எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கருங்கல், மே 23- குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் அன்னை மணியம்மை யார் நினைவு நாள் பொதுக்கூட்டம்  17.03.2018 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு குமரி மாவட்டம் கருங்கல் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது.

பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன் வரவேற்று பேசி னார். கிள்ளியூர் ஒன்றிய தலை வர் தெ. சாம்ராஜ் தலைமை தாங்கினார். தக்கலை ஒன்றிய தலைவர் ராஜீவ் லால், பகுத் தறிவாளர் கழக செயலாளர் பெரியார் தாஸ் ஆகியோர் முன் னிலை வகித்தனர். திருநெல் வேலி மண்டல செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தொடக்க வுரையாற்றினார். திராவிடர் கழக மாநில சொற்பொழிவாளர் தஞ்சை இரா. பெரியார் செல்வன் சிறப் புரை ஆற்றினார். தந்தை பெரி யாரின் தனிச்சிறப்பு, அன்னை மணியம்மையார் நினைவு களை எடுத்துக் கூறினார். திமுக பேரூர் செயலாளர் ஜார்ஜ்,நகர திக அமைப்பாளர் நல்ல பெருமாள், மாவட்ட இளைஞர் அணி தலைவர் த. சுரேஷ், நகர துணைத் தலைவர் கவிஞர் எச். செய்க் முகமது, திமுக ஒன்றிய துணைத் தலை வர் அருள் ராஜ், நிர்வாகி திக் கணங்கோடு மரியதாசன், கம் யூனிஸ்ட் கட்சி (சி.பி..எம்.எல்) மாவட்ட செயலாளர் பால்ராஜ், திராவிடர் கழக தோழர்கள் சந்தோஷ், கலைச் செல்வன், பி.கென்னடி, ஆனந்த், இராம சுப்பிரமணியம் மற்றும் தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர். திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சி. கிருஷ்ணேஸ்வரி நன்றி கூறி னார். கழக சொற்பொழிவாளரின் பேச்சால் ஈர்க்கப்பட்ட மாண வர்  ஜிதின் திராவிடர் கழகத் தில் இணைந்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner