எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, மே 23- திருச்சி பெல் நிறுவனத்தில் கடந்த 38 ஆண்டு களாக பணியாற்றியவரும், திரா விடர் தொழிலாளர் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் செயலாற்றிய பெல்.ம.ஆறு முகம் எழுதிய வர்ணாசிரம காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு நூல் வெளியீட்டு விழா மற்றும் இன்றைய பிரச்சினைக ளும், தீர்வுகளும், பெரியாரிய அம்பேத்காரிய கருத்தரங்கம் பெல் சமுதாயக் கூடத்தில் மே 8 ஆம் தேதி மாலை 6 மணிக்கு  செ.பா.செல்வம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மண்டல செயலாளர் ப.ஆல்பர்ட், மாவட்ட தலைவர் ஞா.ஆரோக் கியராஜ், மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ், பொதுக் குழு உறுப்பினர் மு.சேகர், ஒன் றிய செயலாளர் இரா.தமிழ்ச் சுடர், ஒன்றிய தலைவர் வ. மாரியப்பன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் நூலினை வெளியீட்டு எழுத்தாளர் வே. மதிமாறன் உரையாற்றினார். அவர் பேசும்போது, பெல் நிறுவனத்தில் பல் வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டு இந்துத்துவ, ஜாதிய தீண்டாமையை எதிராக போராடி வருகிற பெல் ஆறு முகம் அவர்கள் எழுதியிருக்க கூடிய இந்த வருணாசிரம காவ லர்களின் தீண்டாமை ஒழிப்பு புத்தகம் வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் அரசியல் சட்டத் திற்கு எதிராக ஒரு கருத்தை சொல்லுகிற ஒரு கட்சி இன் னொரு பக்கத்தில்அவர்கள் கையில் எடுப்பது என்னவென் றால் இந்துத்துவா கருத்துக் களை எளிய மக்களை சேர்த்துக் கொண்டு இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டுமென்று சொல் லுகின்ற ஒரு கட்சி அம்பேத் கரை ஆதரிப்பது எவ்வளவு ஆபத்தானதோ. அதே போன் றுதான் தொழிலாளர் மத்தியில் இந்துத்துவா கருத்துகளை சொல்வதும் பொதுத்துறை நிறுவனம்தான். இந்த சிக்கல் மிக தீவிரமாக பரவியிருக்கிறது. பெல் ம. ஆறுமுகம் அவர்களின் இந்த புத்தகத்தில் பல்வேறு தலைப் புகளில் நிறைய செய்திகளை சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக உணவு முறையில் ஜாதி இருக்கிறது. ஜாதிய அமைப்பு முறையில், ஜாதிய கட்டமைப்பு  இருப்பதால்தான் பி.ஜே.பி.யினர் தலித் வீட்டில் சாப்பிடுகிறோம் என்று சொல் லுகிறார்களே. இதை முற்போக்கு வடிவில் காட்டப்படுகிறது என் றால் எவ்வளவு வெட்கக்கேடு.

பொது திருமண மண்டபங் களில் சைவ உணவைத் தவிர, அசைவ உணவுகளை சமைக்க கூடாது என்று தடையிருக் கிறது. இது அனைத்துமே பார்ப்பனர்களின் மதவெறி தனம்தான். இந்த பெல் நிறுவனத்தில் இந்துத்துவா, ஆர்எஸ்.எஸ் சக் திகளை எதிர்த்து, தந்தை பெரி யார் வழியில் மூடநம்பிக் கையை எதிர்த்தும்,  அவர்க ளுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கும் வகையில் பல் வேறு துண்டறிக்களை வெளி யீட்டு அவர்களுக்கு  அச்சத்தை ஏற்படுத்தி, இந்து மத வெறி தனத்தையும், ஜாதி வெறியை யும் துணிந்து எதிர்க்கின்ற பணியை  ஆறுமுகம் அவர்கள் செய்துவந்தார் என்பது பாராட் டுக்குரியது. பெல் நிறுவனத்தில் இப்படி செய்த ஒரே புரட்சியா ளர் ஆறுமுகம்தான் என்று கூறினார்.

முன்னதாக இந்நூலினை அறிமுகம் செய்து பெரியார் மார்க்சிய வாசகர் வட்ட தோழர் சவு.சந்திரன் விமர்சனம் செய்து உரையாற்றினார். பெல் ஆறுமுகம்  2013 ஆம் ஆண்டு இத்துத்துவா கும் பலின் நச்சு விதைக்கு பதிலடி என்ற நூலினை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் ஆண்டி ராஜ், கிருஷ்ண குமார், சுப்ர மணியன், வி.அசோக்ராஜா, தாமஸ்,பா.வே.சுப்ரமணியன், சங்கிலிமுத்து, விடுதலைகிருஷ் ணன், தமிழக வாழ்வுரிமை கட்சி சரவணன், ஆதித்தமிழர் பேரவை செங்கை குயிலி, ஆறுமுகம், அரசெழியன், வி.சி.வில்வம் மற்றும் திராவி டர் கழகம்,  பெல் தொழிலா ளர்கள் மற்றும் பெரியார், மார்க் சிய வாசகர் வட்ட தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நிறைவாக பெல்.ம.ஆறு முகம் ஏற்புரையாற்றினார். சுதர்சன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner