எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாகர்கோயில், மே 21- பெரியார் பெருந்தொண்டர், திராவிடர் கழக கன்னியாகுமரி மாவட்ட மேனாள் தலைவர் ப.சங்கர நாராயணன் அவர்கள்  3 ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டம். 16.5.2018 அன்று மாலை 5 மணிக்கு குமரி மாவட்ட திரா விடர் கழகம் சார்பில் நாகர் கோவில் பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. திருநெல்வேலி மண்டல செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தலைமை தாங்கினார்.  நகர துணை தலைவர் கவிஞர் எச். செய்க் முகமது முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞர்அணி மு.சேகர், கழக தோழர்கள் சி. சுப்பிரமணியம், சதீஷ் ஆகி யோர் மறைந்த பெரியார் பெருந் தொண்டரின் பெரியாரியப் பெரும் பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினர்.

பெரியார் பெருந்தொண்ட ரின் மகன், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ச.பழனி சங்கர நாராயணன், மகளிர் பாசறை அமைப்பாளர்  கி.சுதா ஆகியோர் நன்றி கூறினார்கள்.  படத்திற்கு மலர் மாலை அணிவித்து   அவருக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner