எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆவடி, மே 26 உண்மை வாசகர் வட்டத்தில், டி.ஆர்.ஆர். செங் குட்டுவன் நீட் தேர்வின் கேடு களையும், ஏற்கனவே தமிழ்நாடுசுகாதாரத் துறையில் சிறந்து விளங்குவதையும் சுட்டிக்காட்டிப் பேசும் போது, “நாங்கள் இந்தியா வில்தான் இருக்க எண்ணுகிறோம். மீண்டும் எங்களை பிரிவினை யைப் பேசத் தூண்டாதீர்கள்” என்று குறிப்பிட்டார்.

ஆவடி மாவட்டம் பெரியார் மாளிகையில் மாதந்தோறும் நடைபெறும் உண்மை வாசகர் வட்டம்  13-.05.2018 அன்று காலை 11 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில், “நீட் - வடக்கு வாழ, தெற்கு தேயவேண்டுமா?” என்ற தலைப்பில் ம.தி.மு.க. வின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் டி.ஆர்.ஆர். செங் குட்டுவன் பேசினார்.

நிகழ்ச்சியில் உண்மை வாசகர் வட்டத்தின் தலைவர் க.வனிதா தலைமையேற்க, செயலாளர் இ.தமிழ்மணி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். பொருளாளர் கோ.முருகன், புரவலர் பூவை செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்புரையாற்றிய டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் தனது உரையில், இந்திய மருத்துவத் துறையை அய்ரோப்பிய நாடு களோடு ஒப்பிட்டுப்பேசி, மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படை யில் இன்னும் ஏராளமான மருத் துவர்கள் இங்கே தேவைப் படுகின்றனர். அதுவும் வட மாநிலங்களில் சுகாதாரத்துறைக் கான கட்டமைப்பு  மிகவும் மோசமாக இருக்கிறது. ஆண் டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாப்பை தருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், வட மாநிலங்களில் அதற்கான கட்ட மைப்பை உருவாக்கி அதன் மூலம் வேலைவாய்ப்பை பெருக் காமல், ஏற்கனவே சுகாதாரத்துறை யில் இந்திய அளவில் மிகச்சிறந்து விளங்கும் தமிழ்நாட்டின் சுகா தாரத்துறையின் சீரழிவிலும், சமூகநீதியையும் சீரழித்து வரு வதை கடுமையாக சாடினார். தொடர்ந்து அதற்கான ஆதாரங் களையும் வரிசையாக பட்டிய லிட்டு விட்டு, “உங்கள் சூழ்ச்சி எங்களிடம் பலிக்காது. அதனால் நீட் தேர்வை எங்களிடம் நீட் டாமல் வேறு எங்காவது வைத் துக்கொள்ளுங்கள். பிடிவாதமாக எங்கள் மீது நீட்டைத் திணித்து, மீண்டும் எங்களை பிரிவினை யைப் பேசத்தூண்டாதீர்கள்” என்று எச்சரித்து நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியில் ஆவடி மாவட் டத் தலைவர் பா. தென்னரசு, செயலாளர் சிவக்குமார், அமைப் பாளர் உடுமலை வடிவேல், செயலாளர் சிவக்குமார், இளை ஞரணி அமைப்பாளர் கலைமணி, ஜெயந்தி, வஜ்ரவேல், வை. கலை யரசன், சோபன்பாபு, ராதிகா, துணைச்செயலாளர் இளவரசன், இளைஞரணித் தலைவர் கார் வேந்தன், கொரட்டூர் கோபால், அம்பத்தூர் நடராசன், பகுத் தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், மாவட்டத் தலைவர் ராமதுரை, இ.ப.இன நலம், இ.ப.சீர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அடுத்த உண்மை வாசகர் வட்டத்தி லிருந்து அதன் பொருளாளராக சோபன்பாபு  பொறுப்பேற்று செயல்படுவார் என்று அறிவிக் கப்பட்டது. நிறைவாக  உண்மை வாசகர் வட்டத்தின் துணைத் தலைவர் சி.ஜெயந்தி நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner