எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாகர்கோவில், மே 19 குமரி மாவட்ட திராவிடர் மாணவர் கழக கலந்துரை யாடல் கூட்டம் நாகர் கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடை பெற்றது. செயலாளர் அ.சவுந்தர பாண்டியன் தலைமை தாங்கினார்.

நெல்லை மண்டல செயலா ளர் கோ.வெற்றிவேந்தன், குமரி மாவட்ட செயலாளர் சி.கிருஷ் ணேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், திராவிடர் கழக செயல்பாடுகள், தந்தை பெரியார் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தொண்டற பணிகள் திராவிடர் மாணவர் எழுச்சி மாநாடு குறித்து விரிவாக சிறப்புரை ஆற்றினார்.

குமரி மாவட்ட கழக அமைப் பாளர் ஞா.பிரான்சிஸ், பகுத்தறி வாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, செய லாளர் பெரி யார் தாஸ், இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னிராசன், விடு தலை வாசகர் வட்ட அமைப்பாளர் இரா.லிங்கேசன், தொழிலாளரணி அமைப் பாளர் ச.ச.கருணாநிதி, நகர கழகத் துணைத் தலைவர் கவிஞர் எச்.செய்க் முகமது, ரமேஷ், இராம சுப்பு, ஷாஜன், பொன்.பாண்டியன், மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து கூறினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) சூலை 8 அன்று குடந் தையில் பெரியார் சுவாசிப்போம், பெரியாரால் பெருவாழ்வு பெருவோம் என்ற தலைப் பில் நடை பெறவுள்ள திராவிடர் மாண வர் கழக மாநில மாநாட்டிற்கு 150 மாணவர்களை பங்கேற்கச் செய்வது எனவும், அந்த மாநாட்டை விளக்கி சுவரெழுத்து, உள்ளூர் தொலைக்காட்சி களில் விளம்பரம் செய்வது எனவும் தலைமைக் கழகம்  கொடுத்துள்ள நன்கொடை இலக்கினை முடிப் பது எனவும் தீர்மானிக்கப்படு கிறது.

2) நீட் தேர்வை ரத்து செய்ய திரா விடர் கழகம் போராடி வரும் நிலையில் தமிழக மாணவர்களை ராஜஸ்தானுக்கும், கேரளாவுக்கும் அனுப்பி துன்பப் படத்தும் மத்திய அரசை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

குமரி மாவட்ட திராவிட மாணவர் கழக புதிய பொறுப்பாளர்கள்

தலைவர்: ஷாஜன், செயலாளர்: பொன்.பாண்டியன், அமைப்பாளர்: பாலாஜி

நெல்லை மாவட்ட திராவிட மாணவர் கழகம்

தலைவர்: மணிகண்டன், செயலா ளர்: கவுசல்யா

நாகர்கோவில் நகர  கழக இளைஞரணி

தலைவர்: மகேஷ், செயலாளர்: இரா.சுப்பிரமணி

அமைப்பாளர்: அபினேசு

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner