எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சாவூர், மே 26 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர் நிலைப் பல்கலைக்கழகம் சமூகப் பணித்துறை மற்றும் சிறீவிக்டோரியா மதுபோதை மறுவாழ்வு மய்யம் இணைந்து நடத்திய மதுபோதை மறுவாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி கண்டிதம்பட்டில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

சமூகப்பணித்துறை முதலமாண்டு மாணவி பி.தமிழ்த் தென்றல் வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவில் முதல் முறையாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கண்டிதம்பட்டு பஞ்சாயத்து அளவிலான கூட் டமைப்பு செயலாளர், அ.செபஸ்டி அம்மாள் நன்றி தெரிவித்தார். இதனை தொடர்ந்து மது போதையின் வகைகள், மது போதையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சிகிச்சை முறை பற்றி ஆலோசனைகள் ஃபிரீடம் அறக்கட்டளையின் மதுபோதை மற்றும் சிகிச்சை மய்யம் முதன்மை உளவியல் ஆலோசகர் வி.திருவள்ளுவன் அவர்கள் வழங்கினார். மேலும் சிறீ விக்டோரியா மதுபோதை மறுவாழ்வு மய் யத்தின் ஆலோசகர்  வி.தேவி கருத்துரை வழங் கினார்.

இந்நிகழ்ச்சினை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிகர்நிலை பல்கலைக் கழகத்தின் சமூக பணித்துறை தலைவர் முனைவர் அ.ஆனந்த ஜெரார்டு செபாஸ்டின் மற்றும் முதலாம் ஆண்டு மாணவி ப.தமிழ்த் தென்றல் இந்நிகழ்ச்சினை ஒருங்கிணைத்தார்.

இந்நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பயன்பெற்றனர்.


பட்டுக்கோட்டையில் மே 29 திக்கெட்டும் பாய்வோம் திராவிடத்தைக் காப்போம் இளைஞர் எழுச்சி மாநாட்டில் தஞ்சை மண்டல இளைஞரணி சார்பில் வழங்க உள்ள உண்மை சந்தாவுக்கு பாபநாசம் ஒனறியம் சார்பில் சேர்த்த சந்தாத் தொகையை கழகப்பொறுப்பாளர்கள், மண்டல இளைஞரணி செயலாளர் இரா.வெற்றிக்குமாரிடம் அளித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner