எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, மே 23- புதுச்சேரி உள் ளிட்ட தமிழக பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய இராவண காவிய நூல் பற்றிய 3ஆம் சொற்பொழிவு 13.5.2018 அன்று மாலை 6 மணியளவில் புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு புதுச்சேரி உள் ளிட்ட தமிழக பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் மு.ந. நடராசன் தலைமை தாங்கி னார். புதுச்சேரி மாநில திரா விடர் கழக தலைவர் சிவ.வீர மணி, திராவிடர் கழக பொதுக் குழு உறுப்பினர் விலாசினி இராசு, புதுச்சேரி பகுத்தறிவா ளர் கழக செயலாளர் கைலாச நெ.நடராசன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். புதுச்சேரி மு.ந.நடராசன், சிவ.வீரமணி, விலாசினி இராசு ஆகியோர் உரைக்கு பின் இராவண காவிய தொடர் சொற்பொழிவை எழுத் தாளரும், வெல்லும் தூய தமிழ் இதழாசிரியரும் ஆன முனை வர் க.தமிழ்மல்லன் அவர்கள் இராவணன் யார்? இராவண னின் பிறப்பு இராவணன் தனி தமிழைக்கற்றான். போர் முறையை முறையாக கற்றான். இராவணன் சிவப்பு நிறமுடையவன், முப்பாலை யும் கற்றான், யாழினை கற்று யாழ்பாணாத்தான் ஆனான் என்றும், இராமனுக்கு இந்த சிறப்புகள் ஏதும் கிடையாது என்று இராவணன் தன்னுடைய தாய், தந்தைக்கு தான் பிறந் தான் என்றும் இராமனைபோல் யாக சாலையில் உண்டான பிண் டத்தை தின்று பிறக்கவில்லை என பல்வேறு செய்திகளை மேற்கோள் காட்டி சிறப்பாக தமது ஆய்வுரையை ஆற்றினார். கைலாச நெ.நடராசன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி மண்டல கழக தலைவர் இர. இராசு, மண்டல செயலாளர் கி.அறிவழகன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் இரா.சடகோபன், எழுத்தாளர், கவிஞர் இதழாசிரியர் வீர.மதுரகவி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க தலைவர் தோழர் சங்கரன், சிவ.இள.செங்குட்டுவன், மு.ந.ந.நல்லய்யன், உழவர் கரை நகராட்சி கழக தலைவர் சு.துளசிராமன், புதுச்சேரி நக ராட்சி கழக தலைவர் மு.ஆறு முகம், அமைப்பாளர் மு.குப்பு சாமி, செயலாளர் த.கண்ணன், பெரியார் பெருந்தொண்டர்கள் அ.வீர.சேகரன், காரை பெரி யார் முரசு, களஞ்சியம் வெங்க டேசன், பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கோ.கிருட்டிண ராசு, விஜயா இராமலிங்கம், கல்பனா துளசிராமன், வாண ரப்பேட்டை இரா.ஆதிநாராய ணன், கி.கலியபெருமாள், ஆ. பத்மநாபன், இரா.வெற்றி வேல், உழவர்கரை நகராட்சி கழக அமைப்பாளர் ஆ.சிவரா சன், புதுச்சேரி மேனாள் கழக செயலாளர் சீனு.சந்திரசேகரன், கா.சையத்ஜமீர், எஸ்.வெங்க டேசன், பெருமாள் முரசு, பெரி யார் பிஞ்சுகள் மு.ந.ந.ந.தாம ரைச்செல்வன், ந.கதிர்ச்செல் வன், சுமதி நல்லய்யன், சிறு காம்பூர் லோ.மல்லிகா, செ. தேவி மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர். அனைவ ருக்கும் புதுச்சேரி நடராசன் இராவணன் யார்-? இராமாய ணம் தென்னாட்டில் பரப்பப் பட வேண்டிய காரணமென்ன? சார்லஸ் டார்வின் யார்? எவர்? எனும் தகவல்கள் அடங்கிய துண்டறிக்கைகளை வழங்கினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner