எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சாவூர், மே 21 தஞ்சாவூர் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் 13.5.2018 அன்று காலை 11 மணிக்கு பெரியார் இல்லத்தில் நடைபெற்றது.

திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட மாணவர் கழக தலைவர் வே.தமிழ்ச் செல்வம் வரவேற்று உரையாற் றினார். கழகப் பொதுச் செயலாளர் இரா.செயக்குமார் பங்கேற்று மகளிரணி, இளைஞரணி மாநாடுகள் எழுச்சியோடு நடை பெற்றது. அது போன்று மாணவர் கழக மாநில மாநாட்டை சிறப் பாக நடத்த வேண்டும் என சிறப்புரையாற்றினார். திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன்  பகுத்த றிவு பகலவன் தந்தை பெரியாரின் இலட்சியத்தை நிறைவேற்றிட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் தலைமையேற்று களப் பணியாற்ற மாணவர்கள் அணி திரண்டு வருகிறார்கள். அதனை எடுத்துக்காட்டும் வகையில் மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவோம் என உறுதி கூறினார்.

மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் ச.அஜிதன் தனது உணர்ச்சிபூர்வமாக பேச் சால் மாணவர்கள் அணி திரள கேட்டுக் கொண்டார். மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர் சிங் மாநாட்டு நிதியாக தனது பங்காக பத்தாயிரம் வழங்குவதாக அறிவித்து உரையாற்றினார்.

கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன், கழகத் தவைரின் அறிவிப்பின்படி நடைபெற்றுவரும் வேகமான பணிகளை சுட்டிக்காட்டி ஒவ் வொரு மாணவரும் பெரியார் பணி முடிக்க உறுதியேற்க வேண் டும் என தொடக்கவுரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மாநில மகளி ரணி செயலாளர் அ.கலைச் செல்வி, மாநில ப.க. தலைவர் மா.அழகிரிசாமி, மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனி வேல், பொதுக்குழு உறுப்பினர் கை.முகிலன், மாவட்டச் செய லாளர் அ.அருணகிரி, மாவட்ட துணைச் செயலாளர் க.சந்துரு, நெறியாளர் ப.பாலகிருட்டிணன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் ந.காவியன், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் ரெ.மணிகண்டன், நகர கழக செயலாளர் சு.முருகேசன், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக மாணவர் கழக தலைவர் க.சங்கர், துணைத் தலைவர் சு.மாதுகண்ணன், நகர மாணவர் கழக தலைவர் க.இந் திரா, துணைத் தலைவர் விடு தலையரசி, துணைச் செயலாளர் ச.சிந்தனையரசு, இரா.அறிவா ளன், நகர மாணவர் கழக அமைப்பாளர் செ.அன்புவீரமணி, உரத்தநாடு ஒன்றிய மாணவர் கழக அமைப்பாளர் பா.கவிபாரதி, மாவட்ட மாணவர் கழக இணைச்செயலர் ச.சற்கு ணன், உரத்தநாடுசெ.செழியன், பெரியார் மணியம்மை பல் கலைக்கழக மாணவர் கழக ஏ.முல்லை,க.சங்கீதா, லெ.புவனா, மன்னர் சரபோஜி கல்லூரி மாணவர் கழக தலைவர் க.அறி வேந்தி, மருதுபாண்டியர் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் செ.அருள்குமார், பெரியார் நூற் றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் கழக தலைவர் க.விரமணி அமைப்பார் க.ரகு ஆகி யோர் கருத்துரையாற்றினார்கள்.

குடந்தை மாவட்ட இளை ஞரணி தலைவர் பேரா.சிவக் குமார், நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் விசய குமார், மேனாள் தஞ்சை மாவட்ட செயலாளர் த.செகநாதன், உரத்தநாடு ஒன்றிய கழக செய லாளர் அ.உத்திராபதி, துணைச் செயலாளர் நா.பிரபு, அம்மா பேட்டை ஒன்றிய கழக செய லாளர் செ.காத்தையன், திருவை யாறு ஒன்றிய கழக செயலாளர் துரை ஸ்டாலின், உரத்தநாடு நகர செயலாளர் ரெ.இரஞ்சித்குமார், பாரதிதாசன், பல்கலைக்கழக மாணவர் கழக துணைத் தலைவர் கா.கார்த்திகேயன், பி.சதீசு, உரத்த நாடு நகர துணைச் செயலாளர் வழக்குரைஞர் ஆ.மாரிமுத்து, உரத்தநாடு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கதிரவன், மண் டலக்கோட்டை இரா.அரவிந்த், இரா.மோகன்தாசு, உரத்தநாடு ஒன்றிய இளைஞரணி செயலாளர் நா.அன்பரசு, தஞ்சை ஒன்றிய கழக செயலாளர் ஏகாம்பரம், நகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார்செல்வம் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

பூணூல் அறுப்பு வழக்கில் பேருதவி புரிந்த உரத்தநாடு நகர துணைச் செயலாளர் வழக் குரைஞர் மாரிமுத்துவுக்கு சிறப்பு செய்யும் நோக்கில் மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் பயனாடை அணிவித்து பாராட்டினார்.

மாநில மாநாட்டிற்கு

நன்கொடை வழங்கியோர்

அ.கலைச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்) -  ரூ. 2000, பொறியாளர் ப.பாலகிருட்டிணன் (பாலு கன்ஸ்டரக்சன்) -  ரூ. 1000, உ.இனியவன் (உரத்தநாடு ஒன் றிய கழக செயலாளர் (உத்திரா பதி மகன்)- ரூ. 1000,  ஒக்கநாடு மேலையூர் மாணவர் கழகம் சார்பில் பா.கவிபாரதி, கோ.அறிவு - ரூ. 1000, அ.பெரியார் செல்வன் (தஞ்சை நகர இளை ஞரணி துணைத் தலைவர்) - ரூ. 500,

தீர்மானங்கள்

1) சூலை எட்டாம் தேதி கும்பகோணத்தில், பெரியாரை சுவாசிப்போம். பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம் என்ற தலைப்பில் நடைபெறவுள்ள திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டில் அய் நூறு மாணவர்கள் பங்கேற் பது என முடிவு செய்யப்படுகின்றது.

2) மாநில மாநாட்டை விளக்கி, மாவட்டத்தின் பள்ளி கள், கல்லூரிகள், பல்கலைக்கழ கங்கள் முன்பு வாயிற்கூட்டம் நடத்துவது எனவும் விளம்பர தட்டிகள் வைப்பது என தீர்மானிக்கப்படுகிறது.

3) மாநில மாநாடு சிறப்போடு நடைபெற மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள அய்ம்பதாயிரம் நிதியினை திரட்டித்தருவது என முடிவு செய்யப்படுகிறது.

4) தமிழக மக்களின் உரிமை களையும், உணர்வுகளையும் புறந்தள்ளி, நீட்தேர்வு உட்பட கேடுவிளைவிக்கும் மத்திய அரசின் போக்கினை கண்டித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவிக்கும் போராட் டத்தில் மாணவர்கள் அனைவரும் பங்கேற்பது என முடிவு செய்யப் படுகிறது.

5) மே 18ஆம் தேதி தஞ்சையில் நடைபெறும் விடுதலை வாச கர்கள் விழாவிலும் மே 29 ஆம் தேதி பட்டுக்கோட்டையில் நடைபெறும் மண்டல இளை ஞரணி மாநாட்டிலும் மாண வர்கள் அனைவரும் பங்கேற்பது என முடிவு செய்யப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner