆற்றிய அருந் தொண்டினையும் எடுத்துக்காட்டியும் இதில் 'விடுதலை' ஏட்டின் பங்களிப்பையும் எடுத்துக் கூறினர்.

மண்டல் குழு பரிந்துரைக்காக திராவிடர் கழகத்தால் நடத் தப்பட்ட 42 மாநாடுகள் 16 போராட்டங்கள் பற்றியும் விரிவாகப் பேசினார். இந்தியா முழுவதும் இன்றைக்குப் பிற்படுத்தப்பட்டோர் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் மத்திய அரசு துறைகளில் அனுபவிக்கிறார்கள் என்றால், இந்நிலைக்குக் காரணம் திராவிடர் கழகம் அதன் ஒப்பற்ற தலைவர் ஆசிரியரும்,  'விடுதலை' ஏடும் அல்லவா என்று கேட்டார்.

தலைமையுரை

கருத்தரங்கத்திற்குத் தலைமையேற்ற திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் 'விடுதலை' ஏட்டில் அறிஞர் அண்ணா, சாமி சிதம்பரனார், அ. பொன்னம்பலனார், குத்தூசி குருசாமி, அன்னை மணியம்மையார், ஆசிரியர் கி. வீரமணி ஆகிய பெரு மக்கள் ஆசிரியர்களாக இருந்த சிறப்பை எடுத்துக்காட்டி நாட்டில் ஆசிரியர் என்று சொன்னாலே அது 'விடுதலை' ஆசிரியரை மட்டுமே குறிப்பதன் பெருமையை விளக்கினார்.

83 ஆண்டு வரலாற்றில் 56 ஆண்டு காலம் ஆசிரியராக இருந்த - இருந்து வருகிற சாதனை நமது ஆசிரியர் அவர் களுக்கே உரித்தானதாகும்.

நமது ஆசிரியர் அவர்கள் 'விடுதலை'க்கு ஆசிரியராகப் பொறுப்பேற்க முன்வந்திரா விட்டால் 'விடுதலை' வார ஏடாக ஆகியிருக்கும் என்பதை தந்தை பெரியார் அறிக்கையிலிருந்து சுட்டிக்காட்டி உரையாற்றினார்.

'விடுதலை' காணொலி

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ்,    'விடுதலை'யின் தோற்றம், அது நடந்து வந்த பாதைகளை நேர்த்தியாக விளக்கும் 'விடுதலை'யின் காணொலிக் காட்சி யினை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

வீதி நாடகம்

'விடுதலை' வாசகர்கள் திருவிழா - விருது வழங்கும் விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக மாநிலக் கலைத் துறை செயலாளர் தெற்கு நத்தம் ச. சித்தார்த்தன் குழுவினரின் வீதி நாடக நிகழ்ச்சி 30 மணித்துளிகள் சிறப்பாக நடைபெற்றது.

மாநில மகளிரணி செயலாளர் தஞ்சை கலைச்செல்வி வீதிநாடகத்தைத் தொடங்கி வைத்து வாழ்த்திப் பேசினார்.

வாசகர்களுடன் ஆசிரியர்

வாசகர்களுடன் 'விடுதலை' ஆசிரியர் என்ற நிகழ்ச்சி புதுமையானதாகவும், பொருத்தமானதாகவும் அரங்கேறியது 'விடுதலை' வாசகர் வட்டத் தலைவர் தங்க. வெற்றிவேந்தன் இதனைத் தொடங்கி வைத்தார்.

முதன் முதலாக தமிழ்நாட்டில் இணையத்தில் வெளிவந்த ஏடு, விடுதலையே என்று தெரிவித்தபோது பலத்த கரஒலி!

விசிறி சாமியார் என்று அழைக்கப்படும் தஞ்சை முருகன் அவர்கள், மறைந்த இயக்கத்தோழர்கள் பற்றிய தரவுகள் 'விடுதலை'யில் அளிக்கப்படுவதைப் பெரிதும் பாராட்டி, தான் எழுதிய பெரியார் பற்றிய பாடல்களையும் மேடையில் பாடிக் காட்டினார்.

ஆசிரியர் பி. கலைச்செல்வி தனது உரையில் இரண்டாம் வகுப்பு மட்டுமே படித்த தனது தந்தையார் விடுதலையை நாள்தோறும் நாள்தோறும் எழுத்துக் கூட்டிப் படித்ததையும், தன்னையும் சிறுவயது முதலே படிக்க ஊக்குவித்த வெற் றியையும் எடுத்துக் கூறிய அவர், இன்று பெண்கள் தேர்வுகளில் முதலிடத்தில் வருவதையும் பெருமிதமாக எடுத்துக்கூறி இதில் 'விடுதலை'யின் பெரும்பங்கையும் நன்றி உணர்வோடு நவின்றார். ஆசிரியர் அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்களையும் விடுதலையைப் படிக்கத் தூண்டி வருவதையும் எடுத்துக் கூறினார். விடுதலை வாசகர் கக்கரை மனோகரன் 25 ஆண்டு காலமாக விடுதலையை நாள் தறவாமல் படித்து வருகிறேன். அதன் மூலம் பேசவும், எழுதவும் பயிற்சி பெற்றேன். இந்திய அரசியலையும் தெரிந்து கொண்டேன். விளம்பரம் அறவே இல்லாத கருத்துக் கருவூலம் 'விடுதலை'யே என்று மனந் திறந்து பாராட்டினார்.

வாசகர்களின் கேள்விகளுக்கு ஆசிரியர் பதில் எனும் விருந்து

'விடுதலை' வாசகர்களின் கேள்விகளுக்கு 'விடுதலை' ஆசிரியர் பதில் கூறினார். வாசகர்கள் வழக்குரைஞர் வெங்க டேசன், திருக்கருக்காவூர் கோ. சிவசண்முகம், பிண்ணையூர் இராதா மணாளன் ஆகியோர் எழுப்பிய வினாக்களுக்கு விடையளித்த ஆசிரியர் கடைகள் தோறும் விடுதலை விற்பனை என்ற ஏற்பாடு திட்டம் எங்கள் கவனத்தில் இருக்கிறது. விரைவில் அது செயல்பாட்டுக்கு வரும் 'விடுதலை' ஆயுள் சந்தாவின் தொகையும், காலத்தையும் மாற்றி அமைக்க இலயாது.   நட்டத்தில்தான் 'விடுதலை' இயங்கி வருகிறது. உங்களைப் போன்ற வசதி வாய்ப்புள் ளவர்கள், வசதி வாய்ப்பற்றவர்களுக்குச் சந்தா கட்டலாம் என்று ஆசிரியர் சொன்னபோது, அடுத்த நிமிடமே, தான் ஒருவருக்கு சந்தா கட்டுவதாக வழக்குரைஞர் வெங்கடேசன் கூறியது குறிப்பிடத்தக்கதும். மற்றவர்களால் பின்பற்றத்தக்கதுமாகும். ஆசிரியர் அவரைப் பாராட்டினார். 'விடுதலை' வளர்ச்சிக்காகப் பாடுபடும் தோழர்களுக்கு 'விடுதலை தோழர்' என்று அடையாளப்படுத்தும் ஏற்பாடுகளை செய்யலாம் என்றார் ஆசிரியர். திராவிட மாணவர் கழக தஞ்சை மாநகரத் தலைவர் சு. இந்திரா, மாநகர செயலாளர் பொ. பகுத்தறிவு ஆகியோர் நிகழ்ச்சினை இனியே தொகுத்து  வழங்கினர்.

'விடுதலை விருது' வழங்கும் விழா

தஞ்சாவூர்  புதுக்கோட்டை சாலை காவேரி நகர் சுந்தர் மகாலில் நேற்று (18.5.2018) மாலை விடுதலை வாசகர்கள் திருவிழா, விடுதலை விருது வழங்கும் விழா மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்றது.

விடுதலை விருது வழங்கும் விழா பெரியார் சுய மரியாதைப் பிரச்சார நிறுவனத் துணைத் தலைவர் இராசகிரி கோ.தங்கராசு தலைமையில் நடைபெற்றது. தஞ்சை மாவட் டத் தலைவர் சி.அமர்சிங் வரவேற்றார். ஒன்றியத் தலைவர் இரா.சேகர், ஒன்றிய செயலாளர் செ.ஏகாம்பரம், நகரத் தலைவர் ப.நரேந்திரன், நகர செயலாளர் சு.முருகேசன் முன்னிலை வகித்தார்கள்.

'விடுதலை'யின் காணொலிக் காட்சியை கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தொடக்கிவைத்தார்.

பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப் பாளர் இரா.குணசேகரன், மண்டலத் தலைவர் வெ.செயராமன், மண்டல செயலாளர் மு.அய்யனார், மாவட்டச் செயலாளர், திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினார்கள்.

"விடுதலை'யைத் தொடர்ந்து வாசிக்கும் பெரு மக்களுக்கு 'விடுதலை விருது' வழங்கும் விழா என்பது தனிச் சிறப்பான விழாவாகும். எந்த ஓர் ஏட்டுக்கும் இது போன்ற சிறப்பு விழா - ஏற்பாட்டு விழா நடைபெற்றதில்லை - இது தனித் தன்மையானதாக ஒளிர்ந்தது.

மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். நாகமுத்து, கீர்த்தனா மருத்துவமனை டாக்டர் மா. செல்வராசு மனிதநேயர் எஸ்.எஸ். இராஜ்குமார் ஆகியோருக்கு 'விடுதலை'  ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சால்வை போர்த்தி தொண்டினை போற்றும் வண்ணம் 'விடுதலை விருது' வழங்கி பாராட்டு ரையாற்றினர்.

இந்தப் பெரு மக்களின் சிறப்புகளை எல்.இ.டி. திரை மூலம் காணொலியாக காட்டப்பட்டது.

டாக்டர் பிரியதர்சினி

ஏற்புரை வழங்கிய நீதிபதி நாகமுத்து அவர்களின் சார்பில் விருதினைப் பெற்றுக் கொண்ட அவரின் மகள் டாக்டர் பிரியதர்சினி, ஆசிரியர் பக்கத்தில் அமர்ந்து  இந்த விருதினைப் பெறுவது எங்கள் வாழ்நாளிலேயே மறக்க முடியாதாகும். தலைவர் தந்தை பெரியாரும், விடுதலையும் இடஒதுக்கீட்டுக்காக உழைக்காவிட்டால் என்னைப் போன்ற வர்கள் கண்டிப்பாக டாக்டராக வந்திருக்க முடியாது. சினிமாவே பார்க்காத எங்கள் தந்தையார் நீதிபதி நாகமுத்து அவர்கள் 'பெரியார்' படத்துக்கு மட்டும் எங்கள் குடும் பத்தையே அழைத்துச் சென்று பார்த்ததையும் பசுமையாக நினைவு கூர்ந்து பேசினார்.

டாக்டர் மா. செல்வராஜ்

ஏற்புரை வழங்கிய டாக்டர் மா. செல்வராஜ் அவர்கள் கிராமப் பகுதிகளிலிருந்து வந்துள்ள எங்களைப் போன்ற வர்கள் டாக்டர்களாக வர முடிந்தது என்றால் அதற்கு முக்கிய காரணமே தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி, விடுதலையும் என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.

இப்பொழுது திணிக்கப்பட்டுள்ள 'நீட்' தேர்வு எங்கள் காலத்தில் வந்திருந்தால் நிச்சயமாக நாங்கள் டாக்டர்களாக வந்திருக்கவே முடியாது என்று அழுத்தமாகவே கூறினார்.

இந்த 'நீட்' நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் கிராமப் புறங்களில் நமது இன டாக்டர்களைப் பார்க்க முடியாது. இதற் கொரு முடிவு கட்டப்பட வேண்டும் - மாநில அரசின் உரிமையை பறிப்பது இந்த 'நீட்' என்று அழுத்தமாகப் பதிவு செய்தார்.

மனிதநேயர் எஸ்.எஸ். இராஜ்குமார்

உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலையே! ஆசிரியர் அவர்களே, நாங்கள்தான் உங்களுக்குப் பாராட்டு விழா நடத்த வேண்டும்! ஏனெனில் விடுதலையால் பயன் பெற்றவர்கள் நாங்களே எங்களை நீங்கள் பாராட்டுவது ஓர் உந்து சக்தியை எங்களிடம் தட்டி எழுப்புவதற்கே.

சமுதாய மாற்றத்துக்காகத் தொடங்கப்பட்டது 'விடுதலை' புகழ்ச்சிக்கோ விமர்சனத்துக்கோ மயங்காதவர் தந்தை பெரியார். தி.மு.க. தலைவருக்கும் சரி, தளபதிக்கும் சரி தேவையான நேரத்தில் ஆலோசனைகளை வழங்கும் இடத் தில் இருப்பவர் நமது ஆசிரியர் பெருந்தகையே, சுட்டிக்காட்டி எழுதுவது 'விடுதலை'யே என்று எடுத்துரைத்தார்.

எங்கெல்லாம் நம் இனத்துக்குச் சரிவும், நலிவும் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் எழுந்து நிற்கக் கூடியது - தமிழர் தலைவரும், 'விடுதலை'யுமே என்றும் கூறினார்.

சொல்லில் நாணயம், செயலில் நாணயம் என்பது தந்தை பெரியாருக்கும், ஆசிரியருக்கும், விடுதலைக்கும் உரிய பெருஞ்செல்வம் என்று இயல்பாக எடுத்துக் கூறிய மனித நேயர், நூறாண்டும் கடந்து நாட்டுக்கு நற்பணி ஆற்ற வேண் டும் என்றும் பலத்த கரஒலிக்கிடையே வாழ்த்திப் பேசினார்.

பாராட்டுரை

மேனாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் அவர்கள், தஞ்சை மாவட்டத்தில் நூறு விடுதலை சந்தாக்களுக்கான நிதியைத் தந்து முடிதிருத்தங்களுக்கு வழங்கச் செய்த மாண்பை நன்றியோடு நினைவு கூர்ந்த 'விடுதலை' ஆசிரியர், விருது பெற்ற சான்றோர்களை பாராட்டி சிறப்புரையாற்றினார்.

தஞ்சையை சேர்ந்த சென்னையில் வாழும் பெரியார் பெருந் தொண்டர் தங்கவேலு அவர்கள் கழகத் தலைவருக்கு சால்வைப் போர்த்தி விடுதலை வளர்ச்சிக்கு ரூ.1000 வழங்கினார்.

 

'விடுதலை' காணொலி காட்சியை தொடங்கி வைத்து உரையாற்றினார் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்

 

தஞ்சை 'விடுதலை' வாசகர் திருவிழாவில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் தலைமை உரையாற்றினார் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன். அதிரடி க. அன்பழகன், இரா. பெரியார்செல்வன், பூவை. புலிகேசி, குடியாத்தம் தே.அ. ஓவியா, ப.க. மாநிலத் தலைவர் மா. அழகிரிசாமி பங்கேற்று உரையாற்றினர். (தஞ்சை --18.5.2018)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner