எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுக்கோட்டை, மே 24 புதுக்கோட்டை மாவட் டம் திருமயம் கடைவீதியில் தந்தை பெரியார் 139-ஆவது பிறந்தநாள் விழா தெரு முனைக் கூட்டம் 22.5.2018 அன்று நடை பெற்றது.

இந்நிகழ்விற்கு திராவிடர் கழக மாவட் டத் துணைத் தலைவர் செ.இராசேந்திரன் தலைமை வகித்தார். ப.க. தோழர் ஆ.க. ஏழுமலை அனைவரையும் வரவேற்றார். மண்டலத் தலைவர் பெ.இராவணன், மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட் டச் செயலாளர் ப.வீரப்பன், மாவட்ட அமைப்பாளர் ஆ.சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ப.க. தலைவர் அ.சரவணன், மாவட்ட ப.க. செய லாளர் இரா.கலையரசன், இரா.மலர் மன்னன், மகளிரணி வீர.வசந்தா ப.க. தோழர்கள் முரளிகிருஷ்ணன், செல்வக்குமார் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் தலைமைக் கழகப் பேச் சாளர் இராம.அன்பழகன் சிறப்புரையாற்று கையில், தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலையில் மத்திய அரசின் ஒற்றையாட்சிப் போக்கு தான்தோன்றித்தனம் மாநில அரசுகளை தன்வயப்படுத்த மக்கள் வாழ்வாதாரங்களான காவிரிப் பிரச்சினை, ஸ்டெர்லைட், நியுட்ரினோ, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், சாகர்மாலா பெட்ரோலி யக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளிலும் துரோகங்கள் செய்து மக்களைப் பலிவாங்கும் போக்குகளைத் தோலுரித்துக் காட்டினார். மேலும் தூத்துக் குடியில் மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுக்கச் சென்ற மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறையைக் கண்டித் தும் உரையாற்றினார்.

மாவட்ட ப.க. துணைச் செயலாளர் ச.சண்முகம் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner