எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காஞ்சிபுரம், மே 21- பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் கழக செயல வைத்தலைவர் சு. அறிவுக்கரசு அவர்கள் நடத்தி வைத்த சுயமரியாதைத் திரும ணம் 20.5.2018 ஞாயிறு காலை 10 மணி யளவில் ஓரிக்கை, மிலிடெரிரோட்டில் உள்ள தனலட்சுமி ஜெயா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சென்னை தலைமைச்செயலகத்தில் பணியாற்றும் மு. செந்தில்வேல் தஞ் சையில் துணைவட்டாட்சியராகப் பணியாற்றும் செந்தில்குமார் அவர்க ளின் தங்கை ரா.ராஜேஸ்வரி ஆகியோ ரின் வாழ்க்கை இணை ஏற்பு விழா காஞ்சி மண்டல திராவிடர் கழகத் தலைவர் அரக்கோணம்  பு.எல்லப்பன் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிமண்டல தலைமைக் கழக செயலாளரும் திராவிடர் கழகச் சொற் பொழிவாளருமான  முனைவர் காஞ்சி பா. கதிரவன் அனைவரையும் வரவேற்றார். மேலும், சுயமரியாதைத் திருமணத் தின் சிறப்புகளையும் பார்ப்பனரை வைத்து நடத்தும் திருமணத்தால் ஏற்படும் இழிவுகள் குறித்தும் பெரியார், அண்ணாவின் செயற்பாடுகள் குறித்தும் சுருக்கமாக உரையாற்றினார்.   திராவிட முன்னேற்றக் கழக மாநில மாணவரணிச் செயலாளரும் காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் வழக்குரைஞ ருமான சி.வி.எம்.பி. எழிலரசன் அவர்கள் சுயமரியாதைத் திருமணத்தின் மேன்மையையும் தன்பாட்டனார் செந் தமிழ்ச்செல்வர் சி.வி.எம். அண்ணா மலை அவர்களால் ஏராளமான சுயமரி யாதைத் திருமணங்கள்  நடத்தி வைக் கப்பட்டு, சிறப்பாக வாழ்கிறோம் என் றும் பெரியார், அண்ணா இல்லை என் றால் நமக்கு உரிமைகள் கிடைத்திருக் காது என்றும் திராவிட இயக்கத்தால்தான் நாம் இவ்வளவு சிறப்பாக வாழ்கிறோம் என்றும் சான்றுடன் உரையாற்றினார்.

திராவிடர் கழக செயலவைத்தலைவர் சு. அறிவுக்கரசு அவர்கள் சுயமரியாதைத் திருமண வரலாறு குறித்தும் பெரியாரின் சட்ட நுணுக்கம் குறித்தும் அண்ணாவின் அரும்பணிகள் குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் திருமணம் குறித்தும் பல் வேறு செய்திகளை சுவைபட எடுத்துக் காட்டி உரையாற்றி  வாழ்க்கை இணை ஏற்பு உறுதிமொழியை மணமக்கள் ஏற்கச் செய்து ஒப்பந்தத்தை நடத்தி வைத்தார்.

ஏராளமான உறவினர்களும் நண்பர் களும் குறிப்பாக பெண்களும் குழுமி இருந்து செய்திகளைக் கேட்டறிந்தனர். நல்ல கொள்கைப்பிரச்சார நிகழ்வாக அமைந்தது.

திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப் பினர் கி. இளையவேள், அரக்கோணம் ஜீவன்தாஸ், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் பூ.சுந்தரம், முன்னாள் மாவட்ட செயலாளர் செ.ரா.முகிலன், நகர செயலாளர் ச. வேலாயுதம், மாவட்ட மகளிரணி தமிழ்  (எ) உஷா ,மாவட்ட இளைஞரணி கோவிந்தராஜி, சீத்தவரம் ஆ.மோகன், சுங்குவார்சத்திரம் நட்ராஜ், ராஜா உள்ளிட்ட கழகத்தோழர்களும் திராவிட முன்னேற்றக் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் சி.வி.எம்.அ. சேகரன் உள்ளிட்ட தி.மு.க தோழர்களும் பகுத்தறிவாளர் கழகத் தோழரும் மண விழாக்குடும்பத்து மாப்பிள்ளையுமான வெங்கடேசன், பானுகோபன், மு. மனோகரன், மு.ஜெயவேல், மு.லீலா வதி, மு.லீலாராணி, பெரியார் பிஞ்சு கள் நவீன்குமார், தனசேகர், தயாநிதி, அரிபிரகாஷ் குடும்ப உறவினர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner